என் மலர்
நீங்கள் தேடியது "drowned"
- அருள்பாண்டி வாய் பேச இயலாத மாற்றுத்திறனாளி ஆவார்.
- எதிர்பாராதவிதமாக ஆற்றில் தவறி விழுந்தார்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா திருநாவலூர் அருகே உள்ள புத்தநந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் அருள் பாண்டி (வயது 23).இவர் வாய் பேச இயலாத மாற்றுத்திறனாளி ஆவார். இவருக்கு சொந்தமான நிலம் கெடிலம் ஆற்றுப்பகுதியில் உள்ளது. அந்த பகுதியில் விவசாய நிலத்திற்கு சென்று மாடு பிடித்துக் கொண்டிருந்த போது மாடு இழுத்து சென்றதில் அருள்பாண்டி எதிர்பாராதவிதமாக ஆற்றில் தவறி விழுந்தார். அவருக்கு நீச்சல் தெரியாததால் உயிர் பிழைக்க அபயக்குரலிட்டார்.சத்தம் கேட்டு அக்கம் பக்கம் உள்ளவர்கள் ஓடிவந்தனர்.
உடனே அவர்கள் அருள்பாண்டியை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் அவர் தண்ணீரில் மூழ்கி இறந்து போனார். இதுகுறித்து திருநாவலூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன் மற்றும் போலீ சார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அருள் பாண்டி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
- குளிக்கச் சென்ற போது பரிதாபம்
- போலீசார் விசாரணை
வாணியம்பாடி:
வாணியம்பாடி ராமையன்தோப்பு பகுதியில் உள்ள பாலாற் றின் கிளை ஆற்றில், நூருல்லா பேட்டை பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி நூர் (வயது 30) என்பவர் நேற்று முன்தினம் குளிக்கச் சென்றுள்ளார். அப்போது திடீரென ஆழமான பகுதிக்கு சென்றவர் நீரில் மூழ்கி விட்டார். மீண்டும் வெளி யில் வரவில்லை.
இதனை அப்பகுதியில் இருந்தவர்கள் பார்த்து தீயணைப்புதுறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். அதன்பேரில் அங்கு வந்த தீயணைப்புத்துறையினர் மற்றும் பொதுமக்கள் அவரை தேடும் பணியில் ஈடுபட்டனர். நேரம் இருட்டிவிட்டதால் தேடும் பணி கைவிடப்பட்டது.
இந்த நிலையில் 2-வது நாளாக நேற்று காலையில் மீண்டும் தேடுதல் பணி நடந்தது. அப்போது அவர் பிணமாக மீட்கப் பட்டார். பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப் பட்டது. இது குறித்து வாணியம்பாடி டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நூற்றுக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கியது.
- சுமார் 50-க்கும் மேற்பட்டோர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
பாபநாசம்:
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுகாவில் மேஸ்வரபுரம், வீரமாங்குடி, தேவன்குடி ஆகிய கிராமங்களில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பலத்த மழை பெய்தது. இதனால் அப்பகுதியில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கியது.
மேலும், தேவன்குடி அண்ணாமலை நகர் பகுதியில் சுமார் 20 குடிசை வீடுகளில் மழைநீர் புகுந்ததால், சுமார் 50க்கும் மேற்பட்டோர் அங்குள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
சேதமடைந்த நெற்பயிர்கள் மற்றும் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களை ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. நேரில் பார்வையிட்டுஉரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
ஆய்வின்போது, பாபநாசம் தெற்கு ஒன்றிய செயலாளர் நாசர், வீரமாங்குடி ஊராட்சி மன்ற தலைவர் கனகம், சோமேஸ்வரபுரம் சாந்தி கார்த்திக், விவசாய சங்க தலைவர் விக்ரமன் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளும், வேளாண்மை துறை அதிகாரிகளும் உள்ளனர்.
- திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் பரிதாபம்
- போலீசார் விசாரணை
அணைக்கட்டு:
வேலூர் மாவட்டம், சின்ன அணைக்கட்டு பகுதியை சேர்ந்த செல்வம் என்பவரின் மகன் பிரகாஷ் (வயது 48) இவர் சக நண்பர்களுடன் சேர்ந்து ஏரிபுதூர் கிராமத்தில் உள்ள கெங்கையம்மன் கோவில் அருகில் இருக்கும் குளத்தில் மீன் பிடிக்க சென்றார்.
பிரகாஷ் சக நண்பர்களுடன் சேர்ந்து குளத்தில் இறங்கி மீன் பிடித்து கொண்டிருந்தார்.
அப்போது திடீரென அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்ப்பட்டு பிரகாஷ் நீரில் மூழ்க்கி உள்ளே சென்றுள்ளார்.
இதனைப்பார்த்த சக நண்பர்கள் உடனடியாக அவரை மீட்டு பார்த்த போது அவர் இறந்து தெரியவந்தது. இதனையடுத்து அணைக்கட்டு போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டனர்.
தகவலறிந்து விறைந்து வந்த போலீசார் பிரகாஷ் பிணத்தை மீட்டு பிரேதபரிசோதனைக்கு அடுக்கம்பரை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.
- ஏரி அருகே உட்கார்ந்து சாப்பிட்டு கொண்டு இருந்த போது திடீரென மயங்கி கீழே விழுந்தார்.
- எதிர்பாராத வகையில் தவறி விழுந்து நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்து போனார்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அருகே உள்ள நல்லாப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை (வயது 36) ஆவார். இவர் நேற்று முன்தினம் அதே ஊரில் விவசாயக் கூலி வேலைக்கு சென்று இருந்தார். புளியந்தாங்கல் ஏரி அருகே உட்கார்ந்து சாப்பிட்டு கொண்டு இருந்த போது அவர் திடீரென மயங்கி அருகில் இருந்த கிண ற்றில் விழுந்து விட்டார்.
இது குறித்த தகவல் அறிந்த விழுப்புரம் தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து கிணற்றில் விழுந்து இறந்து போன ஏழுமலையின் பிரேதத்தை கைப்பற்றி போலீசாரிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து முண்டி யம்பா க்கத்தில் உள்ள அரசு மருத்து வமனை மருத்துவக் கல்லூரிக்கு ஏழுமலையின் பிரேதம் அனுப்பி வைக்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு பின் உடல் உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது. இது தொடர்பாக இறந்து போன ஏழுமலையின் மனைவி சுசிலா கொடுத்த புகாரின் பேரில் கண்டாச்சிபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கண்டாச்சிபுரம் அருகே உள்ள வீரங்கிபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் இளையராஜா வயது (40). இவர் பெங்களூரில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். இவர் நேற்று காலை அதே ஊரில் உள்ள ஏரிக்கு சென்று இருக்கிறார் அப்போது எதிர்பாராத வகையில் தவறி விழுந்து நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்து போனார். இதுகுறித்து இளையராஜாவின் அண்ணன் செந்தில்குமார் வயது 43 என்பவர் கொடுத்த புகாரின் பேரில் கண்டாச்சிபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மீன் பிடிக்க சென்றபோது விபரீதம்
- போலீசார் விசாரணை
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் அருகே உள்ள செலந்தம்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சிவா (வயது 45). கூலி தொழிலாளி. இவருக்கு திருமணமாகி லதா என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். தொடர்மழை காரணமாக செலந்தம் பள்ளி ஏரி நிறைந்து உபரி நீர் வெளியேறி வருகிறது. ஏரியில் அதிகளவில் மீன்கள் வளர்க்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், நேற்று முன்தினம் ஏரியில் மீன் பிடிக்க சிவா சென்றுள்ளார். அப்போது, திடீரென அவர் ஏரியில் மூழ்கியதாக அங்கிருந்தவர்கள் அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். அதுபற்றி குடும்பத்தினர் திருப்பத்தூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் ஏரிக்கு வந்து சுமார் 2 மணி நேரம் தேடியும் சிவா கிடைக்கவில்லை. இந்த நிலையில் நேற்று அதிகாலை சிவாவின் உடல் ஏரியில் கரை ஒதுங்கியது.
இதுகுறித்து அவரது மனைவி லதா கொடுத்த புகாரின் பேரில் திருப்பத்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மயக்கம் ஏற்பட்டதால் விபரீதம்
- போலீசார் விசாரணை
வாலாஜா:
ராணிப்பேட்டை அடுத்த அம்மூர் சேர்ந்தவர் பாலாஜி (35) இவரது மனைவி சரஸ்வதி இவர்களுக்கு திருமணமாகி 7 ஆண்டுகள் ஆகின்றது.
பாலாஜி வாலாஜா பேட்டையில் அணைக்கட்டு ரோட்டில் உள்ள சிவில் சப்ளை குடோனில் மூட்டை தூக்கும் தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.
நேற்று சக்கரை மூட்டைகளை இறக்கி வைத்துவிட்டு அருகில் இருக்கும் மேம்பாலம் பகுதிக்கு சென்றுள்ளார். அங்குள்ள குட்டை அருகே சென்ற போது திடீரென மயக்கம் ஏற்பட்டதில் அந்த குட்டையில் விழுந்து மூச்சு திணறி இறந்துள்ளார்.
இது குறித்து தகவல் அறிந்த வாலாஜா போலீசார் அங்கு சென்று பார்வையிட்டு பாலாஜி உடலை மீட்டு பிரேத பரிசோ தனைக்காக வாலாஜா அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- விழுப்புரத்தை சேர்ந்தவர்
- போலீசார் விசாரணை
செங்கம்:
விழுப்புரம் பகுதியைச் சேர்ந்த யாசின் என்பவரது மகன் ஹாரிப் (வயது 23).
இவர் தனது உறவினர்களுடன் செங்கம் அடுத்த குட்டூர் பகுதியில் உள்ள நீர்வீழ்ச்சிக்கு குளிக்க சென்றுள்ளார். அப்போது எதிர்பாராமல் நீரில் மூழ்கி உறவினர்களின் கண்முன்னே பரிதாபமாக உயிரிழந்தார்.
உறவினர்களின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் செங்கம் போலீசார் மற்றும் வனத்துறையினருக்கும், தீயணைப்பு மற்றும் மீட்பு படையினருக்கும் தகவல் தெரிவித்தன். அங்கு வந்த தீயணைப்புத்துறையினர் உடலை தேடும் பணியில் ஈடுபட்டனர்.நீண்ட நேரத்துக்கு பின்னர் வாலிபர் உடலை மீட்டனர் செங்கம் போலீசாரிடம் உடலை வனத்துறையினர் ஒப்படைத்தனர்.
மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருக்ன்றனர்.
- சேலம் மாவட்டம் கொங்கணா புரம் எட்டிக்குட்டைமேடு, இலவம்பாளையம் கிராமம் அருகே மது போதையில் ஏரியில் குளித்த தொழிலாளி நீரில் மூழ்கி பலியானார்.
- இது குறித்து தகவல் அறிந்த கொங்கணாபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
சேலம்:
சேலம் மாவட்டம் கொங்கணா புரம் எட்டிக்குட்டைமேடு, இலவம்பாளையம் கிராமம் அருகே உள்ள நரி பள்ளம் பகுதியைச் சேர்ந்தவர் பழனிசாமி (வயது 32 ). விசைத்தறி தொழிலாளியான இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. பழனிசாமி நேற்று தனது நண்பர்களான அதே பகுதியைச் சேர்ந்த தங்கவேல், செல்வம் ஆகியோருடன் சேர்ந்து வெள்ளாளபுரம் அருகே உள்ள செங்காடு ஏரி பகுதியில் குளிக்க சென்றார். அங்கு சென்ற நண்பர்கள் அனைவரும் மது அருந்தியதாக கூறப்படுகிறது.
மது போதையில் இருந்த அவர்கள், செங்காடு, தென்கரை மதகுப்பகுதியில் தண்ணீரில் குதித்து விளையாடிய போது பழனிசாமி தவறுதலாக ஏரியின் ஆழமான பகுதிக்கு சென்று விட்டார். இதில் தண்ணீரில் மூழ்கிய அவர் வெளியே வரவில்லை. இது குறித்து தகவல் அறிந்த கொங்கணாபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மேலும் எடப்பாடி பகுதியில் இருந்து விரைந்து வந்த தீயணைப்பு படை வீரர்கள் ஏரி பகுதியில் பழனிசாமியின் உடலை நவீன கருவிகளைக் கொண்டு தேடினர்.
இதனை தொடர்ந்து அப்பகுதியில் நேற்று இரவு மழை பெய்ததால் தண்ணீரில் மூழ்கிய பழனிசாமியை தேடும் பணி உடலை மீட்கும் பணியில் தோய்வு ஏற்பட்டது. தொடர்ந்து இன்று அதிகாலை முதல் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் அப்பகுதியில் மீண்டும் பழனிசாமியை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு ஆழமான பகுதியில் இருந்து பழனிசாமி உயிரிழந்த நிலையில் அவர் உடல் மீட்கப்பட்டது. அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த கொங்கணாபுரம் போலீசார், அவர் இறப்பு குறித்து அவருடன் வந்த நண்பர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- மதியம் 3 மணி அளவில் ஊருக்கு அருகில் உள்ள அய்யனார் ஆற்றில் குளித்து கொண்டிருந்தார்.
- அவரை பரிேசாதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
திருவாரூர்
திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே மேலகண்டமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் பக்கிரிசாமி. இவரது மகன் சிவா. கூலித்தொழிலாளி.
இவருக்கும், திருத்துறைப்பூண்டி தாலுகா ஓவரூரை சேர்ந்த ரகுபதி மகள் சுகந்திக்கும்(வயது22) கடந்த 23-6-2022 அன்று திருமணம் நடைபெற்றது.
நேற்று மதியம் 3 மணி அளவில் சுகந்தி ஊருக்கு அருகில் உள்ள அய்யனார் ஆற்றில் குளித்து கொண்டு இருந்தார்.
அப்போது திடீரென நிலைதடுமாறி தண்ணீரில் மூழ்கினார்.
இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக சுகந்தியை மீட்டு மன்னார்குடி அரசு தலைமை ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அங்கு அவரை பரிேசாதனை செய்த டாக்டர்கள் சுகந்தி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து கோட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமணமாகி 3 மாதமே ஆன நிலையில் ஆற்றில் மூழ்கி புதுப்பெண் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
- கோவில் எதிரே உள்ள காவிரி ஆற்றில் குளித்து கொண்டு இருந்தார் அப்போது அவர் திடீரென நீரில் மூழ்கினார்.
- ரில் மூழ்கிய பாலசண்முகத்தை மீட்டு உடனடியாக கண பதி பாளையம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
கொடுமுடி:
கோவை மதுக்கரை மார்க்கெட்டு பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (53). இவர் மன்னாதம்பாளை யம் குலவிளக்கு அம்மன் கோவிலில் கிடாய் வெட்டி பொங்கல் வைப்பதற்காக பஸ், கார் மூலம் உறவினர்கள், நண்பர்கள் 150 பேர் வந்தனர்.
இவர்களுடன் இவரது உறவினர் கோவை மதுக்கரை அன்பு நகரை சேர்ந்த பாலசண்முகம் (44) என்பவரும் வந்து இருந்தார்.இவர் கோவில் எதிரே உள்ள காவிரி ஆற்றில் குளித்து கொண்டு இருந்தார் அப்போது அவர் திடீரென நீரில் மூழ்கினார்.
இதை கண்ட அக்கம் பக்கம் இருந்தவர்கள் சத்தம் போட்டு உள்ளார்கள். உடனே மொடக்குறிச்சி தீயனைப்புத் துறைக்கு தகவல் கொடுத்து உள்ளார்கள். சம்பவ இடத்துக்கு தீயணைப்புத் துறை வீரர்கள் விரைந்து வந்தனர்.
அவர்கள் நீரில் மூழ்கிய பாலசண்முகத்தை மீட்டு உடனடியாக கணபதி பாளையம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பால சண்முகத்தை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே பால சண்முகம் இறந்து விட்டதாக கூறினர்.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த மலை யம்பாளையம் போலீசார் பாலசண்முகம் உடலை ஈரோடு அரசு மருத்துவ மனைக்கு பிரேத பரிசோத னைக்காக அனுப்பி வைத்தனர்.
இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அமராவதி ஆற்றுப்பாலத்தில் வேனை நிறுத்தினர்.
- தாராபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தாராபுரம் :
தாளவாடி பகுதிைய சேர்ந்த லிங்கராஜ் மகன் மணிகண்டன் (வயது 24). இவர் கோவையில் உள்ள லேத் பட்டறை ஒன்றில் மெக்கானிக் வேலை செய்து வந்தார். இவர் தனது நண்பர்களுடன் ஒட்டன்சத்திரம் அப்பியம்பாளையம் சென்று விட்டு தாளவாடிக்கு வேனில் வந்து கொண்டிருந்தார். தாராபுரம் வந்ததும் அங்குள்ள அமராவதி ஆற்றுப்பாலத்தில் வேனை நிறுத்தினர்.
பின்னர் மணிகண்டன் உள்பட 3 ேபர் ஆற்றில் இறங்கி குளித்தனர். இதில் தண்ணீரில் மூழ்கி மணிகண்டன் இறந்தார். இது பற்றிய தகவல் அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மணிகண்டன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தாராபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.