நெல்லை தாமிரபரணி ஆற்றில் மூழ்கி சிறுவன் பலி

நெல்லை சந்திப்பு சி.என். கிராமத்தை அடுத்த கருப்பன்துறை இந்திரா நகரை சேர்ந்தவர் நெல்லையப்பன் (வயது 15). நெல்லையப்பனுக்கு வலிப்பு நோய் இருந்துள்ளது.
நெல்லை தாமிரபரணி ஆற்றில் மூழ்கி சிறுவன் பலி
Published on

நெல்லை:

நெல்லை சந்திப்பு சி.என். கிராமத்தை அடுத்த கருப்பன்துறை இந்திரா நகரை சேர்ந்தவர் சூசை மரியான். கூலித்தொழி லாளியான இவரது மகன் நெல்லையப்பன் (வயது 15). இவனுக்கு வலிப்பு நோய் இருந்துள்ளது. இதனால் அவனை பெற்றோர் வெளியே எங்கும் செல்ல அனுமதிக்காமல் வீட்டிலேயே வைத்திருந்தனர்.

இந்நிலையில் சம்பவத்தன்று பெற்றோருக்கு தெரியாமல் நெல்லையப்பன் அருகிலுள்ள தாமிரபரணி ஆற்றிற்கு சென்றுள்ளான். அப்போது திடீரென அவனுக்கு வலிப்பு ஏற்படவே தண்ணீரில் விழுந்து மூழ்கி விட்டான். இதனை அருகில் இருந்தவர்கள் பார்த்து அவனை மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு நெல்லையப்பன் பரிதாபமாக இறந்தான். இதுகுறித்து சந்திப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com