மீன்பிடிக்க சென்றவர் நீரில் மூழ்கி சாவு

திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் பரிதாபம் போலீசார் விசாரணை
மீன்பிடிக்க சென்றவர் நீரில் மூழ்கி சாவு
Published on

அணைக்கட்டு:

வேலூர் மாவட்டம், சின்ன அணைக்கட்டு பகுதியை சேர்ந்த செல்வம் என்பவரின் மகன் பிரகாஷ் (வயது 48) இவர் சக நண்பர்களுடன் சேர்ந்து ஏரிபுதூர் கிராமத்தில் உள்ள கெங்கையம்மன் கோவில் அருகில் இருக்கும் குளத்தில் மீன் பிடிக்க சென்றார்.

பிரகாஷ் சக நண்பர்களுடன் சேர்ந்து குளத்தில் இறங்கி மீன் பிடித்து கொண்டிருந்தார்.

அப்போது திடீரென அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்ப்பட்டு பிரகாஷ் நீரில் மூழ்க்கி உள்ளே சென்றுள்ளார்.

இதனைப்பார்த்த சக நண்பர்கள் உடனடியாக அவரை மீட்டு பார்த்த போது அவர் இறந்து தெரியவந்தது. இதனையடுத்து அணைக்கட்டு போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டனர்.

தகவலறிந்து விறைந்து வந்த போலீசார் பிரகாஷ் பிணத்தை மீட்டு பிரேதபரிசோதனைக்கு அடுக்கம்பரை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com