திருநாவலூர் அருகே ஆற்றில் மூழ்கி மாற்றுத்திறனாளி வாலிபர் பலி

அருள்பாண்டி வாய் பேச இயலாத மாற்றுத்திறனாளி ஆவார்.எதிர்பாராதவிதமாக ஆற்றில் தவறி விழுந்தார்.
அருள்பாண்டி 
அருள்பாண்டி 
Published on

கள்ளக்குறிச்சி: 

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா திருநாவலூர் அருகே உள்ள புத்தநந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் அருள் பாண்டி (வயது 23).இவர் வாய் பேச இயலாத மாற்றுத்திறனாளி ஆவார். இவருக்கு சொந்தமான நிலம் கெடிலம் ஆற்றுப்பகுதியில் உள்ளது. அந்த பகுதியில் விவசாய நிலத்திற்கு சென்று மாடு பிடித்துக் கொண்டிருந்த போது மாடு இழுத்து சென்றதில் அருள்பாண்டி எதிர்பாராதவிதமாக ஆற்றில் தவறி விழுந்தார். அவருக்கு நீச்சல் தெரியாததால் உயிர் பிழைக்க அபயக்குரலிட்டார்.சத்தம் கேட்டு அக்கம் பக்கம் உள்ளவர்கள் ஓடிவந்தனர்.

உடனே அவர்கள் அருள்பாண்டியை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் அவர் தண்ணீரில் மூழ்கி இறந்து போனார். இதுகுறித்து திருநாவலூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன் மற்றும் போலீ சார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அருள் பாண்டி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com