ஆடி அமாவாசையான இன்று திருச்செந்தூர் கடல் 100 அடி உள்வாங்கியது

பச்சை நிற பாசிபடிந்த பாறைகள் வெளியே தெரிந்தது.பக்தர்கள் வழக்கம் போல் கடலில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர்.
ஆடி அமாவாசையான இன்று திருச்செந்தூர் கடல் 100 அடி உள்வாங்கியது
Published on

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரை அருகில் அமைந்துள்ளது. இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் கடலில் புனித நீராடிய பின்னரே சுவாமி தரிசனம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். மேலும் கோவில் கடலானது அமாவாசை, பவுர்ணமி நாட்களில் சில மணி நேரங்கள் உள்வாங்கி காணப்படுவதும், பின்னர் இயல்பு நிலை திரும்புவதும் வழக்கமாக இருந்து வருகிறது.

இன்று அமாவாசை என்பதால் கோவில் கடல் சுமார் 100 அடி உள்வாங்கி காணப்பட்டது. இதனால் பச்சை நிற பாசிபடிந்த பாறைகள் வெளியே தெரிந்தது.

கடல் அலைகள் இன்றி குளம் போல் காட்சியளித்தது. பச்சை நிறத்தில் எழில் மிகு தோற்றத்தில் காட்சியளித்த பாறைகளை பக்தர்கள் கண்டு ரசித்து செல்பி எடுத்து மகிழ்ந்தனர். மேலும் பக்தர்கள் வழக்கம் போல் கடலில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com