வேதாரண்யத்தில் கடல் சீற்றம்: 5000 ஆயிரம் மீனவர்கள் இன்று கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை

நூற்றுக்கணக்கான பைபர் படகுகள் மற்றும் மீன்பிடி வலைகள் கரையோரம் பாதுகாப்பாக வைத்துள்ளனர். மீன்பிடிக்க செல்லாததால் மீனவர்கள் தங்கள் வலைகள் மற்றும் படகுகளை பழுதுபார்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
வேதாரண்யத்தில் கடல் சீற்றம்: 5000 ஆயிரம் மீனவர்கள் இன்று கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை
Published on

வேதாரண்யம்:

நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த ஆறுக்காட்டுதுறை, கோடியக்கரை, புஷ்பவனம், வெள்ளபள்ளம் பகுதிகளில் ஏராளமான மீனவர்கள் கடலுக்கு மீன் பிடித்து சென்று வருவது வழக்கம்.

இந்நிலையில் இன்று கோடியக்கரை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடல் உள்பகுதியில் பலத்த காற்று வீசி வருகிறது. கடல் கடும் சீற்றத்துடன் காணப்படுகிறது. இதன் காரணமாக 5000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் இன்று கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.

நூற்றுக்கணக்கான பைபர் படகுகள் மற்றும் மீன்பிடி வலைகள் கரையோரம் பாதுகாப்பாக வைத்துள்ளனர். மீன்பிடிக்க செல்லாததால் மீனவர்கள் தங்கள் வலைகள் மற்றும் படகுகளை பழுதுபார்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். கடற்கரை பகுதி வெறிச்சோடி காணப்படுகிறது. பலத்த காற்று குறைந்த உடன் மீண்டும் மீன்பிடிக்க செல்வோம் என மீனவர்கள் தெரிவித்தனர். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com