என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "birthday wish"

    • என் அன்பிற்குரிய இளவல் உதயநிதி ஸ்டாலின் நீடு வாழ்க.
    • பொன்றாப் புகழுடனும் குன்றாப் பெருமையோடும் நிலைத்து வளர்க.

    துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று தனது 49-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

    இந்நிலையில், மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் மாநிலங்களவை எம்.பி.யாக கமல்ஹாசன், துணை முதலமைச்சர் உதயநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்," தமிழ்நாடு துணை முதல்வர், எப்போதும் இனியவர், என் அன்பிற்குரிய இளவல் உதயநிதி ஸ்டாலின் நீடு வாழ்க.

    பொன்றாப் புகழுடனும் குன்றாப் பெருமையோடும் நிலைத்து வளர்க" என்று குறிப்பிட்டிருந்தார்.

    மேலும், உதயநிதி ஸ்டாலினின் பிறந்த நாளையொட்டி கமல்ஹாசன் இன்று மாலை நேரில் சென்று வாழ்த்து தெரிவித்துள்ளார். இததுதொடர்பாக உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் புகைப்படங்களுடன் நன்றி தெரிவித்து பதிவு வெளியிட்டுள்ளார்.

    • ஹர்திக் பாண்ட்யாவும் அவரது மனைவியான நட்டாசாவும் பிரிந்து வாழ்கின்றனர்.
    • இன்று அவர்களது மகன் அகஷ்டியா பிறந்த தினம்.

    செர்பியா நாட்டைச் சேர்ந்த நட்டாசாவை இந்திய கிரிக்கெட் வீரரான ஹர்திக் பாண்ட்யா கடந்த நான்கு வருடத்திற்கு முன் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.

    இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக இருவருக்கும் இடையில் கருத்த வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து பெற இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால் இருவரும் அது குறித்து வெளிப்படையாக கருத்து ஏதும் கூறாமல் இருந்தனர்.

    இதனையடுத்து நட்டாசா அவரது சொந்த நாடான செர்பியாவுக்கு சென்றார். அதனை தொடர்ந்து பிரிந்து வாழ்வதற்கு இருவரும் பரஸ்பர முடிவு எடுத்துள்ளதாக ஹர்திக் பாண்ட்யா தனது இன்ஸ்டா பக்கத்தில் தெரிவித்திருந்தார். இதனால் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். குழந்தையை இருவரும் சேர்ந்து பார்த்து கொள்வதாக பாண்ட்யா தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில் அவரது மகன் அகஷ்டியாவுக்கு இன்ஸ்டாகிராமில் வீடியோ மூலம் பிறந்தநாள் வாழ்த்துக்களை ஹர்திக் தெரிவித்துள்ளார். அந்த பதிவில், நீ ஒவ்வொரு நாளும் என்னை தேட வைக்கிறாய். நெருங்கிய நண்பர் குறிக்கும் விதமாக Happy birthday to my partner in crime என கூறியிருந்தார். மேலும் இதயம் முழுவதும், நீயே. வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டு உன்னை நேசிக்கிறேன் என கூறினார்.

    பிரதமர் நரேந்திர மோடிக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.#MKStalin #DMK #HappyBirthDayPM #HappyBdayPMModi
    சென்னை:

    பிரதமர் நரேந்திர மோடி நேற்று தனது 68-வது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து தனது டுவிட்டரில் பதிவிட்டிருந்தார்.



    அதில், “பிரதமர் நரேந்திர மோடிக்கு என்னுடைய பிறந்த நாள் நல்வாழ்த்துகளை தெரிவிப்பதோடு, அவர் நீண்ட ஆயுள் மற்றும் உடல் நலத்துடன் இருக்க வேண்டும் என வாழ்த்துகிறேன்” என்று கூறப்பட்டுள்ளது.  #MKStalin #DMK #HappyBirthDayPM #HappyBdayPMModi
    ×