என் மலர்
கிரிக்கெட் (Cricket)

என் இதயம் முழுவதும் நீதான்- மகனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த ஹர்திக் பாண்ட்யா
- ஹர்திக் பாண்ட்யாவும் அவரது மனைவியான நட்டாசாவும் பிரிந்து வாழ்கின்றனர்.
- இன்று அவர்களது மகன் அகஷ்டியா பிறந்த தினம்.
செர்பியா நாட்டைச் சேர்ந்த நட்டாசாவை இந்திய கிரிக்கெட் வீரரான ஹர்திக் பாண்ட்யா கடந்த நான்கு வருடத்திற்கு முன் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக இருவருக்கும் இடையில் கருத்த வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து பெற இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால் இருவரும் அது குறித்து வெளிப்படையாக கருத்து ஏதும் கூறாமல் இருந்தனர்.
இதனையடுத்து நட்டாசா அவரது சொந்த நாடான செர்பியாவுக்கு சென்றார். அதனை தொடர்ந்து பிரிந்து வாழ்வதற்கு இருவரும் பரஸ்பர முடிவு எடுத்துள்ளதாக ஹர்திக் பாண்ட்யா தனது இன்ஸ்டா பக்கத்தில் தெரிவித்திருந்தார். இதனால் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். குழந்தையை இருவரும் சேர்ந்து பார்த்து கொள்வதாக பாண்ட்யா தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் அவரது மகன் அகஷ்டியாவுக்கு இன்ஸ்டாகிராமில் வீடியோ மூலம் பிறந்தநாள் வாழ்த்துக்களை ஹர்திக் தெரிவித்துள்ளார். அந்த பதிவில், நீ ஒவ்வொரு நாளும் என்னை தேட வைக்கிறாய். நெருங்கிய நண்பர் குறிக்கும் விதமாக Happy birthday to my partner in crime என கூறியிருந்தார். மேலும் இதயம் முழுவதும், நீயே. வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டு உன்னை நேசிக்கிறேன் என கூறினார்.