என் மலர்
நீங்கள் தேடியது "Thiruvavaduthurai Atheenam"
- பண்டித நேருவிடம் தம்பிரான் சுவாமிகள் செங்கோலை வழங்கினார்.
- செங்கோல் நிகழ்வை அரசியல் ஆதாயத்திற்காக பொய், போலி என்கிறார்கள்.
சென்னை:
திருவாவடுதுறை ஆதீனம் அம்பலவாண தேசிக பரமாசார்ய சுவாமிகள் இன்று மாலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
1947-ம் ஆண்டு ஆட்சி மாற்றத்தை அடையாளப்படுத்தும் வகையில் முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேருவிடம் செங்கோல் தரப்பட்டது உண்மை. ராஜாஜியின் அழைப்பை ஏற்று ஆதீனம் சடங்குகள் செய்ததற்கான பதிவுகள் உள்ளது.
பண்டித நேருவிடம் செங்கோலை வழங்கிய தம்பிரான் சுவாமிகள், செங்கோல் என்பது சுய ஆட்சியின் அடையாளம் என்பதை தெளிவாகத் தெரிவித்தார்கள்.
நேருவிடம் செங்கோல் வழங்கப்பட்ட போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஆதீனத்தின் புத்தகத்தில் உள்ளது. 75 ஆண்டுகள் கண்ணாடிப் பெட்டியில் இருந்த செங்கோல் பாராளுமன்றத்தில் வைக்கப்பட உள்ளது.
அரசியல் ஆதாயத்திற்காக சடங்குகள், நிகழ்வுகள்பொய், போலி என கூறுவது வருத்தம் அளிக்கிறது. ஒரு அரசு, நீதி மாறாமல் இருக்க செங்கோல் தரப்படுகிறது என தெரிவித்தார்.