என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜவகர்லால் நேரு"

    • நேரு "ரோஜாவின் ராஜா" என மக்களால் அன்புடன் அழைக்கப்பட்டார்.
    • ஓய்வு நேரத்தை குழந்தைகளுடன் செலவிடுவதை வழக்கமாக கொண்டவர் நேரு.

    இருபதாம் நூற்றாண்டில் இந்தியாவில் தோன்றிய தேசிய தலைவர்களில் முக்கியமானவர், பண்டிட் ஜவகர்லால் நேரு.

    1889ல், இந்தியாவை பிரிட்டிஷார் ஆட்சி செய்த காலகட்டத்தில், உத்தர பிரதேச மாநில பிரயாக்ராஜ் (அப்போதைய அலகாபாத்) பகுதியில், மோதிலால் நேருவிற்கும், ஸ்வரூப் ராணி நேருவிற்கும் மகனாக பிறந்தவர் நேரு.

    இங்கிலாந்தில் சட்டக்கல்வி படித்த நேரு, 1912ல் இந்தியாவிற்கு திரும்பினார். 1916-ல் கமலா கவுல் என்பவரை நேரு மணந்தார். இவர்களின் ஒரே மகள், இந்திரா காந்தி பின்னாளில் இந்திய பிரதமராக பதவி வகித்தார்

    சிறந்த தேசியவாதியான நேரு, இந்திய விடுதலைக்காக போராடினார். இந்து-முஸ்லீம் ஒற்றுமைக்காக பாடுபட்ட அவர், வெள்ளையர்களை நாட்டை விட்டு வெளியேற்றுவதிலும், தேச விடுதலைக்காகவும், இரு மதத்தினரும் ஒன்றுபட்டு போராட வேண்டும் என அழைப்பு விடுத்தார்.

    நாட்டின் விடுதலைக்காக ஒத்துழையாமை இயக்கம் (non-cooperation movement) உட்பட பல போராட்டங்களில் கலந்து கொண்டு சுமார் 8 வருட காலம் (3052 நாட்கள்) சிறை சென்றவர், நேரு.

    நேரு, தனது பதவி காலத்தில் ராணுவம், வெளியுறவுத்துறை, நிதி உள்ளிட்ட முக்கிய துறைகளை கைவசம் வைத்திருந்து திறம்பட கையாண்டவர்.

    "வேற்றுமையில் ஒற்றுமை" (university in diversity) எனும் கோட்பாட்டில் மிகவும் நம்பிக்கை கொண்டிருந்ததாலும், விஞ்ஞானத்தின் மீது தீவிர ஈடுபாடு இருந்ததாலும், வாழ்நாள் முழுவதும் பழமைவாத சித்தாந்தங்களிலிருந்து விலகி இருந்தார்.

    "நவீன இந்தியாவின் சிற்பி" (architect of modern India) என அழைக்கப்பட்ட நேரு, தொழிற்சாலைகளை அமைப்பதில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார். இன்று நாட்டில் பல்வேறு மாநிலங்களில் நிலைத்திருக்கும் பல தொழிற்சாலைகள் நேருவின் முயற்சியால் உருவாக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

    தனது சட்டையில், பொத்தானுக்கு அருகே தினமும் ஒரு ரோஜா மலரை விரும்பி அணிந்து வரும் பழக்கம் கொண்டிருந்ததால், நேரு "ரோஜாவின் ராஜா" என மக்களால் அன்புடன் அழைக்கப்பட்டார்.

    சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராக 1947ல் பதவி ஏற்ற நேரு, தனது பதவிக்காலத்திலேயே,1964 மே 27 அன்று மறைந்தார்.

    குழந்தைகள் நலனை மையமாக வைத்தே ஒரு நாட்டின் திட்டங்கள் தீட்டப்பட வேண்டும் என நம்பிய நேரு, ஓய்வு நேரத்தை குழந்தைகளுடன் செலவிடுவதை வழக்கமாக கொண்டவர். அவரது பிறந்த தினமான நவம்பர் 14, ஒவ்வொரு வருடமும் "தேசிய குழந்தைகள் தினம்" (National Children's Day) என நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.

    முன்னாள் பிரதமர் பண்டித ஜவகர்லால் நேருவின் பிறந்தநாள் நாடு முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது. 

    இந்நிலையில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், முன்னாள் பிரதமர் பண்டித ஜவகர்லால் நேருவின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு அஞ்சலி செலுத்துவதாக தெரிவித்துள்ளார்.

    • 80 சதவீதத்திற்கும் அதிகமான நீரை பாகிஸ்தானிடம் ஒப்படைத்தார்
    • இந்தியாவுக்கு சிறிய கிழக்கு நதிகளே (ரவி, பியாஸ், சட்லஜ்) மிஞ்சின.

    26 பேர் உயிரிழந்த பஹல்காம் பயங்கரவதாக தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தான் உடனான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தான் விசா ரத்து உள்ளிட்டவற்றுடன் இந்திய அரசு எடுத்த மற்றொரு முக்கிய முடிவு சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை தாற்காலிகமாக நிறுத்தி வைப்பதாகும். இதனால் பாகிஸ்தானின் நீராதாரம் பாதிப்புக்கு உள்ளாகும்.

    இந்நிலையில் "1960 ஆம் ஆண்டு ஜவஹர்லால் நேருவால் சிந்து நதி நீர் ஒப்பந்தத்தில் கையெழுத்தானது இந்திய வரலாற்றில் மிகப்பெரிய மூலோபாய தவறுகளில் ஒன்றாகும்" என்று அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா குற்றம் சாட்டியுள்ளார்.

    அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், மேல் நதிக்கரைப் பகுதியில் இந்தியாவுக்கு சாதகமான நிலை இருந்தபோதிலும், அப்போதைய அமெரிக்கா மற்றும் உலக வங்கியின் கடுமையான அழுத்தத்தின் கீழ், நேரு, சிந்து நதிப் படுகையின் 80 சதவீதத்திற்கும் அதிகமான நீரை பாகிஸ்தானிடம் ஒப்படைத்தார்.

    வலிமைமிக்க சிந்து, ஜீலம் மற்றும் செனாப் நதிகளின் மீது முழு கட்டுப்பாட்டையும் பாகிஸ்தானுக்கு வழங்கினார். அதே நேரத்தில் இந்தியாவுக்கு சிறிய கிழக்கு நதிகளே (ரவி, பியாஸ், சட்லஜ்) மிஞ்சின.

    பாகிஸ்தானுக்கு ஆண்டுதோறும் 135 மில்லியன் MAF தண்ணீர் கிடைக்கிறது, அதே நேரத்தில் இந்தியாவிடம் 33 MAF மட்டுமே மீதமுள்ளது.

    மேற்கு நதிகள் மீதான இந்தியாவின் உரிமைகள் சிறு நீர்ப்பாசனம் மற்றும் ஆற்றின் வழியாக ஓடும் நீர் மின் திட்டங்களுக்கு மட்டுமே வரையறுக்கப்பட்டுள்ளன, அவை எந்த அர்த்தமுள்ள சேமிப்பும் இல்லாமல் உள்ளன, இதனால் பஞ்சாப், ஹரியானா மற்றும் ஜம்மு-காஷ்மீரின் நீர் தேவைகள் நிரந்தரமாகச் சமரசம் செய்யப்படுகின்றன" என்று தெரிவித்துள்ளார்.

    மேலும் இந்த ஒப்பந்தம் இப்போது நிறுத்தப்பட்டதற்கு ஹிமாந்த பிஸ்வா சர்மா வரவேற்பு தெரிவித்துள்ளார்.

    "சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இடைநிறுத்துவதற்கான நடவடிக்கை பாகிஸ்தானின் பலவீனமான பொருளாதாரத்தை மேலும் பாதித்துள்ளது. அங்கு 75 சதவீதத்திற்கும் அதிகமான விவசாயம் சிந்து நதி நீரைச் சார்ந்துள்ளது.

    மோடியின் நடவடிக்கைகள், மன்னிப்பு கேட்டு நிற்காமல் தனது நலன்களைப் பாதுகாக்கத் தீர்மானித்த ஒரு புதிய, உறுதியான இந்தியாவின் எழுச்சியைக் குறிக்கின்றன" என்றும் அவர் மேலும் கூறினார். 

    • பண்டித நேருவிடம் தம்பிரான் சுவாமிகள் செங்கோலை வழங்கினார்.
    • செங்கோல் நிகழ்வை அரசியல் ஆதாயத்திற்காக பொய், போலி என்கிறார்கள்.

    சென்னை:

    திருவாவடுதுறை ஆதீனம் அம்பலவாண தேசிக பரமாசார்ய சுவாமிகள் இன்று மாலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    1947-ம் ஆண்டு ஆட்சி மாற்றத்தை அடையாளப்படுத்தும் வகையில் முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேருவிடம் செங்கோல் தரப்பட்டது உண்மை. ராஜாஜியின் அழைப்பை ஏற்று ஆதீனம் சடங்குகள் செய்ததற்கான பதிவுகள் உள்ளது.

    பண்டித நேருவிடம் செங்கோலை வழங்கிய தம்பிரான் சுவாமிகள், செங்கோல் என்பது சுய ஆட்சியின் அடையாளம் என்பதை தெளிவாகத் தெரிவித்தார்கள்.

    நேருவிடம் செங்கோல் வழங்கப்பட்ட போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஆதீனத்தின் புத்தகத்தில் உள்ளது. 75 ஆண்டுகள் கண்ணாடிப் பெட்டியில் இருந்த செங்கோல் பாராளுமன்றத்தில் வைக்கப்பட உள்ளது.

    அரசியல் ஆதாயத்திற்காக சடங்குகள், நிகழ்வுகள்பொய், போலி என கூறுவது வருத்தம் அளிக்கிறது. ஒரு அரசு, நீதி மாறாமல் இருக்க செங்கோல் தரப்படுகிறது என தெரிவித்தார்.

    முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேருவின் நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அஞ்சலி செலுத்தினார்.
    புதுடெல்லி:

    இந்தியாவின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேருவின் 58-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

    இதையொட்டி, டெல்லியில் உள்ள நேருவின் நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இன்று மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    இந்த நிகழ்வில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள், நிர்வாகிகள் பங்கேற்றனர்.


    ×