என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமலாக்கத்துறை குற்றப்பத்திரிக்கை"

    • உண்மை தங்கள் பக்கம் இருப்பதால் சோனியா, ராகுல் காந்தி நிரபராதிகள் என்று அறிவிக்கப்பட்டுள்ளனர்.
    • அரசியல் எதிரிகளைத் துன்புறுத்துவதற்கும், அவதூறு செய்வதற்கும் மட்டுமே இதுபோன்ற வழக்குகள் புனையப்படுகின்றன.

    நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்திக்கு எதிராக அமலாக்கத் துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை, டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் (டிசம்பர் 16) ஏற்க மறுத்து நிராகரித்தது.

    இந்நிலையில் இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 

    "நேஷனல் ஹெரால்டு வழக்கின் மூலம், எதிர்க்கட்சித் தலைவர்களை குறிவைப்பதற்காக, மத்திய முகமைகளை பாஜக அரசு தவறாகப் பயன்படுத்துவதை நீதித்துறை மீண்டும் ஒருமுறை அம்பலப்படுத்தியுள்ளது. எந்தவொரு சட்ட அடிப்படையுமின்றி, அரசியல் எதிரிகளைத் துன்புறுத்துவதற்கும், அவதூறு செய்வதற்கும் மட்டுமே இதுபோன்ற வழக்குகள் புனையப்படுகின்றன. 


    மதச்சார்பின்மை மற்றும் அரசியலமைப்பு விழுமியங்கள் மீது காந்தி குடும்பத்தினர் உறுதியாக நிற்பதை பாஜகவால் பொறுத்துக்கொள்ள முடியாத நிலையில், அவர்களை தொடர்ந்து துன்புறுத்தும் நோக்கில் இருக்கும்போதிலும், உண்மை மற்றும் அச்சமின்மை தங்கள் பக்கம் இருப்பதால், சோனியா காந்தி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர், என் சகோதரர் ராகுல் காந்தி நிரபராதிகள் என நிரூபிக்கப்பட்டுள்ளனர். 

    இந்த பழிவாங்கும் நோக்கம் கொண்ட அணுகுமுறை, முதன்மை புலனாய்வு நிறுவனங்களின் மீதான நம்பகத்தன்மைக்கு களங்கத்தை ஏற்படுத்தி மீண்டும் மீண்டும், அவற்றை அரசியல் மிரட்டலுக்கான கருவிகளாக மட்டுமே மாற்றி வருகிறது." எனக் குறிப்பிட்டுள்ளார். 

    ×