search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திரௌபதி முர்மு"

    • மருத்துவ அரங்கும், மருத்துவக்கல்வியும் அனித்தாக்களுக்கானது. அதை பறிப்பதை தடுக்கும் நீட் ஒழிப்பு மசோதாவுக்கு உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும்.
    • தமிழகத்தின் கனவு அனித்தாக்களின் கல்வி உரிமையை நிலைநாட்டுவதே.

    மதுரை:

    தமிழ்நாடு சட்டமன்றம் நிறைவேற்றிய நீட் விலக்கு மசோதாவுக்கு உள்துறை அமைச்சகத்தை விரைவு செய்து ஒப்புதல் தரக்கோரி குடியரசு தலைவருக்கு மதுரை எம்.பி. வெங்கடேசன் கடிதம் எழுதியிருந்தார். அதற்கு குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு இன்று பதில் அளித்துள்ள அனுப்பிய கடிதத்தை வெங்கடேன் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

    டுவிட்டரில் வெங்கடேசன் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு சட்டமன்றம் நிறைவேற்றிய நீட் ஒழிப்பு மசோதாவுக்கு உள்துறை அமைச்சகத்தை விரைவு செய்து ஒப்புதல் தரக்கோரி குடியரசு தலைவருக்கு கடிதம் எழுதியிருந்தேன்.

    "உள்துறை அமைச்சகத்தின் மேல் நடவடிக்கைக்காக அனுப்பப்பட்டுள்ளதாக" குடியரசு தலைவர் திரௌபதி முர்மு இன்று பதிலளித்துள்ளார்.

    அரியலூர் மருத்துவ கல்லூரி அரங்கத்திற்கு அனிதாவின் பெயர் சூட்டி இன்று தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். மருத்துவ அரங்கும், மருத்துவக்கல்வியும் அனித்தாக்களுக்கானது. அதை பறிப்பதை தடுக்கும் நீட் ஒழிப்பு மசோதாவுக்கு உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும்.

    தமிழகத்தின் கனவு அனித்தாக்களின் கல்வி உரிமையை நிலைநாட்டுவதே.

    இவ்வாறு எம்.பி. வெங்கடேசன் டுவிட்டரில் கூறியுள்ளார்.

    • திருப்பதியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.
    • 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

    திருப்பதி :

    ஜனாதிபதியாக பதவியேற்று திருப்பதி மாவட்டத்துக்கு முதல் முறையாக திரவுபதிமுர்மு நாளை (ஞாயிற்றுக்கிழமை), நாளை மறுநாள் (திங்கட்கிழமை) என 2 நாட்கள் வருகை தந்து சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

    திருப்பதிக்கு வரும் ஜனாதிபதி திரவுபதிமுர்முவுக்கு பாதுகாப்பு அளிப்பது குறித்து அதிகாரிகள் ஆலோசனைக்கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் வெங்கட்ரமணாரெட்டி தலைமை தாங்கி பேசுகையில், ஜனாதிபதி திருப்பதி வருகிறார். அதற்காக ரேணிகுண்டா விமான நிலையத்தில் ஆய்வு செய்து, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தினோம்.

    ஜனாதிபதி விசாகப்பட்டினத்தில் இருந்து இன்று புறப்பட்டு இரவு 8:40 மணிக்கு ரேணிகுண்டா விமான நிலையத்தை அடைகிறார். இரவு 9.25 மணிக்கு ரேணிகுண்டா விமான நிலையத்தில் சிறிது நேரம் ஓய்வெடுக்கிறார். அங்கிருந்து காரில் புறப்பட்டு திருமலையை அடைகிறார்.

    திருமலையில் தங்கி ஓய்வெடுத்ததும் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) காலை 9.25 மணிக்கு வராஹ சுவாமி கோவில், வெங்கடாசலபதி கோவிலில் சாமி தரிசனம் செய்கிறார். பின்னர் அங்கிருந்து காலை 10.50 மணிக்கு புறப்பட்டு திருப்பதியை அடைகிறார்.

    திருப்பதியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். அவருக்கு மாவட்ட நிர்வாகம் பலத்த பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனக் கேட்டு கொண்டார்

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் துணை கலெக்டர் பாலாஜி, போலீஸ் சூப்பிரண்டு பரமேஸ்வர்ரெட்டி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஜனாதிபதி முர்மு இரண்டு நாள் பயணமாக அசாமுக்கு சென்றிருந்தார்.
    • முர்முவுக்கு புதுடெல்லி ராணுவ மருத்துவமனையில் (பரிந்துரை மற்றும் ஆராய்ச்சி) இன்று கண்புரை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

    குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு புதுடெல்லி ராணுவ மருத்துவமனையில் (பரிந்துரை மற்றும் ஆராய்ச்சி) இன்று கண்புரை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

    இதுகுறித்து ராஷ்டிரபதி பவன் கூறுகையில், " அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது. அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்" என்று குறிப்பிட்டது.

    ஜனாதிபதி முர்மு இரண்டு நாள் பயணமாக அசாமுக்கு சென்றிருந்தார். இதன்போது, குவஹாத்தியில் உள்ள சக்திபீட காமாக்யா கோயிலுக்கு முர்மு வழிபாடு செய்தார்.

    • ஒடிசாவில் உள்ள ராய்ராங்பூரில் உள்ள அவரது வீட்டிற்கும் பாதுகாப்புப் படையினர் பாதுகாப்பு வழங்கப்படுகிறது.
    • துணை ராணுவப் படையைச் சேர்ந்த சுமார் 14- 16 பேர் கொண்ட ஒரு பிரிவினர் முர்முவுக்கு பாதுகாப்பு அளிக்கும் பணியை மேற்கொண்டுள்ளனர்.

    பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பிற மூத்த தலைவர்கள் அடங்கிய கட்சியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தைத் தொடர்ந்து நேற்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் ஜார்க்கண்ட் ஆளுநராக பணியாற்றிய ஒடிசாவைச் சேர்ந்த கட்சித் தலைவரான முர்முவின் வேட்புமனுவை பாஜக தலைவர் ஜே.பி.நட்டா அறிவித்தார்.

    இந்த அறிவிப்புக்கு பிறகு, மத்திய உள்துறை அமைச்சகம் ஜனாதிபதி வேட்பாளர் முர்முவின் பாதுகாப்புப் பொறுப்பை ஏற்க அதன் விஜபி பாதுகாப்புக் குழுவை அனுப்புமாறு மத்திய ரிசரவ் போலீஸ் படைக்கு உத்தரவிட்டது.

    இதையடுத்து, ஒடிசாவை தளமாகக் கொண்ட துணை ராணுவப் படையைச் சேர்ந்த சுமார் 14- 16 பேர் கொண்ட ஒரு பிரிவினர் முர்முவுக்கு பாதுகாப்பு அளிக்கும் பணியை மேற்கொண்டுள்ளனர்.

    ஒடிசாவில் உள்ள ராய்ராங்பூரில் உள்ள அவரது வீட்டிற்கும் பாதுகாப்புப் படையினர் பாதுகாப்பு வழங்குகின்றனர். மேலும், நாட்டின் முதல் குடிமகனாக அவர் பொறுப்பேற்கும் வரை கமாண்டோ பாதுகாப்பு அளிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

    • டெல்லியில் பாஜக நாடாளுமன்ற குழு கூட்டம் நடைபெற்றது.
    • பிரதமர் மோடி, மத்திய மந்திரிகள் கூட்டத்தில் பங்கேற்றனர்.

    குடியரசுத் தலைவர் தேர்தல் ஜூலை 18-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூலை 21-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. இந்த தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் யஷ்வந்த் சின்ஹா பொது வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

    இந்நிலையில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளரை தேர்வு செய்வது தொடர்பாக டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவகத்தில் அக்கட்சியின் நாடாளுமன்ற குழு கூட்டம் நடைபெற்றது. பிரதமர் மோடி இந்த கூட்டத்தில் பங்கேற்றார்.

    பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா, மத்திய மந்திரிகள் ராஜ்நாத் சிங், அமித்ஷா, நிதின் கட்காரி  உள்பட பலர் இதில் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தின் முடிவில் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக திரௌபதி முர்முவின் பெயர் தேர்வு செய்யப்பட்டதாக ஜே.பி.நட்டா தெரிவித்தார்.

    முதன்முறையாக பழங்குடியின பெண் வேட்பாளருக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். திரௌபதி முர்மு ஜார்க்கண்ட் மாநில முன்னாள் ஆளுநராக பொறுப்பு வகித்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×