search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "Vice Chancellor"

  • அங்குலம், அங்குலமாக நடத்தப்பட்ட இந்த சோதனையில் கம்ப்யூட்டர்கள் உள்பட முக்கிய ஆவணங்கள் சிக்கி உள்ளன.
  • 100-க்கும் மேற்பட்ட போலீசார் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

  சேலம்:

  சேலம் கருப்பூரில் உள்ள பெரியார் பல்கலைக் கழகத்தில் கடந்த 2021-ம் ஆண்டு ஜுலை மாதம் ஜெகநாதன் (66 ) துணை வேந்தராக பதவி ஏற்றார். அவரது பதவி காலம் ஜுன் 2024 வரை உள்ளது.

  இந்நிலையில் பெரியார் பல்கலைக்கழக தொழிலாளர் சங்க சட்ட ஆலோசகர் இளங்கோ கருப்பூர் போலீசில் ஒரு புகார் கொடுத்தார், அதில், துணை வேந்தர் ஜெகநாதன், பதிவாளர் (பொறுப்பு) தங்கவேல், கணினி அறிவியல் இணை பேராசிரியர் சதீஷ் , திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக பேராசிரியர் ராம்கணேஷ் ஆகியோர் இணைந்து பூட்டர் அறக்கட்டளை என்ற பெயரில் கல்வி நிறுவனமும், அப்டெக்கான் போரம் என மற்றொரு அமைப்பையும் ெதாடங்கி உள்ளனர்.

  இவர்கள் பெரியார் பல்கலைக்கழக பிரதி நிதிகளாக இருந்து கொண்டு அரசு அனுமதியின்றி துணை அமைப்புகளை தொடங்கி இயக்குனர்களாக உள்ளனர். அதனால் ஜெகநாதன், தங்கவேல், சதீஷ், பல்கலைக்கழக சட்டப்பிரிவு 19-ன் படி பொது ஊழியர்களாக கருதப்படு கின்றனர். புதிதாக தொழில் தொடங்க கூடாது அதற்கு பல்கலை மற்றும் தமிழக அரசு அனுமதி பெற வேண்டும், விதி மீறிய இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தார்.

  இது குறித்து சூரமங்கலம் உதவி கமிஷனர் நிலவழகன் தலைமையில் போலீசார் விசாரித்து நேற்று முன்தினம் பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியில் வந்த துணை வேந்தர் ஜெகநாதனை கைது செய்தனர். அவரை சேலத்திற்கு அழைத்து வந்து 6 மணி நேரம் விசாரணை நடத்தினர்.

  பின்னர் கருப்பூர் போலீசார் ஜெகநாதன் உள்பட 4 பேர் மீதும் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியது, சொந்த நிறுவனம் தொடங்கி லாப நோக்கில் செயல்பட்டது, போலி ஆவணங்களை தயாரித்து தனி நிறுவனங்களை தொடங்கி யது உள்பட 8 பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

  பின்னர் இரவு 10 மணியளவில் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் பரிசோதனை செய்யப் பட்டது. அப்போது அவர் நெஞ்சு வலிப்பதாக கூறியதால் இ.சி.ஜி. உள்பட சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து ஜே.எம்.2 மாஜிஸ்திரேட் தினேஷ்குமார் வீட்டில் ஆஜர்படுத்தினர்.

  அப்போது ஒரு வாரத்திற்கு சூரமங்கலம் போலீசில் தினமும் கையெழுத்திட வேண்டும், 8-வது நாளில் நேரில் ஆஜராக வேண்டும் என கூறி மாஜிஸ்திரேட் நிபந்தனை ஜாமீன் வழங்கினார். தொடர்ந்து நேற்று சூரமங்கலம் உதவி கமிஷனர் அலுவலகத்தில் ஜெகநாதன் கையெழுத்திட்டு சென்றார்.

  இதற்கிடையே பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள துணை வேந்தர் அலுவலகம், இல்லம், ஆய்வு மாளிகை விடுதி, பதிவாளர் தங்கவேலு வீடு, அலுவலகம், அவரது கணினி அறிவியல் அலுவலகம், கணினி அறிவியல் உதவி பேராசிரியர் சதீஷின் அலுவலகம் , சூரமங்கலத்தில் உள்ள துணை வேந்தர் வீடு ஆகிய 7 இடங்களில் உதவி கமிஷனர்கள் தலைமையில் 40 பேர் அடங்கிய போலீசார் சோதனையை தொடங்கினர். அங்குலம், அங்குலமாக நடத்தப்பட்ட இந்த சோதனையில் கம்ப்யூட்டர்கள் உள்பட முக்கிய ஆவணங்கள் சிக்கி உள்ளன.

  இதில் துணை வேந்தர் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையின் போது வீட்டில் யாரும் இல்லை. அங்கிருந்த அலுவலக நிர்வாகிகள் மற்றும் பணியாளர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. ஆனால் வீட்டில் இருந்து கட்டு கட்டாக முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது.

  தொடர்ந்து துணை வேந்தர் ஜெகநாதனின் வீட்டிற்கு ஜெராக்ஸ் மற்றும் ஸ்கேன் மிஷின்களை எடுத்து சென்றனர். அங்கு கைப்பற்றிய ஆவணங்களை அந்த எந்திரங்கள் மூலம் நகல் எடுத்து அதனை அட்டை பெட்டிகளில் அடைத்து எடுத்து சென்றனர்.

  துணை வேந்தர் வீடு உள்பட 7 இடங்களிலும் போலீசாரின் சோதனை விடிய, விடிய நடந்தது. 2-வது நாளாக இன்றும் சோதனை நடைபெற்று வருகிறது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவி வருவதால் 100-க்கும் மேற்பட்ட போலீசார் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

  இதற்கிடையே தலைமறைவாக உள்ள பதிவாளர் உள்பட 3 பேரையும் பிடிக்க போலீசார் நடிவடிக்கை எடுத்துள்ளனர். மேலும் துணை வேந்தர் ஜாமீனுக்கு எதிராக புகார்தாரர் இளங்கோ தரப்பிலும், அரசு தரப்பிலும் மேல் முறையீடு செய்யப்படும் என்றும் புகார்தாரர் இளங்கோ கூறி உள்ளார்.

  • மார்க்சிஸ்டு வலியுறுத்தல்
  • இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாநில செயலாளர் ஆனந்த் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

  புதுச்சேரி:

  மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் புதுவை மாநில செயலாளர் ராஜாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

  புதுவை பல்கலைக் கழகத்தில் போலி ரசீது மூலம் ரூ.பல கோடி ஊழல் செய்யப்பட்டுள்ளது.

  ஊழல் சம்பந்தப்பட்ட உண்மைகளை அறிந்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாநில செயலாளர் ஆனந்த் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் சிபிஐ விசாரணைக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இதை வரவேற்கிறோம். பல்வேறு ஊழலில் ஈடுபட்ட பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரை ஜனாதிபதி உடனடியாக பதவியிலிருந்து டிஸ்மிஸ் செய்ய வேண்டும். பல்கலைகழகத்தில் நடைபெற உள்ள ஜனாதிபதி நிகழ்ச்சியில் அவர் பங்கேற்க அனுமதிக்க கூடாது.

  2017 முதல் இதுவரை நடைபெற்ற கட்டுமான பணிகள், புதிய பணி நியமனங்களை முழுமையாக ஆய்வு செய்து சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

  • தென்னை மரத்தில் வெள்ளை ஈ தாக்கம் அதிகம் காணப்படுகிறது.
  • மருந்து தெளிக்கும் போது பூச்சிகள் இறக்கும்.

   உடுமலை :

  பூச்சி மேலாண்மையில் அதிக மருந்துகளை தெளிப்பதால் பூச்சிகளின் அடுத்த தலைமுறை நோய் எதிர்ப்பு சக்தி பெற்று பாதிப்பின் அளவை அதிகரித்து விடுகிறது என வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி தெரிவித்தார்.

  இதுகுறித்து அவர் கூறியதாவது:- சாறு உறிஞ்சும் பூச்சிகளின் தாக்குதல் தற்போது சற்று அதிகம் உள்ளது. உதாரணமாக தென்னை மரத்தில் வெள்ளை ஈ தாக்கம் அதிகம் காணப்படுகிறது. இப்பூச்சி உறிஞ்சுவதால் ஏற்படும் பாதிப்பை காட்டிலும் அதனால், ஏற்படும் அடுத்த கட்ட விளைவால் மகசூல் பாதிப்பு அதிகம் உள்ளது.

  அதாவது வெள்ளை ஈ சாறு உறிஞ்சும் போது தேன் போன்ற ஒரு திரவத்தை சுரக்கிறது. அதை சுற்றி பூஞ்சைகள் உருவாகி கருப்பு நிறத்தில் மாறிவிடுகிறது. இதற்கு விவசாயிகள் பலர் மருந்துகளை அதிகளவில் தெளித்து விடுகின்றனர். முதன்முறை மருந்து தெளிக்கும் போது பூச்சிகள் இறக்கும். அதன் அடுத்தகட்ட தலைமுறை, எதிர்ப்பு சக்தியை உண்டாக்கி விடுவதால் மருந்து பயனின்றி போகும் நிலை உருவாகும். இதனால் பூச்சியை ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை முறை வாயிலாக மட்டுமே கட்டுப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

  பூச்சி மேலாண்மையால் எப்படி கட்டுப்படுத்துவது? முதலில் மஞ்சள் நிறத்தில் எண்ணெய் தடவிய அட்டையை வைத்து பூச்சியை ஈர்க்க வேண்டும். இதன் வாயிலாக பாதியை கட்டுப்படுத்தலாம். பல்கலை தரப்பில் ஒட்டுண்ணி தயாரித்து வழங்கப்படுகிறது. அதை பத்து மரத்திற்கு ஒன்று என மரத்தில் கட்டி தொங்கவிடவேண்டும். ஒருவர் ஒரு நிலத்திற்கு இதை செய்வதால் பூச்சிகளை கட்டுப்படுத்த இயலாது. விவசாயிகள் குழுவாக இணைந்து ஒருங்கிணைந்த மேலாண்மையை பின்பற்ற வேண்டியது அவசியம்.

  வாடல் நோய் தென் மேற்கு மலைப்பகுதிகளில் உள்ள இடங்களில் துவங்கி, வேகமாக பிற தோட்டங்களுக்கும் பரவி வருகிறது. ஆரோக்கியமற்ற மரங்களே முதலில் பாதிக்கப்படுகின்றன. இதற்கு மரங்களை வலுப்படுத்த விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். வேளாண் அதிகாரிகள் தோட்டங்களுக்கு சென்று, செயல்முறை விளக்கம் அளித்து வருகின்றனர். விவசாயிகள் பல்கலையில் அளிக்கும் திறன் மேம்பாடு பயிற்சி, ஒட்டுண்ணி போன்றவற்றை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார் .

  • மாணவிகளுக்கான தட்டச்சுப் பயிற்சி கூடத்தை துணைவேந்தர் சந்திரசேகர் பார்வையிட்டார்.
  • கல்லூரி நிர்வாகம் திறம்பட செயல்படுவதாக கல்லூரி முதல்வரை துணைவேந்தர் பாராட்டினார்.

  சங்கரன்கோவில்:

  நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை கழகத்தின் நேரடி நிர்வாகத்தின் கீழ் சங்கரன்கோவில் மனோ கல்லூரி உட்பட 6 கலை அறிவியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன.

  இப்பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் சந்திரசேகர் சங்கரன்கோவில் நடுவக் குறிச்சியில் அமைந்துள்ள மனோ கல்லூரியில் ஆய்வு மேற்கொண்டார். கல்லூரி முதல்வர் முனைவர் அப்துல் காதிர் வரவேற்றார்.

  கல்லூரியில் உள்ள வகுப்பறைகள், பேராசிரியர்கள் அறை, அலுவலக அறை, கம்ப்யூட்டர் சோதனைக் கூடம், தட்டச்சுப் பயிற்சி கூடம் போன்ற உட்கட்டமைப்பு வசதிக ளையும் தற்போது மாணவ-மாணவிகள் பல்கலைக் கழக செமஸ்டர் தேர்வு எழுதி வரும் அறைகளையும் பார்வையிட்டார்.

  கடந்த சில மாதங்களுக்கு முன் கல்லூரி வளாகத்தில் ராஜா எம்.எல்.ஏ. தொடங்கி வைத்த மாணவிகளுக்கான தட்டச்சுப் பயிற்சி கூடத்தைப் பார்வையிட்ட துணைவேந்தர், பட்டப் படிப்புடன் கூடிய தட்டச்சுப் பயிற்சி மாணவிகளுக்கு தனித் திறமையை வளர்க்கவும், உடனடி வேலை வாய்ப்பைப் பெற்றுத் தரவும் உதவும் என கருத்துத் தெரிவித்தார்.

  கல்லூரி வளாகம் தூய்மையாக உள்ளது எனவும் கல்லூரி நிர்வாகம் திறம்பட செயல்படுகிறது எனவும் கல்லூரி முதல்வரை துணைவேந்தர் பாராட்டினார்.

  ஆய்வின் போது கணினி அறிவியல் துறைத் தலைவர் குருநாதன், வணிகவியல் துறைப் பேராசிரியர் முருகேசன் அலுவலக ஊழி யர்கள் முத்துமாரி மற்றும் சுப்பிரமணி ஆகியோர் உடனிருந்தனர்.

  • ஒப்புதலுக்கு மசோதா அனுப்பப்பட்டிருந்த நிலையில் சில விளக்கங்களை தமிழக ஆளுநர் கேட்டுள்ளார்.
  • துணை வேந்தர்களை அரசே நியமித்தால் அது அரசியல் தலையீட்டுக்கு வழிவகுக்கும்.

  பல்கலைக்கழக துணை வேந்தர்களை அரசே நியமிப்பது பல்கலைக்கழக மானியக்குழு சட்டத்துக்கு புறம்பானது என்று ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

  தமிழக அரசின் மசோதா தொடர்பாக விளக்கம் அளிக்ககோரி தலைமைச் செயலாளருக்கு ஆளுநர் ரவி கடிதம் எழுதியுள்ளார். ஒப்புதலுக்கு மசோதா அனுப்பப்பட்டிருந்த நிலையில் சில விளக்கங்களை தமிழக ஆளுநர் கேட்டுள்ளார்.

  துணை வேந்தர்களை அரசே நியமித்தால் அது அரசியல் தலையீட்டுக்கு வழிவகுக்கும் எனவும் ஆளுநர் ரவி கருத்து தெரிவித்துள்ளார்.

  பல்கலைக்கழக தர நிர்ணயம் மத்திய பட்டியலில் இருப்பதால் புதிய மசோதாக்கல் குறித்து விளக்கம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

  அண்ணா பல்கலைக்கழகம் உள்பட சுமார் 10 பல்கலைக்கழகங்களில் துணை வேந்தரை நியமிக்க மசோதா தாக்கலாகியிருந்தது. சட்டபேரவையில் தாக்கலாகி ஆளுநருக்கு அனுப்பிய மசோதா சுமார் 4 மாதங்களாக நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.


  • 75-வது சுதந்திர தினவிழாவையொட்டி அனைத்து வீடுகளிலும் தேசியக்கொடி ஏற்ற மத்திய அரசு அறிவுறுத்தி வருகிறது.
  • சுதந்திரத்திற்காக பாடுபட்ட தலைவர்களை பற்றி பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகிறது.

  நெல்லை:

  75-வது சுதந்திர தினவிழாவையொட்டி அனைத்து வீடுகளிலும் தேசியக்கொடி ஏற்ற மத்திய அரசு அறிவுறுத்தி வருகிறது.

  மேலும் சுதந்திரத்திற்காக பாடுபட்ட தலைவர்களை பற்றி பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகிறது.

  நெல்லை மனோன் மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் சார்பில் கடந்த 1-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை தினமும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  அதன்படி இன்று விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

  பல்கலைக்கழகம் முன்பு இருந்து தொடங்கிய பேரணியை துணைவேந்தர் பிச்சுமணி தொடங்கி வைத்தார். பேரணியில் ஏராளமான மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். ராணி அண்ணா மகளிர் கல்லூரி வரை சென்ற பேரணி மீண்டும் பல்கலைக்கழகம் வந்தடைந்தது.

  தொடர்ந்து 1800-ம் ஆண்டு முதல் சுதந்திரம் அடைந்த 1947-ம் ஆண்டு வரை சுதந்திரத்திற்காக பாடுபட்ட வெளி உலகிற்கு தெரியாத பல்வேறு தலைவர்களின் புகைப்படங்கள் அடங்கிய கண்காட்சி நடைபெற்றது.

  இதற்காக 93 பேனர்களில் தலைவர்க–ளின் புகைப்படங்கள் ஒட்டப்பட்டிருந்தது. மேலும் தேசப்பற்று குறித்து போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் 19 கல்லூரிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

  இதற்கான ஏற்பாடுகளை பல்கலைக்கழக பேராசிரியர் வெங்கடேஷ் மற்றும் அலுவலர்கள் செய்திருந்தனர்.

  • திருவெண்ணைநல்லூர் பேரூராட்சியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைப்பெற்றது.
  • பள்ளி மாணவ மாணவிகள் பேரூராட்சி அலுவலர்கள் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

  விழுப்புரம்:

  திருவெண்ணைநல்லூர் பேரூராட்சியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. செயல் அலுவலர் ஆனந்தன், பேரூராட்சி துணைத்தலைவர் ஜோதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரணியை பேரூராட்சிமன்ற தலைவர் அஞ்சுகம்கணேசன் தொடங்கி வைத்து பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு துண்டுபிரசுரத்தை பொதுமக்களிடம் வழங்கினார். மக்கும் குப்பைகள் மக்காத குப்பைகள் தரம் பிரித்து மாணவிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் பிளாஸ்டிக் பைகளை தவிர்த்து துணி பைகளை பயன்படுத்த வேண்டும் என்றும் பிளாஸ்டிக்கின் தீமைகள் குறித்தும் துண்டுப்பிரசுரங்கள் வழங்கியும் கையில் பதாகைகளுடன் ஊர்வலமாக சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இதில் பள்ளி மாணவ மாணவிகள் பேரூராட்சி அலுவலர்கள் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

  • காரைக்குடிக்கு வந்த பாண்டித்துரைக்கு காரைக்குடி பா.ஜனதா சார்பில் சூரக்குடியில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
  • கழனிவாசல், பழைய பஸ் நிலையம், செக்காலை ரோடு, தேவர் சிலை, பர்மா காலனி, ஸ்ரீராம் நகர் வழியாக ஊர்வலமாக வேலங்குடிக்கு அழைத்துச் சென்றனர்.

  காரைக்குடி

  சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள வேலங்குடியை சேர்ந்தவர் பாண்டித்துரை.பாரதீய ஜனதா கட்சியின் நிர்வாகியான இவரை தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை, மாநில அமைப்பு பொதுச் செயலாளர் கேசவவிநாயகம் ஆகியோரின் ஒப்புதலோடு மாநில இளைஞரணி தலைவர் ரமேஷ் சிவா, மாநில இலைஞரணி துணைத்தலைவராக அறிவித்தார்.

  இதனை தொடர்ந்து அவர்களிடம் ஆசி பெற்று காரைக்குடிக்கு வந்த பாண்டித்துரைக்கு காரைக்குடி பா.ஜனதா சார்பில் சூரக்குடியில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

  பின்னர் கழனிவாசல், பழைய பஸ் நிலையம், செக்காலை ரோடு, தேவர் சிலை, பர்மா காலனி, ஸ்ரீராம் நகர் வழியாக ஊர்வலமாக வேலங்குடிக்கு அழைத்துச் சென்றனர்.

  இதில் காரைக்குடி நகர தலைவர் பாண்டியன், சிவகங்கை மாவட்ட பொது செயலாளர் நாகராஜன், இளைஞரணி நகர தலைவர் முத்து பாண்டியராஜா, இளைஞரணி மாவட்ட செயலாளர் பழனிச்சாமி, நகர செயலாளர்கள் ராஜாராமன், சுப்பையா, சாக்கோட்டை மேற்கு ஒன்றிய தலைவர் பாண்டிய நாராயணன், ஒன்றிய மகளிரணி தலைவி சீத்தாலெட்சுமி, பொதுச் செயலாளர்கள் பழனிக்குமார், மணிக்குமார், ஒன்றிய பொருளாளர் ஆவுடையப்பன், கோட்டை யூர் பேரூராட்சி கவுன்சிலர் திவ்யா பாண்டித்துரை, கானாடுகாத்தான் கவுன்சிலர் குமார், கோட்டை யூர் சோலை, குமரேசன், ரவீந்திரன், நாகஜோதி, அமைப்பு சாரா அணி மணிகண்டன், காரைக்குடி ஆட்டோ பாலா உள்பட நிர்வாகிகள், தொண்டர்கள், இளைஞர்கள் கலந்து கொண்டனர்.வேலங்குடி கார்த்திகேயன் நன்றி கூறி னார்.

  சத்யபாமா நிகர்நிலை பல்கலைக்கழகத்தின் புதிய வேந்தராக டாக்டர் மரிய ஜீனா ஜான்சன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். #MariazeenaJohnson #SathyabamaUniversity
  சென்னை:

  சத்யபாமா நிகர்நிலை பல்கலைக்கழகத்தின் புதிய வேந்தராக டாக்டர் மரிய ஜீனா ஜான்சன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் சென்னை பல்கலைக்கழகத்தில் பி.எச்.டி. பட்டம் பெற்றுள்ளார்.

  கல்வி மற்றும் சமூக சேவைகளில் முழு ஈடுபாடு கொண்டவர் டாக்டர் மரிய ஜீனா ஜான்சன் . மத்திய பெண்கள் மற்றும் பாதுகாப்பு துறை அமைச்சகத்தால் 2016-ம் ஆண்டு இந்தியாவில் உள்ள சிறந்த 100 பெண்களில் ஒருவராக தேர்வு செய்யப்பட்ட இவருக்கு ஜனாதிபதி விருந்து அளித்து கவுரவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

  சத்யபாமா பல்கலைக்கழகம் தேசிய மதிப்பீடு மற்றும் தர சான்றிதழ் அமைப்பின் (என்.ஏ.ஏ.சி.) சிறந்த பல்கலைக்கழகத்துக்கான ஏ கிரேடு சான்றிதழ் பெற்றுள்ளது. இப்பல்கலைக்கழகம் இந்தியாவில் உள்ள சிறந்த 50 பல்கலைக்கழகங்களில் 37-வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

  புதிய வேந்தராக பதவி ஏற்ற டாக்டர் மரியஜீனா ஜான்சனுக்கு பல்கலைக்கழக தலைவர் மேரி ஜான்சன் வாழ்த்து தெரிவித்தார். #MariazeenaJohnson #SathyabamaUniversity