search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Type Writing training"

    • மாணவிகளுக்கான தட்டச்சுப் பயிற்சி கூடத்தை துணைவேந்தர் சந்திரசேகர் பார்வையிட்டார்.
    • கல்லூரி நிர்வாகம் திறம்பட செயல்படுவதாக கல்லூரி முதல்வரை துணைவேந்தர் பாராட்டினார்.

    சங்கரன்கோவில்:

    நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை கழகத்தின் நேரடி நிர்வாகத்தின் கீழ் சங்கரன்கோவில் மனோ கல்லூரி உட்பட 6 கலை அறிவியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன.

    இப்பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் சந்திரசேகர் சங்கரன்கோவில் நடுவக் குறிச்சியில் அமைந்துள்ள மனோ கல்லூரியில் ஆய்வு மேற்கொண்டார். கல்லூரி முதல்வர் முனைவர் அப்துல் காதிர் வரவேற்றார்.

    கல்லூரியில் உள்ள வகுப்பறைகள், பேராசிரியர்கள் அறை, அலுவலக அறை, கம்ப்யூட்டர் சோதனைக் கூடம், தட்டச்சுப் பயிற்சி கூடம் போன்ற உட்கட்டமைப்பு வசதிக ளையும் தற்போது மாணவ-மாணவிகள் பல்கலைக் கழக செமஸ்டர் தேர்வு எழுதி வரும் அறைகளையும் பார்வையிட்டார்.

    கடந்த சில மாதங்களுக்கு முன் கல்லூரி வளாகத்தில் ராஜா எம்.எல்.ஏ. தொடங்கி வைத்த மாணவிகளுக்கான தட்டச்சுப் பயிற்சி கூடத்தைப் பார்வையிட்ட துணைவேந்தர், பட்டப் படிப்புடன் கூடிய தட்டச்சுப் பயிற்சி மாணவிகளுக்கு தனித் திறமையை வளர்க்கவும், உடனடி வேலை வாய்ப்பைப் பெற்றுத் தரவும் உதவும் என கருத்துத் தெரிவித்தார்.

    கல்லூரி வளாகம் தூய்மையாக உள்ளது எனவும் கல்லூரி நிர்வாகம் திறம்பட செயல்படுகிறது எனவும் கல்லூரி முதல்வரை துணைவேந்தர் பாராட்டினார்.

    ஆய்வின் போது கணினி அறிவியல் துறைத் தலைவர் குருநாதன், வணிகவியல் துறைப் பேராசிரியர் முருகேசன் அலுவலக ஊழி யர்கள் முத்துமாரி மற்றும் சுப்பிரமணி ஆகியோர் உடனிருந்தனர்.

    ×