search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Jallianwala Bagh"

    ஜாலியன் வாலாபாக் படுகொலையில் உயிரிழந்தவர்களின் தியாகத்தை ஒருபோதும் மறக்க முடியாது என ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் நினைவு கூர்ந்துள்ளனர். #JallianwalaBagh #PMModi
    புதுடெல்லி:

    1919–ம் ஆண்டு ஏப்ரல் 13–ந்தேதி பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் நகரில் உள்ள ஜாலியன் வாலாபாக் மைதானத்தில் ஒரு அமைதியான பொதுக்கூட்டம் நடந்தது. இந்தியர்களின் பேச்சுரிமை உள்பட அனைத்து உரிமைகளையும் பறிக்கும் கொடிய ரவுலட் சட்டத்தை எதிர்த்தும், ஏற்கனவே இந்த சட்டத்தை எதிர்த்து போராடியவர்கள் கைது செய்யப்பட்டு, துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதால் பலர் கொல்லப்பட்டது ஆகியவற்றை கண்டித்தும் நடந்த அகிம்சை கூட்டம்தான் அது.

    பிரிகேடியர் ஜெனரல் ரொனால்டு டயர் என்ற வெள்ளைக்காரர் தலைமையில் வந்த ஆங்கிலேய ராணுவ படை, கூடியிருந்தவர்களை கலைந்து செல்லும்படி எச்சரிக்கை விடுக்காமல், பீரங்கியால் சுட்டு வீழ்த்தினர்.  இந்த சம்பவத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கானோர் படுகாயம் அடைந்தனர்.

    இந்த சம்பவம் நிகழ்ந்து 100 ஆண்டுகள் கடந்து விட்டது. இந்த சம்பவத்தின் நூற்றாண்டு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், வீரர்களின் தியாகத்தை நினைவு கூர்ந்து மரியாதை செலுத்தி உள்ளார்.

    “100 ஆண்டுகளுக்கு முன், நமது சுதந்திர போராட்ட தியாகிகள் ஜாலியன் வாலாபாக்கில் உயிர்த்தியாகம் செய்தனர். அது ஒரு கொடூரமான படுகொலை, மனித நாகரிகத்தின் மீது படிந்த ஒரு கறை. அந்த தியாகத் தினத்தை ஒருபோதும் மறக்க முடியாது. உயிர்நீத்த தியாகிகளுக்கு நாம் மரியாதை செலுத்துவோம்” என ஜனாதிபதி தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

    பிரதமர் மோடி தனது டுவிட்டர் பதிவில், “ஜாலியன் வாலாபாக் படுகொலையில் உயிரிழந்தவர்களின் தியாகம் ஒருபோதும் மறக்கப்படாது.  நாட்டின் முன்னேற்றத்துக்கு மேலும் கடுமையாக உழைக்க ஜாலியன் வாலாபாக் நினைவு உத்வேகம் அளிக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.



    ஜாலியன் வாலாபாக் நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் மலரஞ்சலி செலுத்தினர். #JallianwalaBagh #PMModi
    பஞ்சாப்பில் நிகழ்ந்த ஜாலியன்வாலா பாக் படுகொலை இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்து வரலாறின் அவமானமான கரை என பிரிட்டன் பிரதமர் தெரசா மே வருத்தம் தெரிவித்துள்ளார். #JallianwalaBagh #TheresaMay
    லண்டன்:

    இந்தியப் சுதந்திர போராட்டத்தின்போது கடந்த 1919-ம் ஆண்டு ஏப்ரலில் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் ஜாலியன்வாலா பாக்கில் பொதுமக்கள் ஒன்று கூடி அமைதியான வழியில் அறப்போராட்டம் நடத்தினர்.

    அப்போதைய பிரிட்டன் ராணுவ ஜெனரல் டயர் உத்தரவின் பேரில் அப்பாவி பொதுமக்கள் மீது துப்பாக்கி்ச்சூடு நடத்தப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கானோர் இறந்தனர். அப்பாவி பொதுமக்களுக்கு எதிராக இயந்திர துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்ட இந்த சம்பவம் இந்திய சுதந்திர போராட்ட வரலாறில் ஒரு துயரமான நாளாகும். இந்த சம்பவம் நடந்து இன்னும் 3 நாட்களில் 100 ஆண்டுகள் நிறைவடையப் போகிறது.
     
    இந்நிலையில், பிரிட்டன் வாழ் இந்திய எம்.பி. வீரேந்திர சர்மா அந்நாட்டு பாராளுமன்ற மக்கள் சபையில் கடந்த 2017-ம் ஆண்டில் ஒரு தனிநபர் மசோதாவை கொண்டுவந்து விவாதம் நடத்த வேண்டும் என வலியுறுத்தினார்.

    ’1919-ம் ஆண்டு பஞ்சாபில் ஜாலியன்வாலா பாக்கில் நடந்த படுகொலைக்கு பிரிட்டன் அரசு மன்னிப்பு கேட்க வேண்டும். அமைதியுடன் ஒன்று கூடிய அப்பாவி மக்களை கொடூரமாக கொன்று குவித்ததை ஏற்க முடியாது. இதற்கு பிரிட்டன் அரசு முழு பொறுப்பேற்று மன்னிப்பு கேட்க வேண்டும். அத்துயர சம்பவத்தை நினைவு தினமாக அறிவிக்க வேண்டும்’ என தனது தனிநபர் மசோதாவில் அபர் குறிப்பிட்டிருந்தார். அந்த மசோதாவிற்கு மேலும் 5 எம்.பி.,கள் ஆதரவாக கையெழுத்திட்டிருந்தனர்.

    இந்திய சுதந்திர போராட்டத்தில் இரத்தம் தோய்ந்த எழுத்துக்களால் குறிப்பிடப்பட்ட ஒரு சம்பவம் என்றால் அது பஞ்சாப்பில் நடந்த ஜாலியன் வாலாபாக் படுகொலை சம்வம்தான். ஜெனரல் டயர் என்ற ஆங்கிலேய தளபதியின் உத்தரவில் வெடித்த துப்பாக்கிகளுக்கு நூற்றுக்கணக்கான இந்தியர்கள் பலியாகினர்.



    இந்த கோர சம்பவத்தின் 99-வது ஆண்டு நினைவு தினம் 13-4-2018 அன்று அனுசரிக்கப்பட்டபோது, பிரிட்டன் பாராளுமன்றத்தில் இந்திய வம்சாவளி எம்.பி விரேந்தர் சர்மா மீண்டும் கேள்வி எழுப்பினார். “அந்த கோர சம்பவத்தை நினைவு கூறும் கூட்டத்தில் பிரதமர் தெரேசா மே கலந்து கொள்ள வேண்டும்” எனவும் கோரிக்கை விடுத்தார்.
     
    இதற்கு பதிலளித்த பிரதமர் தெரேசா மே, “உறுப்பினர் விரேந்தர் சர்மா எழுப்பிய பிரச்சனை மிகமிக முக்கியமானது. இதனை பரிசீலிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இதற்கு என்னுடைய பதிலை எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்கிறேன்” என்று வாக்குறுதி அளித்திருந்தார்.

    பிரிட்டன் நாட்டின் எதிர்க்கட்சியான தொழிலாளர் (லேபர்) கட்சி சார்பில் எம்.பி.யாக இருக்கும் விரேந்தர் சர்மா பஞ்சாபின் ஜலந்தர் பகுதியை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    வரும் 13-ம் தேதி இந்த கோரப்படுகொலையின் நூற்றாண்டு துக்கநாள் அனுசரிக்கப்படும் நிலையில், இதே பிரச்சனையை மையமாக வைத்து பாராளுமன்ற உறுப்பினர்களின் கேள்விக்கு இன்று பதிலளித்த பிரிட்டன் பிரதமர் தெரசா மே, ஜாலியன்வாலா பாக் படுகொலை இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்து வரலாறின் அவமானகரமானதொரு கரையாகும் என தெரிவித்துள்ளார்.

    ஆனால், ஏற்கனவே வலியுறுத்தப்பட்டது போல் இதற்காக மன்னிப்பு ஏதும் கோராத தெரசா மே, இதுதொடர்பாக பிரிட்டன் நாட்டு அரசு ஏற்கனவே தெரிவித்திருந்த ‘வருத்தத்தை’ நான் மீண்டும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

    ஜாலியன்வாலா பாக் சம்பவத்துக்கும் இதனால் பாதிக்கப்பட்டவர்கள் அடைந்த வேதனைக்கும் நாங்கள் வருந்துகிறோம் என்று மட்டும் குறிப்பிட்டுள்ளார். #JallianwalaBagh #shamefulscar #Indianhistory #BritishIndianhistory #TheresaMay
    ஜாலியன்வாலாபாக் படுகொலைக்கு மன்னிப்பு கோருவதற்கு நூற்றாண்டு நினைவு தினமே உகந்த நேரம் என்று இங்கிலாந்து வெளியுறவு மந்திரி தெரிவித்துள்ளார். #JallianwalaBagh #BritishGovernment
    லண்டன்:

    ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில், 1919-ம் ஆண்டு ஏப்ரல் 13-ந் தேதி, பஞ்சாப் மாநிலம் ஜாலியன்வாலாபாக்கில் நூற்றுக்கணக்கான அப்பாவி இந்தியர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் நடந்து 100 ஆண்டுகள் நிறைவு பெறுவதையொட்டி, இதன் நினைவு தினத்தை அனுசரிப்பதற்காக, இங்கிலாந்தில் ஜாலியன்வாலாபாக் நூற்றாண்டு நினைவு குழு அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த நூற்றாண்டையொட்டி, இங்கிலாந்து அரசு முறையாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பிரதமர் தெரசா மேவுக்கு இந்திய வம்சாவளி எம்.பி.க்கள் 2 பேர் கடிதம் எழுதி உள்ளனர்.

    இந்நிலையில், இந்த படுகொலையின் நூற்றாண்டு நினைவு தினம் என்ற தலைப்பில் இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெற்றது. அதிலும், மன்னிப்பு கோரிக்கை எழுந்தது. இதற்கு பதில் அளித்த இங்கிலாந்து மந்திரி பரோனஸ் அன்னபெல் கோல்டி, மன்னிப்பு கோருவதற்கு நூற்றாண்டு நினைவு தினமே உகந்த நேரம் என்று இங்கிலாந்து வெளியுறவு மந்திரி ஏற்கனவே கூறியிருப்பதை சுட்டிக்காட்டினார். மேலும், நூற்றாண்டு நினைவு தினத்தை கவுரவமான முறையில் அனுசரிக்கப் போவதாகவும் அவர் கூறினார். 
    ×