என் மலர்
இந்தியா

ஜாலியன் வாலாபாக் படுகொலை நினைவு தினம்: பிரதமர், ஜனாதிபதி அஞ்சலி
- ஆனால் ஆங்கிலேய அரசு 379 பேர் பலியாகினர் என தெரிவித்தது.
- உடல், மனம் மற்றும் செல்வதுடன் இந்தியாவின் முன்னேற்றத்திற்கு தொடர்ந்து பங்களிப்பார்கள் என்று நான் நம்புகிறேன்.
ஆங்கிலேயரின் 'ரவுலட்' சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து 1919 ஏப்ரல் 13ல் பஞ்சாபில் ஜாலியன் வாலாபாக் திடலில் பெண்கள், குழந்தைகள் உட்பட ஆயிரக்கணக்கானோர் கூடினர். இந்த திடலில் உள்ளே, வெளியே செல்ல ஒரு குறுகிய வழி மட்டுமே இருந்தது.
போராட்டத்தை கண்டு அஞ்சிய ஆங்கிலேய அரசு, ஜெனரல் டயர் தலைமையில் ஒரு படையை அனுப்பியது. அப்படையினர், மனிதாபிமானமற்ற முறையில் 10 நிமிடம் நடத்திய துப்பாக்கி சூட்டில் ஆயிரக்கணக்கானோர் பலியாகினர். ஆனால் ஆங்கிலேய அரசு 379 பேர் பலியாகினர் என தெரிவித்தது.
இந்நிலையில் இன்று இந்த படுகொலையின் நினைவு தினத்தை ஒட்டி ஜனாதிபதி திரௌபதி முர்மு வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ஜாலியன் வாலாபாக்கில் இந்தியத் தாய்க்காக தங்கள் இன்னுயிரை தியாகம் செய்த அனைத்து சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கும் எனது மரியாதைக்குரிய அஞ்சலியைச் செலுத்துகிறேன்.
அவர்களது தியாகம் நமது சுதந்திரப் போராட்டத்தை மேலும் வலிமையாக்கியது. நன்றியுள்ள இந்தியா எப்போதும் அவர்களுக்கு கடமைப்பட்டிருக்கும். அந்த அழியாத தியாகிகளிடமிருந்து உத்வேகம் பெற்று, அனைத்து நாட்டு மக்களும் தங்கள் உடல், மனம் மற்றும் செல்வத்துடன் இந்தியாவின் முன்னேற்றத்திற்கு தொடர்ந்து பங்களிப்பார்கள் என்று நான் நம்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி தனது எக்ஸ் பதிவில், "ஜாலியன் வாலாபாக்கில் உயிர் நீத்த தியாகிகளுக்கு நாங்கள் அஞ்சலி செலுத்துகிறோம். வருங்கால தலைமுறையினர் அவர்களின் அழியாத மனஉறுதியை எப்போதும் நினைவில் கொள்வார்கள். இது உண்மையில் நமது நாட்டின் வரலாற்றில் ஒரு இருண்ட அத்தியாயம். அவர்களின் தியாகம் இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் ஒரு முக்கிய திருப்புமுனையாக அமைந்தது" என்று தெரிவித்துள்ளார்.






