உங்களுக்கு கன்னடம் தெரியுமா?.. சித்தராமையா கேட்ட கேள்வி - திரௌபதி முர்மு கொடுத்த பளிச் பதில்

மேடையில் அமர்ந்திருந்த முர்முவை பார்த்து, "உங்களுக்கு கன்னடம் தெரியமா?" என வினவினார்.கர்நாடகாவில் உள்ள அனைவரும் கண்டிப்பாக கன்னடம் கற்றுக்கொள்ள வேண்டும் என முதல்வர் சித்தராமையா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
உங்களுக்கு கன்னடம் தெரியுமா?.. சித்தராமையா கேட்ட கேள்வி -   திரௌபதி முர்மு கொடுத்த பளிச் பதில்
Published on

அகில இந்திய பேச்சு மற்றும் கேட்டல் நிறுவனத்தின் (AIISH) வைர விழா நிகழ்வில் கலந்துகொள்ள ஜனாதிபதி திரௌபதி முர்மு நேற்று மைசூரு வந்தார்.

மைசூரு விமான நிலையத்தில் வந்திறங்கிய அவரை கர்நாடக ஆளுநர் தவார்சந்த் கெலாட் மற்றும் முதலைமைச்சர் சித்தராமையா வரவேற்றனர்.

பின்னர் AIISH வைர விழா நிகழ்வில் கலந்துகொண்டு தனது உரையை தொடங்கிய சித்தராமையா, மேடையில் அமர்ந்திருந்த முர்முவை பார்த்து, "உங்களுக்கு கன்னடம் தெரியமா?" என வினவினார்.

தனது உரையின் போது இதற்கு பதிலளித்த முர்மு, " முதல்வர் சித்தராமையாவுக்கு ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். கன்னடம் எனது தாய்மொழி இல்லை என்றாலும், நமது நாட்டின் கலாச்சாரம், பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் அனைத்து மொழிகளையும் நான் மதிக்கிறேன்.

எல்லோரும் தங்கள் மொழியை உயிர்புடன் வைத்திருந்து கலாச்சாரம், பாரம்பரியத்தை காக்க வேண்டும் என விரும்புகிறேன். இதற்கு என்னுடைய வாழ்த்துக்கள். மேலும், கன்னடம் காற்றுக்கொள்ள நான் சிறுக சிறுக இனி முயற்சி செய்வேன் என்பதையும் தெரிவித்துக்கொள்கின்றேன்" என்று கூறினார்.

கர்நாடகாவில் உள்ள அனைவரும் கண்டிப்பாக கன்னடம் கற்றுக்கொள்ள வேண்டும் என முதல்வர் சித்தராமையா தொடர்ந்து வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com