என் மலர்
நீங்கள் தேடியது "ராஷ்டிரபதி பவன்"
- ஜனாதிபதி மாளிகையைச் சுற்றிலும் தோட்டம் அமைக்கப்பட்டுள்ளது.
- முன்பதிவு அடிப்படையில் பொதுமக்கள் மாளிகையைச் சுற்றிப் பார்க்கலாம்.
புதுடெல்லி:
ஜனாதிபதி மாளிகையை சுற்றிலும் தோட்டம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தோட்டத்தில் பல்வேறு வகையிலான மரங்கள், பூச்செடிகள், அழகு தாவரங்கள் வளர்க்கப்பட்டு வருகிறது.
ஜனாதிபதி மாளிகைக்கு வெளியே உள்ள இந்த தோட்டத்தில் வளர்க்கப்படும் செடிகளில் பூக்கள் பூத்துக்குலுங்கும் மிகவும் ரம்மியமான காட்சியை அளிக்கும். இது அமிர்த தோட்டம் என அழைக்கப்படுகிறது.
இந்நிலையில், டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையை நாளை (பிப்ரவரி 3) முதல் மார்ச் 31-ம் தேதி வரை பொதுமக்கள் பார்வையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கான முன்பதிவு அடிப்படையில் பொதுமக்கள் மாளிகையைச் சுற்றிப் பார்க்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, ஜனாதிபதி மாளிகையின் செயலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஜனாதிபதி மாளிகையில் உள்ள அமிர்த தோட்டம் பிப்ரவரி 3 முதல் மார்ச் 31 வரை பொதுமக்களின் பார்வைக்காக திறக்கப்படுகிறது. வாரத்தில் 6 நாட்கள் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை இந்தத் தோட்டத்தைப் பார்வையிடலாம்.
பராமரிப்புப் பணிகளுக்காக ஒவ்வொரு திங்கட்கிழமையும், ஹோலி பண்டிகையை முன்னிட்டு மார்ச் 4-ம் தேதியும் தோட்டம் மூடப்படும்.
தோட்டத்துக்கு அனுமதி இலவசம். https://visit.rashtrapatibhavan.gov.in/ என்ற இணைய தளத்தில் முன்பதிவு செய்யலாம். நேரடியாக வருபவர்களுக்காக நுழைவாயிலுக்கு அருகில் பதிவு மையங்கள் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இருவரும் ஒரே காரில் விமான நிலையத்திலிருந்து கிளம்பினார்.
- பிரதமர் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறப்பு இரவு விருந்தில் புதின் கலந்துக்கொண்டார்.
டெல்லியில் இன்று நடைபெற உள்ள 23வது இந்தியா-ரஷியா உச்சிமாநாட்டில் பங்கேற்க 2 நாள் பயணமாக நேற்று மாலை ரஷிய அதிபர் புதின் இந்தியா வருகை தந்தார். டெல்லியில் வந்திறங்கிய அவரை பிரதமர் மோடி நேரில் சென்று கட்டியணைத்து வரவேற்றார்.
டெல்லி விமான நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட கலாச்சார நிகழ்ச்சியை இருவரும் சிறிது நேரம் பார்த்து, கலைஞர்களை வாழ்த்தினர். பின்னர், இருவரும் ஒரே காரில் விமான நிலையத்திலிருந்து கிளம்பினார். தொடர்ந்து, பிரதமர் மோடி தனது இல்லத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறப்பு இரவு விருந்தில் புதின் கலந்துக்கொண்டார்.
இந்நிலையில், இந்த பயணத்தின் ஒரு பகுதியாக புதினுக்கு ராஷ்டிரபதி பவனில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
அங்கு, ஜனாதிபதி திரவுபதி முர்மு மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் கைகலுக்கு வரவேற்பு அளித்தனர். பின்னர், புதினுக்கு ராஷ்டிரபதி பவனில் அணிவகுப்பு மரியாதை நடைபெற்றது. அதை புதின் ஏற்றுக்கொண்டார்.
அங்கிருந்து புறப்பட்ட புதபின் ஐதராபாத் மாளிகையில் பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார். அங்கு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து ஆகிறது. தொடர்ந்து, மகாத்மா காந்தி நினைவிடத்தில் புதின் அஞ்சலி செலுத்துகிறார்.
பின்னர் நடைபெறும் உச்சிமாநாட்டிற்குப் பிறகு, ஜனாதிபதி திரௌபதி முர்மு வழங்கும் அதிகாரப்பூர்வ இரவு விருந்தில் புதின் பங்கேற்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
நாடாளுமன்ற விவகார துறை மற்றும் வேதி மற்றும் உர துறைக்கான மந்திரி அனந்த குமார் நேற்று உடல்நலக் குறைவால் பெங்களூருவில் காலமானார். அவரது இறுதிச்சடங்கு முழு அரசு மரியாதையுடன் இன்று மாலை நடைபெற்றது.
இந்நிலையில், அனந்த குமார் மறைந்த நிலையில், அவர் வகித்து வந்த பொறுப்புகள் பகிர்ந்து அளிக்கப்பட்டு உள்ளன.

இதுதொடர்பாக, ராஷ்டிரபதி பவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய மந்திரி நரேந்திர சிங் தோமருக்கு நாடாளுமன்ற விவகார துறை அமைச்சகத்தின் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
மேலும், வேதி மற்றும் உரத்துறை அமைச்சகத்தின் கூடுதல் பொறுப்பு சதானந்த கவுடாவுக்கு வழங்கப்பட்டு உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தலின்படி, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார் என தெரிவித்துள்ளது. #NarendraSinghTomar #SadanandaGowda






