என் மலர்tooltip icon

    உலகம்

    சீண்டிய அமெரிக்கா.. இஸ்ரேல் மீது மிஸைல் மழை பொழிந்த ஈரான்.. போர் தீவிரம்
    X

    டெல்அவிவில் ஈரான் ஏவுகணை தாக்கி சேதம் ஏற்படுத்திய இடத்தில் இஸ்ரேலிய பாதுகாப்பு அதிகாரிகள்.

    சீண்டிய அமெரிக்கா.. இஸ்ரேல் மீது மிஸைல் மழை பொழிந்த ஈரான்.. போர் தீவிரம்

    • எரிபொருள் செறிவூட்டல் நிலையமான ஃபோர்டோ மீது அமெரிக்கா "பங்கர்-பஸ்டர்" குண்டுகளைப் பயன்படுத்தியிருந்தது.
    • மூன்று அணுசக்தி தளங்களிலும் கதிர்வீச்சு மாசுபாட்டின் அறிகுறிகள் இல்லை என ஈரான் தெரிவித்துள்ளது.

    ஈரானின் அணுசக்தி தளங்கள் மீது தாக்குதல் நடத்திய சில மணிநேரங்களுக்குப் பிறகு, ஈரான், இஸ்ரேல் மீது ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளது.

    இதனால் டெல் அவிவ், ஹைஃபா உள்ளிட்ட பகுதிகளில் குறைந்தது 11 பேர் காயமடைந்தனர்.

    ஈரானில் இருந்து இஸ்ரேலை நோக்கி 30 ஏவுகணைகள் ஏவப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    ஈரானிய அணுசக்தி எரிபொருள் செறிவூட்டல் நிலையமான ஃபோர்டோ மீது அமெரிக்கா "பங்கர்-பஸ்டர்" குண்டுகளைப் பயன்படுத்தியிருந்தது.

    மேலும், அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல்கள் சுமார் 30 டோமஹாக் ஏவுகணைகளை ஏவியுள்ளன.

    தாக்குதல்களுக்குப் பிறகு கதிர்வீச்சு குறித்த அச்சங்கள் எழுந்தாலும், மூன்று அணுசக்தி தளங்களிலும் கதிர்வீச்சு மாசுபாட்டின் அறிகுறிகள் இல்லை என ஈரான் தெரிவித்துள்ளது.

    இதற்கிடையே ஈரானின் தாக்குதலுக்கு பின் இஸ்ரேல் ராணுவமும் ஈரான் மீது தாக்குதலை முன்னெடுத்துள்ளது.

    Next Story
    ×