search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற அண்ணன்- தங்கை; மருத்துவக்கல்லூரியில் இடம் கிடைத்தது
    X

    மருத்துவ கல்லூரியில் இடம் கிடைத்த ஸ்ரீபரன், சுபஸ்ரீயுடன் அவர்களது பெற்றோர் வீராசாமி, ராணி.

    நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற அண்ணன்- தங்கை; மருத்துவக்கல்லூரியில் இடம் கிடைத்தது

    • தண்டுவடம் பாதிக்கப்பட்டு 2016-ம் ஆண்டு அறுவை சிகிச்சை செய்து வீட்டிலேயே உள்ளார்.
    • சுபஸ்ரீ தஞ்சாவூர் மருத்துவகல்லூரியிலும், ஸ்ரீபரன் கன்னியாகுமாரியில் உள்ள மருத்துவகல்லூரியில் இடம்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுக்கா நெய்விளக்கு வடகாடு பகுதியைச் சேர்ந்தவர் வீராசாமி- ராணி தம்பதிக்கு ஸ்ரீபரன் (வயது 21) என்ற மகனும், சுபஸ்ரீ (18) என்ற மகளும் உள்ளனர்.

    இவர்கள் இருவரும் இந்த ஆண்டு நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று மருத்துவ கல்லூரியில் சேர்ந்து படிக்க உள்ளனர்.

    பத்தாம் வகுப்பு வரை படித்துள்ள வீராசாமி விவசாய கூலி வேலை பார்த்து வந்தார். மூட்டை தூக்கும் தொழில் செய்யும் போது விபத்து ஏற்பட்டு அதில் தண்டுவடம் பாதிக்கப்பட்டு 2016 ஆம் ஆண்டு அறுவை சிகிச்சை செய்து வீட்டிலேயே உள்ளார்.

    இவரது மனைவி ராணி அதன்பிறகு தையல் வேலை செய்து குடும்பத்தை நடத்தி வருகிறார்.

    இந்த ஏழ்மையான சூழ்நிலையில் தன் மகன் மகள்களை மருத்துவராக பார்க்க வேண்டும் என பெற்றோர் கனவு கண்டனர்.

    இதற்காக இரவு பகல் பாராது ராணி தையல் வேளையிலும் ஆடு வளர்ப்பிலும் ஈடுபட்டு தனது பிள்ளைகளை படிக்க வைத்தார்.

    மிகுந்த சிரமங்களுக்கு இடையே ஸ்ரீபரன், சுபஸ்ரீ இருவரும் மருத்துவக் கல்லூரியின் கனவுகளோடு தஞ்சாவூரிலே பயிற்சியில் சேர்ந்து நீட் தேர்வு எழுதி வெற்றி பெற்றனர்.

    இதில் சுபஸ்ரீ தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரியிலும் ஸ்ரீபரன் கன்னியாகுமாரியில் உள்ள மருத்துவ கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது.

    Next Story
    ×