search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வருமுன் காப்போம் மருத்துவ முகாம்
    X

    முகாமில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் தாமரைச்செல்வன் பேசினார்.

    வருமுன் காப்போம் மருத்துவ முகாம்

    • காது, மூக்கு, தொண்டை, சித்த மருத்துவம் உள்ளிட்ட சிறப்பு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டது.
    • சிறப்பு மருத்துவ சேவைகள் குறித்து விழிப்புணர்வு கண்காட்சி நடத்தப்பட்டது.

    கபிஸ்தலம்:

    கபிஸ்தலம் மணி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவதுறை சார்பில் கலைஞரின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் வட்டார மருத்துவ அலுவலர் தீபக் தலைமை நடைபெற்றது.

    முன்னதாக அனைவரையும் ஊராட்சி மன்ற தலைவர் சுமதி குணசேகரன் வரவேற்று பேசினார்.

    ஒன்றிய கவுன்சிலர் சுரேஷ் முன்னிலை வைத்தார்.

    சிறப்பு விருந்தினர்களாக மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினரும், திமுக வடக்கு ஒன்றிய செயலாளருமான தாமரைச்செல்வன், பாபநாசம் ஒன்றிய குழு தலைவர் சுமதி கண்ணதாசன் ஆகியோர் கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி முகாமினை துவக்கி வைத்தனர்.

    முகாமில் பொது மருத்துவம், குழந்தைகளுக்கான மருத்துவம், அயன் முறை மருத்துவம், காது, மூக்கு, தொண்டை, சித்த மருத்துவம், உள்ளிட்ட சிறப்பு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டது.

    முகாமில் மருத்துவ அலுவலர்கள் ஜெகன், அனிதா, அழகு சிலம்பரசி, பாரதி, பிரியங்கா, சித்த மருத்துவர் கனிமொழி, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் பாஸ்கரன், மருத்துவமில்லா மேற்பார்வையாளர் தியாகராஜன், சுகாதார அலுவலர்கள் நாடிமுத்து, செல்லப்பா, சாமிநாதன், உள்பட கபிஸ்தலம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய ஊழியர்கள், கிராம சுகாதார செவிலியர்கள், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    முகாமில் சிறப்பு மருத்துவ சேவைகள் குறித்து விழிப்புணர்வு கண்காட்சி நடத்தப்பட்டது.

    முகாமில் சுமார் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு சிகிச்சை பெற்றனர்.

    10 பேர் மேல் சிகிச்சைக்காக தேர்வு செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டனர்.முடிவில் ஊராட்சி செயலாளர் தமிழ்ச்செல்வன் நன்றி கூறினார்.

    Next Story
    ×