என் மலர்tooltip icon

    பொது மருத்துவம்

    ஆக்சோலோட்ல் (Axolotl)- மருத்துவ உலகின் அதிசயம்
    X

    ஆக்சோலோட்ல் (Axolotl)- மருத்துவ உலகின் அதிசயம்

    • வாழ்நாள் முழுவதும் தண்ணீரிலேயே இளமைப் பருவத் தோற்றத்துடன்.
    • ஆக்சோலோட்ல்களுக்கு புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு மற்ற உயிரினங்களை விட 1000 மடங்கு குறைவு.

    இயற்கை அன்னை படைத்துள்ள சில விசித்திரமான மற்றும் வியக்கத்தக்க விலங்குகள் இந்த உலகில் வாழ்கின்றன. ஒவ்வொரு விலங்குகளும் தப்பிப்பிழைப்பதற்காகத் தங்களுக்குள் தனித்துவமான திறன்களைக் கொண்டுள்ளன.

    இதில், ஆக்சோலோட்ல் (Axolotl) எனப்படும் ஒரு தனித்துவமான நீர்வாழ் உயிரி குறித்து இங்கு பார்க்கலாம்.

    ஆக்சோலோட்ல் (Axolotl) எனப்படும் இது மெக்சிகோவில் காணப்படும் ஒரு வகை நீர்வாழ் உயிரி (Salamander). ஆக்சோலோட்ல் என்றால் என்றும் இளமை என்று அர்த்தமாம். இந்த உயிரிக்கு 'மீளுருவாக்கம்' (Regeneration) செய்யும் அதீத ஆற்றல் உண்டு. தனது கை, கால், வால் மட்டுமல்லாமல், இதயம் மற்றும் மூளையின் சில பகுதிகள் சேதமடைந்தால் கூட அதனை மீண்டும் வளர்த்துக்கொள்ளும் திறன் கொண்டது.

    இது உருமாற்றம் அடைந்து நிலத்திற்கு வராமல், வாழ்நாள் முழுவதும் தண்ணீரிலேயே இளமைப் பருவத் தோற்றத்துடன் (Neoteny) வாழ்கிறது.

    ஆக்சோலோட்ல்களுக்கு புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு மற்ற உயிரினங்களை விட 1000 மடங்கு குறைவு. இவற்றின் செல்கள் சேதமடைந்தால், அவை புற்றுநோயாக மாறாமல், மீண்டும் புதிய உறுப்புகளாக வளரும் தன்மையைக் கொண்டுள்ளன.

    ஒரு ஆக்சோலோட்லின் உடல் உறுப்பை மற்றொன்றுக்கு மாற்றினால், அது எந்தவிதமான பாதிப்பும் இல்லாமல் உடனடியாக ஏற்றுக் கொள்ளப்படும்.

    செதில்கள் (Gills) மூலம், நுரையீரல் மூலம் மற்றும் தோல் வழியாக என இவற்றுக்கு மூன்று விதமான சுவாச முறைகள் உள்ளன.

    மனிதர்களுக்குக் காயம் ஏற்பட்டால், அந்த இடத்தில் தழும்பு (Scar) உண்டாகும். ஆனால், ஆக்சோலோட்ல்களுக்கு எவ்வளவு பெரிய காயம் ஏற்பட்டாலும், அந்த இடம் பழையபடி தழும்பே இல்லாமல் முழுமையாகக் குணமாகும்.

    அதனால, அறுவை சிகிச்சைக்குப் பிறகு மனித உடலில் தழும்புகள் ஏற்படாமல் காயங்களை எப்படிக் குணப்படுத்துவது என்பதை ஆராய இவை உதவுகின்றன.

    இதனால் தான், ஆக்சோலோட்ல் (Axolotl) மருத்துவ உலகின் அதிசயம் என்று கூறப்படுகிறது.

    Next Story
    ×