அரசுப் பள்ளிகளுக்கும் இரும்பிலான விளையாட்டு உபகரணங்கள் வழங்க வேண்டும்

நிரந்தர உபகரணமான சார்பும், டிஸ்கஸ் இரும்பினால் இல்லாமல் கார்பன் கலந்து ரப்பரால் இருக்கிறது.கால்பந்து போஸ்ட் ரிலே பேட்டர்சன், ஈட்டி ஏறிதல் போன்றவை பிளாஸ்டிக் உபகரணமாக உள்ளது.
அரசு பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட பிளாஸ்டிக்களான விளையாட்டு உபகரணங்கள்.
அரசு பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட பிளாஸ்டிக்களான விளையாட்டு உபகரணங்கள்.
Published on

தஞ்சாவூர்:

தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி இயக்குனர்கள் சங்கம் மாநில பொருளாளர் கரு. தமிழ்செல்வன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தஞ்சாவூர் மாவட்டம் அனைத்து அரசு மேல்நிலை, உயர்நிலை, நடுநிலை மற்றும் தொடக்க பள்ளிகளுக்கு தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வி துறை சார்பாக விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

ஆனால் இந்த உபகரணங்கள் தரமற்றதாகவும் மாணவர்கள் பயிற்சி செய்ய பயனற்றதாகவும் உள்ளன.

நிரந்தர உபகரணமான சார்பும், டிஸ்கஸ் இரும்பினால் இல்லாமல் கார்பன் கலந்து ரப்பரால் இருக்கிறது. கால்பந்து போஸ்ட் ரிலே பேட்டர்சன், ஈட்டி ஏறிதல் போன்றவை பிளாஸ்டிக் உபகரணமாக உள்ளது.

இதை மாணவர்கள் பயிற்சி செய்யவும் பயன்படுத்தவும் முடியாது.

பல பொருட்கள் உடைந்து உள்ளன.

அவையாவும் பயன்படுத்த முடியாது. எனவே அனைத்து பொருட்களும் திரும்ப பெற்று தரமான இரும்பினால் ஆன பொருட்கள் உரிய முறையில் வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com