என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போதை பழக்கத்திற்கு பள்ளி மாணவர்கள் அடிமையாவதை எதிர்த்து விழிப்புணர்வு பேரணி
    X

     போதை பழக்கத்திற்கு அடிமையாவதை எதிர்த்து விழிப்புணர்வு பேரணி நடந்தது.

    போதை பழக்கத்திற்கு பள்ளி மாணவர்கள் அடிமையாவதை எதிர்த்து விழிப்புணர்வு பேரணி

    • விழிப்புணர்வு பேரணி நடைபெற்று சிறப்பு உதவி ஆய்வாளர் ராஜாஜி கொடியசைத்து துவக்கி வைத்தார்.
    • மாணவர்கள் பங்கேற்று முக்கிய வீதிகளின் வழியாக கோஷங்கள் எழுப்பியவாறு சென்றனர்.

    சீர்காழி:

    சீர்காழி சபாநாயக முதலியார் இந்து மேல்நிலைப் பள்ளியும், ரோட்டரி கிளப் ஆப் சீர்காழி டெம்பிள் டவுன், நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் இணைந்து பள்ளி மாணவர்கள் போதை பழக்கத்திற்கு அடிமையாவதை எதிர்த்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.சங்கத் தலைவர் வெங்கடேசன் தலைமை தாங்கினார்.

    சிறப்பு உதவி ஆய்வாளர் ராஜாஜி கொடியசைத்து துவக்கி வைத்தார்.

    முகாம் அலுவலர் முரளிதரன், டெம்பிள் டவுன் ரோட்டரி சங்கத்தினுடைய முன்னாள் தலைவர்கள், மற்றும் முன்னாள் பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள், என். எஸ்.எஸ் மாணவர்கள் பங்கேற்று முக்கிய வீதிகளின் வழியாக கோஷங்கள் எழுப்பியவாறு சென்றனர்.

    முன்னதாக பொருளாளர் வினோத் வரவேற்றார்.நிறைவில் செயலாளர் பிரபாகரன் நன்றி கூறினார்.

    Next Story
    ×