என் மலர்tooltip icon

    இந்தியா

    முதல் 2 வாரங்களுக்கு மாணவர்கள் பள்ளி புத்தகம் கொண்டு வரவேண்டாம் - கேரளா அரசு அறிவிப்பு
    X

    முதல் 2 வாரங்களுக்கு மாணவர்கள் பள்ளி புத்தகம் கொண்டு வரவேண்டாம் - கேரளா அரசு அறிவிப்பு

    • முதல் 2 வாரங்களுக்கு மாணவர்கள் புத்தகங்கள் கொண்டு செல்ல தேவையில்லை.
    • முதல் 2 வாரங்கள் சமூக பிரச்சனைகள் தொடர்பான விழிப்புணர்வு வகுப்புகள் நடைபெறும்

    கேரளாவில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கும்போது, முதல் 2 வாரங்களுக்கு மாணவர்கள் புத்தகங்கள் கொண்டு செல்ல தேவையில்லை என்று கேரள அரசு அறிவித்துள்ளது.

    பள்ளிகள் திறந்து முதல் 2 வாரங்கள் சமூக பிரச்சனைகள் தொடர்பான விழிப்புணர்வு வகுப்புகள் நடைபெறும் என கேரள அரசு அறிவித்துள்ளது.

    இது தொடர்பாக பேசிய கல்வித்துறை அமைச்சர் சிவன்குட்டி, போதைப்பொருள் துஷ்பிரயோகம், பொது சொத்துக்களை அழித்தல் மற்றும் உணர்ச்சி கட்டுப்படுத்துதல் உள்ளிட்ட பல தலைப்புகளில் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் பள்ளிகளில் நடைபெறும் என்று தெரிவித்தார்.

    Next Story
    ×