search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Experimentation"

    • காண்ட்ராக்டர் மற்றும் வாகன டிரைவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • பிரேத பரிசோதனைக்காக உடலை சீர்காழி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா வழுதலைக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேந்தர் (வயது 25) கொத்தனார்.

    இவர் வழுதலைகுடியில் இருந்து வடகால் நோக்கி தனது மோட்டார் சைக்கிளில் சென்று உள்ளார்.

    எடமணல் என்ற இடத்தில் சாலையின் குறுக்கே பாலம் கட்டுவதற்காக கொட்டப்பட்டிருந்த ஜல்லியில் வழுக்கி நிலை தடுமாறி கீழே விழுந்தார்.

    அப்போது அந்த வழியாக வந்த வாகனம் மோதியதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே சுரேந்தர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    தகவல் அறிந்த சீர்காழி போலீசார் விபத்தில் உயிரிழந்த சுரேந்தர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்ல முயன்றனர்.

    அப்போது அங்கு திரண்ட சுரேந்திரனின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் விபத்துக்கு காரணமான கட்டுமான பணி காண்ட்ராக்டர் மற்றும் வாகன டிரைவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    இதைத் தொடர்ந்து போலீசார் அந்த சாலையில் இருந்த சிசிடிவி பதிவுகளை ஆராய்ந்து எடமணல் பகுதியில் இருந்து புறவழிச் சாலை பணிக்காக மண் ஏற்றிச் சென்ற லாரி தான் விபத்தை ஏற்படுத்தியது என்பதை கண்டறிந்து லாரி ஓட்டுநர் கைது செய்ய நடவடிக்கை எடுக்கபடும் என சாலை மறியலில் ஈடுப்பட்டவர்களிடம் கூறினர்.

    இதைத் தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.

    அதன் பின்னர் உடலை கைப்பற்றி போலீசார் பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நாம் அனைவரும் இந்தியர் என்ற உணர்வோடு ஒற்றுமையாக இருக்கவேண்டும்.
    • மூத்த குடிமக்களுக்கு சலுகை கட்டணத்தில் சிறப்பு உடல் பரிசோதனை.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மீனாட்சி மருத்துவமனையில் 74-வது குடியரசு தினவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

    விழாவில் தஞ்சை மீனாட்சி மருத்துவமனை பொது மேலாளர் பாலமுருகன் தேசிய கொடி ஏற்றி வைத்து பேசுகையில், ஜாதி, மதம், மொழி என்ற எந்த பாகுபாடின்றி நாம் அனைவரும் இந்தியர் என்ற உணர்வோடு ஒற்றுமையாக இருக்கவேண்டும் என்றார்.

    இதில் மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவு தலைவர் சரவணவேல் மற்றும் மக்கள் தொடர்பு அலுவலர் மணிவாசகம் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

    இதில் மருத்துவமனை ஊழியர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

    குடியரசு தினத்தை முன்னிட்டு மூத்த குடிமக்களுக்கு சலுகை கட்டணத்தில் சிறப்பு உடல் பரிசோதனை நேற்று தொடங்கி வருகிற பிப்ரவரி 4-ந் தேதி வரை நடைபெறுகிறது.

    • 30 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் மார்பக பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
    • அங்கன்வாடி பணியாளர்கள், சுகாதார பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் உத்தரவின்பேரில், துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள் விஜயகுமார் வழிகாட்டுதலின் பேரிலும், திருமருகல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மார்பக புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    இதில் 30 வயதிற்கும் மேற்பட்ட பெண்கள் மார்பக பரிசோதனைகள் செய்து கொள்ள வேண்டும், இலவச மார்பக பரிசோதனைகளை அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் செய்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

    இந்நிகழ்ச்சிக்கு வட்டார மருத்துவ அலுவலர் இளங்கோவன் தலைமை தாங்கினார்.

    மாவட்ட சுகாதார நலக் கல்வியாளர் மணவாளன் முன்னிலை வசித்தார்.

    இதில் மருத்துவர்கள், சுகாதார மேற்பார்வையாளர், சுகாதார ஆய்வாளர்கள், மருந்தாளுனர் மற்றும் மக்களைத் தேடி மருத்துவம் பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், சுகாதாரப்பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    முடிவில் மார்பக புற்றுநோய் குறித்து உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது.

    ×