என் மலர்

  நீங்கள் தேடியது "unity"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • உலக தொழிலாளர்களின் வர்க்க ஒற்றுமையை உயர்த்தி பிடிப்போம்.
  • உணவு, குடிநீர், இருப்பிடம் உள்ளிட்ட அடிப்படை தேவைகளை நிறைவேற்றிட வேண்டும்.

  தஞ்சாவூர்:

  இரண்டாம் உலகப்போருக்கு பின்பு கடந்த 1945 ஆம் ஆண்டு உலக தொழிற்சங்க அமைப்பு பாரீஸ் நகரத்தில் உருவாக்கப்பட்டது.

  நாடுகளை அடிமைப்படுத்தி, அந்த நாட்டு வளங்களையும் சுரண்டி, மக்களை அடிமைப்படுத்தும் ஏகாதிபத்திய நலன்களுக்கு எதிராக, குறிப்பாக அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிராக உலக நாடுகளின் முழுமையில் இருந்தும் தொழிலாளர்களை, மக்களை பாதுகாக்க வேண்டி உலகத் தொழிற்சங்க சம்மேளனம் அறைகூவல் விடுத்துள்ளது.

  அதன் அமைப்பு தினம் தஞ்சாவூரில் கடைபிடிக்கப்பட்டது.

  அனைத்து தொழிற்ச ங்கங்கள் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஏ.ஐ.டி.யூ.சி மாவட்ட செயலாளர் தில்லைவனம் தலைமை வகித்தார்.

  மாநில செயலாளர் சந்திரகுமார் , தொ.மு.ச மாவட்ட செயலாளர் சேவியர், ஐ.என்.டி.யூ.சி மாவட்ட செயலாளர் மோகன்ராஜ், ஏ. ஐ.சி.சி.டி.யு. மாவட்ட செயலாளர் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

  நிகழ்வில் உலக நாடுகளில் உள்ள மக்கள் அனைவருக்கும் உணவு, குடிநீர், இருப்பிடம், கல்வி, வேலை வாய்ப்பு, சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிட வேண்டும், உலகத் தொழிலாளர்களின் வர்க்க ஒற்றுமையை உயர்த்தி பிடிப்போம் என்று உறுதியேற்கப்பட்டது.

  இதில் அனைத்து சங்க நிர்வாகிகள் துரை. மதிவாணன், ரவி, கோவிந்தராஜ், சேவையா, தாமரைச் செல்வன், ராஜா கோபால், வீரையன், செல்வம், மணிவாசகன், பாரதிதாசன், மருதவாணன், ராஜு , பன்னீர்செல்வம், சுரேந்தர், சிவானந்தம், செல்வம், முருகானந்தம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • தென்காசி ரயில்வே மேம்பாலம் சாதி, மதத்தை கடந்து ஒற்றுமையை பறைசாற்றும் வகையில் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டது.
  • காவல் துறையின் செயலை பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பாராட்டி வருகின்றனர்

  தென்காசி:

  தென்காசி மாவட்ட காவல்துறையால் ஏற்பாடு செய்யப்பட்ட வானவில் வண்ணம் கொண்ட ஒற்றுமை மேம்பாலத்தை 75-வது சுதந்திர தினவிழாவை கொண்டாடும் வகையில் தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் உத்தரவு படி தென்காசி உட்கோட்ட துணை கண்காணிப்பாளர் மணி மாறன் மேற்பார்வையில் தென்காசி இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் தென்காசி ரயில்வே மேம்பாலம் சாதி, மதத்தை கடந்து ஒற்றுமையை பறைசாற்றும் வகையில் மின் விளக்குகளால் அலங் கரிக்கப்பட்டது. காவல் துறையின் இத்தகைய செயலை பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையைப் பார்த்து பிரதமர் மோடிக்கு பயம் வந்துவிட்டதாகவும், அதன்மூலம் இந்தியாவை காப்போம் என்றும் கொல்கத்தா பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசினார். #Mamata #AntiBJPRally #MKStalin
  கொல்கத்தா:

  கொல்கத்தாவில் மம்தா பானர்ஜி தலைமையில் நடைபெற்ற பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

  வணக்கம். வங்க மொழியைத் தொடர்ந்து வங்கப் புலிகளுக்கு எனது வணக்கம். சுதந்திர போராட்டத்தில் இந்தியாவும் மேற்கு வங்கமும் முக்கிய பங்காற்றின. இப்போது, இந்தியாவின் 2வது சுதந்திர போராட்டத்தில் பங்கேற்பதற்காக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் அழைப்பின்பேரில் இங்கு வந்துள்ளேன். மதவாத சக்திகளிடம் இருந்து நாட்டை மீட்பதுதான் 2வது சுதந்திர போராட்டம்.  பிரதமர் மோடி சொன்ன பொய்களில் பெரிய பொய், கருப்புப் பணத்தை மீட்பேன் என்பதுதான். வங்கிக் கணக்கில் பணத்தைப் போடுவேன் என்று கூறிவிட்டு மக்கள் தலையில் கல்லைப் போட்டுவிட்டார். மத்திய பாஜக அரசு மக்களுக்கான அரசு அல்ல, கார்ப்பரேட்டுகளுக்கான அரசு. பண மதிப்பு நீக்கம் மற்றும் ரபேல் ஒப்பந்தத்தில் ஊழல் நடந்துள்ளது.

  எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்திருப்பதால் பிரதமர் மோடிக்கு பயமாக உள்ளது. நம்முடைய ஒற்றுமை மோடியை பயம் கொள்ள வைத்துள்ளது. அதன்மூலம் இந்தியாவை நாம் காப்போம். நமது ஒற்றுமை மோடியை வீழ்த்தும். மோடி பார்த்து பயப்படும் தலைவர்களில் ஒருவர் மம்தா பானர்ஜி.

  வேற்றுமையில் ஒற்றுமை என்பதுபோல், நாம் வேறு வேறு மாநிலத்தவர்களாக இருந்தாலும் நமது நோக்கம் ஒன்றுதான். பாஜக ஆட்சியை அகற்ற வேண்டும். பிரதமர் மோடியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்.

  இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார். #Mamata #AntiBJPRally #MKStalin
  ×