search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேச ஒற்றுமையை உலகிற்கு எடுத்துக்காட்டியுள்ளது
    X

    தேச ஒற்றுமையை உலகிற்கு எடுத்துக்காட்டியுள்ளது

    • சந்திராயன்-3 நிலாவில் சாதனை தேச ஒற்றுமையை உலகிற்கு எடுத்துக்காட்டியுள்ளது என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பாராட்டியுள்ளார்.
    • மண்ணிலும், விண்ணிலும் நிச்சயம் வெற்றியை பெற்று தரும்.

    மதுரை

    மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செல்லூர் ராஜூ இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-

    இந்தியா அனுப்பிய சந்திராயன்-3, நிலவில் வெற்றிகரமாக தரையிரங்கி வரலாற்று சாதனை படைத்து இருக்கிறது. இதுவரை நிலவின் தென்பகுதியில் யாரும் ஆய்வு செய்யாத நிலையில் நமது சந்திராயன் முதன் முறையாக அங்கு கால்தடம் பதித்து இருப்பது உலக அளவில் விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியாவின் நிலையை உயர்த்தி உள்ளன.

    நமது நாடு பல மொழி, பல இனம், பல மதம் என இருந்தாலும் தேசம் என்று வரும் போது அனைவரும் ஒன்றிணைந்து விடுவார்கள். அதற்கு எடுத்து காட்டாக, சந்திராயன் நிலவில் தரையிறங்கும் காட்சியை கோடான கோடி மக்கள் நேற்று நேரலையில் பார்த்து மகிழ்ந்தனர். சந்திராயன் வெற்றியை அனைவரும் கொண்டாடினர். இந்த வெற்றி, நமது தேசத்தின் ஒற்றுமையை உலக்கு பிரதிபலித்து இருக்கிறது. இந்த ஒற்றுமை நமக்கு மண்ணிலும், விண்ணிலும் நிச்சயம் வெற்றியை பெற்று தரும்.

    அ.தி.மு.க. 51-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இந்த வேளையில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சி தலைவி அம்மா ஆகியோர் வழியில் எடப்பாடி பழனிசாமி சந்திராயன் வெற்றிக்கு பாடுப்பட்டவர்களை வாழ்த்தி இருக்கிறார். அவரது வழியில் மதுரை மக்கள் சார்பாக நானும் சந்திராயன் வெற்றிக்கு காரணமான விஞ்ஞானி களை மனதார பாரட்டு கிறேன்.

    இந்த வெற்றிக்கு பின்னால் ஒரு தமிழரான திட்ட இயக்குனர் வீரமுத்துவேல் இருப்பது, நமக்கெல்லாம் மிகுந்த பெருமையான விஷயம். எனவே அவரையும், அவரது குடும்பத்தினரையும் இந்த தருணத்தில் பாராட்டுவதில் மகிழ்ச்சி கொள்கிறேன். இந்த திட்டத்திற்கு ஊக்கம் தந்த பிரதமருக்கும், மத்திய அரசுக்கு எனது நன்றியை தேரிவித்துக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×