மனநலன் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

மனநலன் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
மனநலன் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
Published on

சிவகாசி

சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் தமிழியல் துறை சங்க பலகை இலக்கிய மன்றம் சார்பில் மனம் நிரல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. கல்லூரி முதல்வர் பாலமுருகன் தலைமை தாங்கி உடல்நலம், மனநலம் குறித்து பேசினார். துணை முதல்வர் முத்துலட்சுமி வாழ்த்துரை வழங்கினார்.

சிவகாசி அரசு மருத்துவமனை ஆலோசகர் சங்கர், மாவட்ட மனநல மருத்துவ திட்ட அதிகாரி நித்யா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பேசினர். மனநல மருத்துவர் இளையராஜா மனதை பற்றியும், அதன் செயல்பாடுகள் பற்றியும், மனகட்டுப்பாடு குறித்தும் பேசினார்.

முன்னதாக மாணவி அங்காள பரமேஸ்வரி வரவேற்றார். மாணவி மாலதி நன்றி கூறினார். இதில் 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com