

விழுப்புரத்தில் இன்று நடைபெற்ற திருநங்கைகளுக்கான மிஸ் திருநங்கை 2025 அழகிப் போட்டியில் நடிகர் விஷால் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அப்போது மேடையில் திடீரென அவர் மயங்கி விழுந்தது அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
இருப்பினும் முதலுதவி சிகிச்சைக்கு பின் உடல்நலம் தேறி விஷால் தெளிவடைந்தார். இந்த சம்பவத்தால் நிகழ்ச்சியில் சற்று நேரம் பரபரப்பு நிலவியது.
முன்னதாக கடந்த ஜனவரியில் மதகஜராஜா பட புரொமோஷனில் விஷால் கை நடுங்க பேசியது வைரலானது. இதனால் அவரின் உடல்நலம் குறித்து பலரும் கவலை தெரிவித்தனர்.
இந்நிலையில் தற்போது அவர் மயக்கமடைந்த சம்பவம் ரசிகர்களை மேலும் கவலையடையச் செய்துள்ளது.
கூட்டத்தில் மயங்கி விழுந்த விஷால்... விழுப்புரத்தில் பரபரப்பு#vishal | #thanthicinema | #villupuram pic.twitter.com/DgrXSOv9FU