என் மலர்tooltip icon

    இந்தியா

    மத்திய அமைச்சரின் 31 வயது மகன் காலில் விழுந்த 73 வயது பா.ஜ.க எம்.எல்.ஏ - வீடியோ வைரல்
    X

    மத்திய அமைச்சரின் 31 வயது மகன் காலில் விழுந்த 73 வயது பா.ஜ.க எம்.எல்.ஏ - வீடியோ வைரல்

    • தன்னைவிட 41 வயது இளையவரின் காலில் விழுந்து வணங்க முயன்ற தேவேந்திர குமாரின் இந்தச் செயல் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
    • இது முற்றிலும் கலாசார வெளிப்பாடு.

    பாஜக எம்.பி.யும் மத்திய தகவ்லதொடர்புத் துறை அமைச்சருமான ஜோதிராதித்ய சிந்தியாவின் மகன் காலில் 73 வயது பாஜக எம்எல்ஏ, விழுந்து வணங்க முற்பட்ட வீடியோ வைரலாகி வருகிறது.

    மத்திய பிரதேசத்தை சேர்ந்த பாஜக எம்எல்ஏ வான தேவேந்திர குமார் ஜெயின் (73) உடைய பிறந்தநாள் கொண்டாட்டத்தில், ஜோதிராதித்ய சிந்தியாவின் மகன் மஹாரியமான் சிந்தியாவும் கலந்து கொண்டார்.

    இதன்போது, கேக் வெட்டி, தேவேந்திர குமாருக்கு மஹாரியமான் ஊட்டி விட்டார்.

    இதைத்தொடர்ந்து 31 வயதேயான மஹாரியமானின் காலில் 73 வயதான தேவேந்திர குமார் விழுந்து வணங்க முயன்றார்.

    தன்னைவிட 41 வயது இளையவரின் காலில் விழுந்து வணங்க முயன்ற தேவேந்திர குமாரின் இந்தச் செயல் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

    இதுகுறித்து பேசிய தேவேந்திர குமார் , "எனக்காக மஹாரியமான் பிறந்தநாள் வாழ்த்து பாடியதால் நான் உணர்ச்சிவசப்பட்டேன். இதனால்தான், அவரது கால்களைத் தொட முயன்றேன்.

    இது முற்றிலும் கலாசார வெளிப்பாடு. இளம் வயதினரின் கால்களைத் தொடுவது குறித்து அரசியலமைப்பில் எதுவும் எழுதப்படவில்லை" என்று தெரிவித்தார்.

    Next Story
    ×