என் மலர்tooltip icon

    இந்தியா

    VIDEO: ரீல்ஸ் எடுக்க முயன்று யமுனை ஆற்றில் தவறி விழுந்த பாஜக எம்.எல்.ஏ.
    X

    VIDEO: ரீல்ஸ் எடுக்க முயன்று யமுனை ஆற்றில் தவறி விழுந்த பாஜக எம்.எல்.ஏ.

    • பாஜக எம்.எல்.ஏ. ரவீந்தர் சிங் யமுனை ஆற்றை தூய்மைபடுத்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
    • பாட்டிலில் தண்ணீரை பிடித்து குடிக்கும் வகையில் ரீல்ஸ் பதிவு செய்தார்.

    வட மாநிலங்களில் பெரிய அளவில் கொண்டாடப்படும் விழாவில் ஒன்று சாத் பூஜை. சூரிய பகவானுக்கு நன்றி சொல்வதற்காக நடத்தப்படும் இந்த விழா 4 நாட்கள் நடைபெறும். நான்காவது நாளில் நீர் நிலைகளில் கூடி மக்கள் பூஜை செய்து சூரிய பகவானை வழிபடுவார்கள்.

    இந்த ஆண்டின் சாத் பூஜை கடந்த 25 ஆம் தேதி தொடங்கியது. சாத் பூஜையையொட்டி யமுனா நதியில் பொதுமக்கள் நீராடவுள்ளனர். யமுனை ஆற்றின் நீர் கடுமையாக மாசடைந்து உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    டெல்லியின் பட்பர்கஞ்ச் தொகுதி பாஜக எம்.எல்.ஏ. ரவீந்தர் சிங் யமுனை ஆற்றை தூய்மைபடுத்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

    அந்த சமயத்தில் யமுனை ஆற்றின் தூய்மை குறித்து எடுத்துரைக்க ஆற்றுக்கு சென்ற பாஜக எம்.எல்.ஏ. பாட்டிலில் தண்ணீரை பிடித்து குடிக்கும் வகையில் தூய்மையானது என சொல்லியவாறு ரீல்ஸ் பதிவு செய்தார்.

    அப்போது, ஆற்றின் கரையோரம் நின்றுகொண்டிருந்த பாஜக எம்.எல்.ஏ. திடீரென நிலைதடுமாறி ஆற்றுக்குள் விழுந்தார்.

    இதனால் அதிர்ச்சியடைந்த எம்.எல்.ஏ.வின் ஆதரவாளர்கள் உடனடியாக அவரை ஆற்றில் இருந்து மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.

    Next Story
    ×