என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "shopkeeper"

    • 15 வயதுடைய சிறுமி கடைக்காரரை பிளேடால் தாக்குகிறார்.
    • பிளேடால் தாக்கிய சிறுமிக்கு மனநலப் பிரச்சினை இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

    உத்தரபிரதேசத்தில் கடைக்காரர் ஒருவரை 15 வயது சிறுமி பிளேடால் தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ஹாப்பூரில் இந்த சம்பவம் நடந்துள்ளது. சிசிடிவி காட்சிகளில் 15 வயதுடைய சிறுமி கடைக்காரரை பிளேடால் தாக்குகிறார். அப்போது கடைக்காரர் அருகில் இருந்த பெண் உடனடியாக தலையிட்டு சிறுமியைதடுக்க முயற்சித்தார்.

    இதுதொடர்பாக பேசிய கடைக்காரரின் சகோதரர் தேவ் சைனி, "அந்தப் சிறுமி அடிக்கடி எங்கள் கடையில் பொருட்களை வாங்கிவிட்டு பின்னர் திருப்பி தருவாள். இந்த முறை நாங்கள் ஏற்கனவே அவளிடம் விற்ற பொருட்களை திருப்பித் தரவோ மாற்றவோ மாட்டோம் என்று கூறியிருந்தோம். ஆனால் அவள் மீண்டும் பொருட்களை திருப்பி வாங்கி கொள்ளுமாறு எங்கள் கடைக்கு வந்தாள். எங்களை பிளேடால் தாங்குவேன் என்று மிரட்டினாள்.

    கடைசியாக நாங்கள் பொருளைத் திரும்பப் பெற்றுக்கொண்டு அவளுடைய பணத்தைத் திருப்பி கொடுத்தோம். ஆனால் பணத்தை பெற்றுக்கொண்டு, திடீரென்று அங்கே நின்று கொண்டிருந்த என் சகோதரனைத் தாக்கினாள். உடனடியாக அந்த சிறுமியை பிடித்து போலீசில் ஒப்படைத்தோம்" என்று தெரிவித்தார்.

    பிளேடால் தாக்கிய சிறுமிக்கு மனநலப் பிரச்சினை இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். 

    • கந்துவட்டி கும்பலால் டீக்கடைக்காரர் கொலையா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • இவருக்கு மலர் என்ற மனைவியும், ஒரு மகனும், 2 மகளும் உள்ளனர்.

    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை திருவேக ம்புத்தூர் அருகே உள்ள ஆந்தகுடியைச் சேர்ந்தவர் திருநாவுக்கரசு (வயது45). இவர் அதேபகுதியில் உள்ள ஒத்தக்கடையில் டீக்கடை நடந்தி வந்தார். இவருக்கு மலர் என்ற மனைவியும், ஒரு மகனும், 2 மகளும் உள்ளனர்.

    தொழில் நிமர்த்தம் காரணமாக திருநாவுக்கரசு வட்டிக்கு கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. பணத்தை சரியாக செலுத்தா ததால் கந்து வட்டிக்காரர்கள் தொல்லை அதிகரித்துள்ளது.

    இந்த நிலையில் திருநா வுக்கரசு விளங்காட்டூர் காட்டுப்பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது உடலில் ரத்த காயங்கள் இருந்துள்ளது.

    இது குறித்து திருநா வுக்கரசின் தந்தை அழகர் திருவேகம்புத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில், எனது வீட்டுக்கு 3 பேர் காரில் வந்து இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு திருநாவுக்கரசை அழைத்துச் சென்றனர். அவர்கள் தான் எனது மகனை கொலை செய்து தூக்கில் தொங்க விட்டிருப்பார்கள் என்று புகாரில் தெரிவித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் திருநாவுக்கரவு கடன் வாங்கிய நபர்களிடம் கொலை குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பவளத்தானூர் ரவுண்டானா பகுதியில் பிரவீன்குமார் (35) என்பவர் பெட்டிக்கடை வைத்துள்ளார்.
    • கடையில் ஹான்ஸ் உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை செய்வதாக தாரமங்கலம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    தாரமங்கலம்:

    சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே உள்ள பவளத்தானூர் ரவுண்டானா பகுதியில் பிரவீன்குமார் (35) என்பவர் பெட்டிக்கடை வைத்துள்ளார். இந்த கடையில் ஹான்ஸ் உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை செய்வதாக தாரமங்கலம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வழக்குப்பதிவு செய்து பிரவீன்குமாரை கைது செய்தனர்.

    நெல்லை பழையபேட்டையில் சிகரெட் கொடுக்க மறுத்த கடைக்காரரை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    நெல்லை:

    நெல்லை பழைய பேட்டை புதுகிராமம் நடுத்தெருவை சேர்ந்தவர் ராஜரத்தினம்(வயது 40). இவர் நெல்லை-தென்காசி மெயின் ரோட்டில் கடை வைத்துள்ளார்.

    நேற்று அவரது கடைக்கு பழையபேட்டை அனவரத சுந்தர விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த நரேஷ்குமார்(27) என்பவர் வந்தார். மதுபோதையில் கடைக்கு வந்த அவர் சிகரெட் கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார்.

    ஆனால் ராஜரத்தினம், தனது கடையில் சிகரெட் இல்லை என்று கூறி உள்ளார். அதனை கேட்காத நரேஷ்குமார், கடையில் அமர்ந்திருந்த ராஜரத்தினத்தை தாக்கி உள்ளார். பின்னர் அங்கிருந்த பேனாவை எடுத்து ராஜரத்தினம் மீது குத்தி உள்ளார்.

    உடனே பஜார் பகுதியில் நின்றிருந்தவர்கள் ஓடி வந்து நரேஷ்குமாரை தள்ளிவிட்டனர். இதுதொடர்பாக பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு விரைந்து வந்த போலீசார் நரேஷ்குமாரை கைது செய்தனர்.
    ரூ.1 லட்சம் தடைசெய்யப்பட்ட புகையிலை பதுக்கிய கறிக்கடைகாரர் கைது செய்யப்பட்டார்.
    அருப்புக்கோட்டை

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை எஸ்.பி.கே. பள்ளி சாலையில் கறி கடை வைத்திருப்பவர்  ஜெயப்பிரகாஷ் (45). இவர் தமிழக அரசால் தடை செய்யப் பட்ட புகையிலை பாக்கெட்டுகளை பதுக்கி வைத்து கடைகளுக்கு விற்று வருவதாக அருப்புக்கோட்டை டவுன் போலீசுக்கு தகவல் வந்தது. 

    அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், தலைமை காவலர் அன்பழகன் ஆகியோர் பந்தல்குடி சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது, ஜெயப்பிரகாஷ்   இரு சக்கர வாகனத்தில் 24 கிலோ எடையுள்ள  தடை செய்யப்பட்ட புகையிலை மூட்டையை எடுத்து சென்றார்.

    வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார்  அதனை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ. 1 லட்சம் ஆகும்.  மேலும்  கறிக்கடைகாரர் ஜெயபிரகாஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    நேற்று திருச்சுழி சாலையில் ஜெராக்ஸ் கடையில் மூடை மூடையாக தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் அருப்புக்கோட்டையில் தொடர்ந்து தடைசெய்யப்பட்ட புகையிலை பறிமுதல் செய்த நடவடிக்கை   பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    சேலம் சின்னக்கடை வீதியில் மளிகைக் கடைக்காரர் மகன் கடத்தலில் சி.சி.டி.வி. காமிரா பதிவை வைத்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சேலம்:

    ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர்  மூலாராம் .இவர் சேலம் சின்னக்கடை வீதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது மகன் ஜெயராம் (வயது 21). இவர் நேற்று கடையில் இருந்தபோது 6 பேர் கும்பல் இவரை காரில் தூக்கிப் போட்டு கடத்தி சென்றது.

    இந்த சம்பவம் குறித்து சேலம் டவுன் மற்றும் அம்மாபேட்டை போலீசார், ஜயராமை கடத்திய கும்பல் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
     
    போதைப்பொருட்கள் கடத்தல் பிரச்சனையில் ஜெயராம் கடத்தப்பட்டதும்,  அவரை மிரட்டி பணம் பறிப்பதற்காக  மர்ம கும்பல் ஜெயராமை கடத்தி சென்றுள்ளதும் தெரியவந்தது.

    இதற்கிடையே ஜெயராமை கடத்திச் சென்ற கும்பல் உருவம் கடையில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு காமிராவில் பதிவாகி உள்ளது. இந்த வீடியோ பதிவை  வைத்து தனிப்படை  போலீசார் தீவிரமாக அவர்களை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். 

    மேலும் தர்மபுரி, ஓசூர் பகுதி உள்ளிட்ட பகுதிகளுக்கு தனிப்படை போலீசார் சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.
    • போன் தர மறுத்த வியாபாரியை கத்தியால் குத்தினர்
    • பணத்தையும் பறித்து சென்றனர்

    கரூர்:

    கரூர் டி. செல்லாண்டிபாளையத்தை சேர்ந்தவர் செந்தில் குமார் (வயது 50) வியாபாரியான இவர், சம்பவத்தன்று காமராஜ் மார்க்கெட்டில், காய்கறிகளை வாங்கிக் கொண்டு, இருசக்கர வாகனத்தில் மக்கள் பாதை ரவுண்டானா வழியாக வீட்டுக்கு சென்று கொண்டி ருந்தார்.அப்போது, மோகன்ராஜ் (22), உதயபிரகாஷ் (21), ஹேமல் (20), சஞ்சய்குமார் (20), ஆகிய நான்கு பேர், செந்தில் குமாரை வழிமறித்து மொபைல் போனை கேட்டுள்ளனர். அவர் மொபைல் போனை தர மறுத்துள்ளார். ஆத்திரமடைந்த நான்கு பேரும், செந்தில் குமாரை கத்தியால் குத்தினர். பின், செந்தில் குமாரிடமிருந்து மொபைல் போன் மற்றும் 1,200 ரூபாயை பறித்துக் கொண்டு தப்பினர். காயம்டைந்த செந்தில்குமார், கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து, கரூர் டவுன் போலீசார் மூன்று பேரை கைது செய்து விசாரிக்கின்றனர்.

    இங்கிலாந்து நாட்டில் விபத்தில் இந்தியரை கொன்ற போலீஸ் அதிகாரிக்கு 18 மாதம் சிறைத்தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். #UKPoliceOfficer #Jail #IndianOrigin #Murder
    லண்டன்:

    இங்கிலாந்து நாட்டில் வசித்து வந்தவர் பல்விந்தர் சிங் (வயது 59). இந்தியர். இவர் அங்கு கடை வைத்து நடத்தி வந்தார். இந்த நிலையில் 2016-ம் ஆண்டு, டிசம்பர் மாதத்தில் ஒரு நாள் வோல்வர்ஹாம்ப்டன் என்ற இடத்தில் அவர் தனது வேனை ஓட்டிச்சென்றார்.

    அப்போது அந்த வேன் மீது ஒரு கார் நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது. இதில் பல்வீந்தர் படுகாயம் அடைந்தார். ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    அவர் மீது காரை ஓட்டிச்சென்று மோதி விபத்து ஏற்படுத்திய ஜேசன் பேனிஸ்டர் என்பவர் சிக்கினார். அவர் ஸ்டாப்போர்டுஷயர் போலீஸ் அதிகாரி ஆவார். அவர் மீது விபத்தை ஏற்படுத்தி பல்விந்தர் சிங்கை கொன்றதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.

    இந்த வழக்கு அங்குள்ள பர்மிங்ஹாம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஜேசன் பேனிஸ்டர் தன் மீதான குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவர் குற்றவாளி என நீதிபதி முடிவு செய்து, அவருக்கு 18 மாதம் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார்.

    மேலும் அவர் 3 ஆண்டு காலம் வாகனம் ஓட்டுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
    திருப்பூரில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்ற வியாபாரியை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 25½ கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
    நல்லூர்:

    திருப்பூர்-தாராபுரம் ரோடு கோவில்வழி பகுதியை சேர்ந்தவர் சதீஷ் (வயது 28). இவர் நேற்று காலை அந்தபகுதியில் உள்ள ஒரு கடைக்கு சென்று புகையிலை பொருள் கேட்டுள்ளார். ஆனால் அங்கு இல்லை என்று திரும்பினார். அப்போது அவரை பார்த்த ஒரு வியாபாரி தன்னிடம் புகையிலை பொருள் உள்ளது. கடையைவிட குறைந்த விலைக்கு தருகிறேன் என்று கூறி அவருக்கு புகையிலை பொருள் வழங்கினார். இதை சாப்பிட்ட சதீசுக்கு சிறிது நேரத்தில் வாய் எரிச்சல் ஏற்பட்டதுடன் வாந்தி எடுத்தார். இதனால் அவரை அருகில் இருந்த ஒருவர் பத்திரமாக வீட்டில் கொண்டு விட்டார்.

    பின்னர் இது குறித்து திருப்பூர் ஊரக போலீசில் சதீஷ் புகார் செய்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயசந்திரன் மற்றும் போலீசார் சதீசை அழைத்துக்கொண்டு கோவில் வழி பகுதியில் அந்த வியாபாரியை தேடினர். பின்னர் அவரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் தேனி அல்லிநகரை சேர்ந்த தங்கராஜ் (39) என்பதும், அவர் திருப்பூர் வீரபாண்டி வள்ளலார் நகரில் தங்கியிருந்து கடந்த 2 ஆண்டுகளாக கடைகளுக்கு புகையிலை பொருட்கள் விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 25½ கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். அந்த புகையிலை பொருட்கள் போலியானதா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்திவருகிறார்கள். 
    ×