கந்துவட்டி கும்பலால் டீக்கடைக்காரர் கொலையா?

கந்துவட்டி கும்பலால் டீக்கடைக்காரர் கொலையா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இவருக்கு மலர் என்ற மனைவியும், ஒரு மகனும், 2 மகளும் உள்ளனர்.
 இறந்த திருநாவுக்கரசு.
 இறந்த திருநாவுக்கரசு.
Published on

தேவகோட்டை

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை திருவேக ம்புத்தூர் அருகே உள்ள ஆந்தகுடியைச் சேர்ந்தவர் திருநாவுக்கரசு (வயது45). இவர் அதேபகுதியில் உள்ள ஒத்தக்கடையில் டீக்கடை நடந்தி வந்தார். இவருக்கு மலர் என்ற மனைவியும், ஒரு மகனும், 2 மகளும் உள்ளனர்.

தொழில் நிமர்த்தம் காரணமாக திருநாவுக்கரசு வட்டிக்கு கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. பணத்தை சரியாக செலுத்தா ததால் கந்து வட்டிக்காரர்கள் தொல்லை அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் திருநா வுக்கரசு விளங்காட்டூர் காட்டுப்பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது உடலில் ரத்த காயங்கள் இருந்துள்ளது.

இது குறித்து திருநா வுக்கரசின் தந்தை அழகர் திருவேகம்புத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில், எனது வீட்டுக்கு 3 பேர் காரில் வந்து இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு திருநாவுக்கரசை அழைத்துச் சென்றனர். அவர்கள் தான் எனது மகனை கொலை செய்து தூக்கில் தொங்க விட்டிருப்பார்கள் என்று புகாரில் தெரிவித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் திருநாவுக்கரவு கடன் வாங்கிய நபர்களிடம் கொலை குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com