என் மலர்
உள்ளூர் செய்திகள்

மைல் கல்லுக்கு பூைஜ செய்யப்பட்டுள்ளதை படத்தில் காணலாம்.
மைல் கல்லுக்கு நள்ளிரவில் பூஜை
- மைல் கல்லுக்கு நள்ளிரவில் பூஜை நடந்துள்ளது.
- மறைந்த நடிகர் விவேக் ஒரு படத்தில் மைல் கல்லை குலதெய்வமாக வழி படுவ தை காட்சிப்படுத்தி ரசிக்க வைத்து அசத்தியிருப்பார்.
திருமங்கலம்
ஆயுதபூஜையன்று வழக்கமாக டிவி, பிரிட்ஜ், வாக னங்கள் மற்றும் தொழி லுக்கு பயன்படுத்தப்படும் பொருட்கள், தொழிற் சாலை களில் எந்திரங்களுக்கு பூஜை செய்வார்கள். ஆனால் திரு மங்கலம் பகுதியில் வினோத மாக மைல்கல்லுக்கு பூஜை நடத்தியுள்ளனர். அதன்விபரம் வருமாறு:-
திருமங்கலம் புதுப்பட்டி யில் இருந்து நாகையாபுரம் செல்லும் சாலையில் அப்ப கரை பகுதியில் உள்ள தொலைவு கல்லுக்கு (மைல் கல்லுக்கு) மாலை அணி வித்து வாழைமரம் கட்டி வாழை இலை படையிட்டு பொங்கல் வைத்து நேற்று நள்ளிரவில் பூஜை செய்து உள்ளனர்.
மேலும் 7 சிறிய கல்லுக்கும் பூஜை போட்டுள்ளனர் இது பொதுமக்களை ஆச்சரி யத்திலும் சிரிப்பிலும் ஆழ்த்தியுள்ளது. இதனை வினோதத்தை அப்பகுதி மக்கள் அல்லது அங்குள்ள வாலிபர்கள் தான் இதை செய்திருப்பார்கள் என்று கூறப்படுகிறது.
மறைந்த நடிகர் விவேக் ஒரு படத்தில் மைல் கல்லை குலதெய்வமாக வழி படுவ தை காட்சிப்படுத்தி ரசிக்க வைத்து அசத்தியிருப்பார். அந்த வகையில் திருமங்கலம் பகுதியில் மைல் கல்லுக்கு பூஜை படையல் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.






