காசு கொடு.. வாட்ஸ் அப் சேனலில் Subscription கொண்டு வர மெட்டா திட்டம்

இந்தியாவில் மட்டும் 50 கோடி பேர் வாட்ஸ் அப்பையும் பயன்படுத்தி வருகின்றனர். வாட்ஸ் அப் சேனல் என்ற அம்சம் தற்போது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது
காசு கொடு.. வாட்ஸ் அப் சேனலில் Subscription கொண்டு வர மெட்டா திட்டம்
Published on

உலகளவில் பிரபலமான மெட்டா நிறுவனம் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களை இயக்கி வருகிறது.

இந்தியாவில் மட்டும் சுமார் 35 கோடி பேர் பேஸ் புக்கையும், 50 கோடி பேர் வாட்ஸ் அப்பையும் பயன்படுத்தி வருகின்றனர்.

வாட்ஸ் அப் வந்த ஆரம்ப காலத்தைவிட தற்போது பல்வேறு அப்டேட்டுகளை மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தி வருகிறது.

வாட்ஸ் அப் சேனல் என்ற அம்சம் தற்போது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் வாட்ஸ் அப் சேனலில் விரைவில் Subscription-னை கொண்டு வர மெட்டா திட்டமிட்டுள்ளது. இதன்மூலம் உங்களுக்கு பிடித்த சேனலில் வரும் பிரத்யேக தகவல்களை பணம் செலுத்தினால் மட்டுமே பார்க்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com