என் மலர்

  நீங்கள் தேடியது "draw"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  டெல்லியில் நடைபெற்ற 5வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் டெல்லி டைனமோஸ் எப்.சி. - எப்.சி.கோவா அணிகளுக்கிடையிலான போட்டி டிராவில் முடிந்தது. #IndianSuperLeague
  புதுடெல்லி:

  5-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி தொடரில் டெல்லியில் நேற்று இரவு நடந்த 69-வது லீக் ஆட்டத்தில் டெல்லி டைனமோஸ் எப்.சி.-எப்.சி.கோவா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. பரபரப்பாக அரங்கேறிய இந்த ஆட்டம் கோல் எதுவுமின்றி டிராவில் முடிந்தது. 14-வது ஆட்டத்தில் ஆடிய கோவா அணி 7 வெற்றி, 4 டிரா, 3 தோல்வியுடன் புள்ளி பட்டியலில் 3-வது இடத்தில் உள்ளது. டெல்லி அணி 14 ஆட்டத்தில் விளையாடி 2 வெற்றி, 5 டிரா, 7 தோல்வியுடன் 8-வது இடத்தில் இருக்கிறது.

  நாளை (புதன்கிழமை) இரவு 7.30 மணிக்கு பெங்களூருவில் நடைபெறும் 70-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு எப்.சி.-கேரளா பிளாஸ்டர்ஸ் எப்.சி. அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது. #IndianSuperLeague

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் தமிழ்நாடு-டெல்லி அணிகள் இடையிலான கடைசி லீக் ஆட்டத்தில் தமிழக அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 113 ரன்கள் சேர்த்து டிக்ளேர் செய்தது. அத்துடன் ஆட்டம் டிராவில் முடிந்தது. #RanjiTrophy
  சென்னை:

  ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் தமிழ்நாடு-டெல்லி அணிகள் இடையிலான கடைசி லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடந்தது. இதில் முதலில் பேட்டிங் செய்த தமிழக அணி முதல் இன்னிங்சில் 432 ரன்கள் குவித்தது. பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய டெல்லி அணி 3-வது நாள் ஆட்டம் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 268 ரன்கள் எடுத்து இருந்தது. ஜான்டி சித்து 104 ரன்னுடனும், லலித் யாதவ் 65 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

  இந்த நிலையில் கடைசி நாளான நேற்று தொடர்ந்து ஆடிய டெல்லி அணி முதல் இன்னிங்சில் 133.1 ஓவர்களில் 336 ரன்னில் ‘ஆல்-அவுட்’ ஆனது. லலித் யாதவ் 91 ரன்னில் கேட்ச் ஆனார். ஜான்டி சித்து 140 ரன்களுடன் அவுட் ஆகாமல் இருந்தார். தமிழக சுழற்பந்து வீச்சாளர் சாய் கிஷோர் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார். அடுத்து 96 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய தமிழக அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 113 ரன்கள் சேர்த்து டிக்ளேர் செய்தது. அத்துடன் ஆட்டம் டிராவில் முடிந்தது. முதல் இன்னிங்சில் முன்னிலை பெற்றதன் அடிப்படையில் தமிழக அணிக்கு 3 புள்ளி கிடைத்தது. இதனால் தனது பிரிவில் (பி) 8-வது இடத்தை பிடித்த தமிழக அணி அடுத்த சீசனில் இதே பிரிவில் நீடிப்பதை உறுதி செய்தது. அதே சமயம் தனது பிரிவில் கடைசி இடத்துக்கு தள்ளப்பட்ட டெல்லி அணி அடுத்த சீசனில் ‘சி’ பிரிவுக்கு தரம் இறக்கப்படுகிறது.

  கால்இறுதி ஆட்டங்கள் வருகிற 15-ந் தேதி தொடங்குகிறது. கால்இறுதி ஆட்டங்களில் விதர்பா-உத்தரகாண்ட், சவுராஷ்டிரா-உத்தரபிரதேசம், கர்நாடகா-ராஜஸ்தான், கேரளா-குஜராத் அணிகள் மோதுகின்றன.  #RanjiTrophy

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் சென்னை நேரு ஸ்டேடியத்தில் நேற்றிரவு அரங்கேறிய ஆட்டத்தில் சென்னையின் எப்.சி. அணி, கேரளா பிளாஸ்டர்சை அணிகளுக்கு இடையேயான ஆட்டம் டிராவில் முடிந்தது. #ISL2018 #ChennaiFC #KeralaBlaster
  சென்னை:

  10 அணிகள் இடையிலான 5-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் சென்னை நேரு ஸ்டேடியத்தில் நேற்றிரவு அரங்கேறிய 43-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான சென்னையின் எப்.சி. அணி, கேரளா பிளாஸ்டர்சை எதிர்கொண்டது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் சென்னை அணியினர் 14 முறை எதிரணியின் கோல் எல்லையை நோக்கி ஷாட் அடித்த போதிலும் அது ஏமாற்றத்திலேயே முடிந்தது. கோல் அடிக்க கிடைத்த பல நல்ல வாய்ப்புகளில், சென்னை அணியினர் அவசர கோலத்தில் செயல்பட்டு பந்தை கோல் கம்பத்துக்கு வெளியில் அடித்து வீணடித்தனர். முடிவில் இந்த ஆட்டம் கோல் எதுவுமின்றி (0-0) டிராவில் முடிந்தது. இந்த சீசனில் கோலின்றி டிரா ஆன 4-வது ஆட்டம் இதுவாகும்.  உள்ளூரில் 4-வது ஆட்டத்தில் ஆடிய சென்னை அணி இந்த சீசனில் சொந்த மண்ணில் வெற்றி கணக்கை தொடங்காத சோகம் தொடருகிறது. மொத்தத்தில் சென்னை அணி இதுவரை 9 ஆட்டங்களில் விளையாடி ஒரு வெற்றி, 2 டிரா, 6 தோல்வி கண்டுள்ளது. இதனால் சென்னை அணி அடுத்த சுற்றுக்கு (பிளே-ஆப்) முன்னேறுவது சிக்கலாகி இருக்கிறது. 9-வது ஆட்டத்தில் ஆடிய கேரளா அணி ஒரு வெற்றி, 5 டிரா, 3 தோல்வியை பெற்றுள்ளது.

  பெங்களூருவில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் லீக் ஆட்டத்தில் பெங்களூரு எப்.சி.-எப்.சி.புனே சிட்டி அணிகள் மோதுகின்றன.  #ISL2018 #ChennaiFC #KeralaBlaster
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் கோவா-கவுகாத்தி அணிகள் இடையிலான ஆட்டம் யாருக்கும் வெற்றி தோல்வியின்றி ‘டிரா’வில் முடிந்தது. #ISL2018 #NorthEastUnited #FCGoa
  கவுகாத்தி:

  5-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் சென்னையின் எப்.சி., பெங்களூரு எப்.சி., நார்த் ஈஸ்ட் யுனைடெட் (கவுகாத்தி), எப்.சி.கோவா, மும்பை சிட்டி, ஜாம்ஷெட்பூர், அட்லெடிகோ டி கொல்கத்தா, கேரளா பிளாஸ்டர்ஸ், டெல்லி டைனமோஸ், புனே சிட்டி ஆகிய 10 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் உள்ளூர், வெளியூர் அடிப்படையில் 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு முன்னேறும்.  இந்த நிலையில் கவுகாத்தியில் நேற்றிரவு நடந்த 3-வது லீக் ஆட்டத்தில் கவுகாத்தி-கோவா அணிகள் மல்லுகட்டின. இதில் பலம் வாய்ந்த கோவா அணி முழுமையாக ஆதிக்கம் செலுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கவுகாத்தி அணியினர் ஈடுகொடுத்து ஆடினர். கோவா கோல் கீப்பர் முகமது நவாஸ் செய்த தவறால் 8-வது நிமிடத்தில் கவுகாத்தி வீரர் பெடரிகோ காலெகோ கோல் அடித்தார். அதாவது தனது பகுதியை விட்டு வெளியே வந்து பந்தை பிடித்த முகமது நவாஸ் அது ஆப்-சைடு என்று அறிவிக்கப்படும் என்று நினைத்தார். ஆனால் நடுவரோ உடனடியாக பிரிகிக் வாய்ப்பு வழங்கினார். அவர் திரும்புவதற்குள் பந்தை பெடரிகோ கோலாக மாற்றினார்.

  இதன் பின்னர் 14-வது நிமிடத்தில் பதிலடி கொடுத்த கோவா அணியின் நட்சத்திர வீரர் பெரன் கோராமினோஸ் கோல் அடித்தார். 39-வது நிமிடத்தில் எதிரணியின் மூன்று தடுப்பாட்டக்காரர்களை ஏமாற்றி கோராமினோஸ் மீண்டும் ஒரு கோல் போட்டார். இதனால் 2-1 என்ற கோல் கணக்கில் கோவா முன்னிலை பெற்றது. ஆனால் இந்த முன்னிலையை அவர்கள் தக்க வைத்துக் கொள்ள தவறினர். 53-வது நிமிடத்தில் கவுகாத்தி கேப்டன் பார்த்தோலோம் ஓக்பேச் தலையால் முட்டி கோல் அடித்தார். முடிவில் இந்த ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் டிரா ஆனது.

  மும்பையில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கும் லீக்கில் மும்பை சிட்டி-ஜாம்ஷெட்பூர் அணிகள் மோதுகின்றன. #ISL2018 #NorthEastUnited #FCGoa 
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அர்ஜென்டினா அணி ஐஸ்லாந்திடம் டிரா கண்டது அவமானமாகும். இந்த ஆட்டத்தில் நான் எந்த வீரரையும் குறை சொல்ல மாட்டேன் என அர்ஜென்டினா அணியின் முன்னாள் ஜாம்பவான் மரடோனா கூறியுள்ளார். #DiegoMarodona #Argentina
  மாஸ்கோ:

  உலக கோப்பை கால்பந்து போட்டியில் தனது முதலாவது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் அர்ஜென்டினா அணி 1-1 என்ற கோல் கணக்கில் குட்டி தேசமான ஐஸ்லாந்துடன் டிரா கண்டது. இந்த ஆட்டத்தில் அர்ஜென்டினா அணியின் நட்சத்திர வீரர் லயோனல் மெஸ்சி பெனால்டி வாய்ப்பை கோட்டை விட்டார்.  இந்த ஆட்டம் குறித்து அர்ஜென்டினா அணியின் முன்னாள் ஜாம்பவான் மரடோனா கருத்து தெரிவிக்கையில்,

  ‘ஐஸ்லாந்து அணியுடன் டிரா கண்டது அவமானமாகும். இந்த ஆட்டத்தில் நான் எந்த வீரரையும் குறை சொல்ல மாட்டேன். மெஸ்சி பெனால்டி வாய்ப்பை தவறவிட்டது தான் வெற்றி கிடைக்காமல் போனதற்கு காரணம் என்று நினைக்கவில்லை. எதிரணிக்கு தகுந்த படி ஆட்ட யுக்தியை அர்ஜென்டினா அணியின் பயிற்சியாளர் அமல்படுத்தவில்லை. இந்த மாதிரி தொடர்ந்து விளையாடினால் அர்ஜென்டினா அணி நாடு திரும்ப முடியாது’ என்றார்.  #DiegoMarodona #Argentina
  ×