என் மலர்

  நீங்கள் தேடியது "ISL2018"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டி மும்பையில் இன்று இரவு நடைபெறும் 50-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னையின் எப்.சி. அணி, மும்பை சிட்டியை எதிர்கொள்கிறது. #ISL2018 #ChennaiyinFC #MumbaiCity
  மும்பை:

  10 அணிகள் இடையிலான 5-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் மும்பையில் இன்று இரவு 7.30 மணிக்கு அரங்கேறும் 50-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னையின் எப்.சி. அணி, மும்பை சிட்டியை எதிர்கொள்கிறது. தொடர்ந்து சறுக்கலை சந்தித்து வரும் சென்னை அணி (10 ஆட்டத்தில் ஒரு வெற்றி, 2 டிரா, 7 தோல்வி) எஞ்சிய 8 லீக்கிலும் வெற்றி பெற்றால் மட்டுமே அடுத்த சுற்றை பற்றி நினைத்து பார்க்க முடியும். இந்த ஆட்டத்தில் இருந்தாவது சென்னை அணி எழுச்சி காணுமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். 5 வெற்றி, 2 தோல்வி, 2 டிராவுடன் 17 புள்ளிகள் பெற்றுள்ள மும்பை சிட்டி அணி கடந்த 5 ஆட்டங்களில் தோல்வியே சந்திக்கவில்லை. சொந்த ஊரிலும் வெற்றிப்பயணத்தை நீட்டிக்க அவர்கள் தீவிரம் காட்டுவார்கள்.  இதற்கிடையே கவுகாத்தியில் நேற்றிரவு நடந்த நார்த் ஈஸ்ட் யுனைடெட் (கவுகாத்தி)-பெங்களூரு எப்.சி. அணிகள் இடையிலான ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. கடைசி நிமிடத்தில் பெங்களூரு வீரர் சென்சோ கையல்ட்ஷென், பிரமாதமாக ஒரு கோல் அடித்து தங்கள் அணியை தோல்வியில் இருந்து காப்பாற்றினார். பெங்களூரு அணி 7 வெற்றி, 2 டிரா என்று 23 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது. #ISL2018 #ChennaiyinFC #MumbaiCity 
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் சென்னை நேரு ஸ்டேடியத்தில் நேற்றிரவு நடைபெற்ற ஆட்டத்தில் கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி போராடி தோல்வி அடைந்தது. #ISL2018 #ChennaiyinFC #ATK
  சென்னை:

  10 அணிகள் இடையிலான 5-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் சென்னை நேரு ஸ்டேடியத்தில் நேற்றிரவு நடந்த 46-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னையின் எப்.சி. அணி, முன்னாள் சாம்பியன் அட்லெடிகோ டி கொல்கத்தாவுடன் மல்லுகட்டியது.

  விறுவிறுப்பான இந்த மோதலில் 14-வது நிமிடத்தில் கொல்கத்தா வீரர் ஜெயேஷ் ரனே நீண்ட தூரத்தில் இருந்து சூப்பராக கோல் அடித்தார். 24-வது நிமிடத்தில் சென்னை வீரர் தோய்சிங் கோல் திருப்பி ஆட்டத்தை சமனுக்கு கொண்டு வந்தார். 44-வது நிமிடத்தில் கொல்கத்தா வீரர் ஹிதேஷ் ஷர்மா அருகில் வந்து இலக்கை நோக்கி அடித்த ஷாட்டை, சென்னை வீரர் சபியா பந்தை கையால் தடுத்து விட்டார். இதனால் வழங்கப்பட்ட பெனால்டியை கொல்கத்தா அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் மானுல் லான்ஜரோட் கோலாக்கினார்.  பிற்பாதியில் சென்னை வீரர்கள் வேகத்தை தீவிரப்படுத்தினர். சென்னை வீரர்கள் பக்கமே பந்து கொஞ்சம் அதிகமாக (53 சதவீதம்) சுற்றிக் கொண்டிருந்தாலும் அவர்களுக்கு அதிர்ஷ்டம் இல்லை. இந்த சூழலில் 80-வது நிமிடத்தில் கோல்பகுதியில் வைத்து பந்தை தடுக்க சென்னை வீரர்களில் சிலர் ஒருசேர முயற்சித்த போது, அந்த குழப்பத்திற்கு இடையே பந்து கார்லஸ் சலோமின் கையில் பட்டு விட்டது. இதனால் மறுபடியும் கொல்கத்தா அணிக்கு பெனால்டி வாய்ப்பு கொடுக்கப்பட்டது. இந்த பெனால்டியையும் லான்ஜரோட் கோலாக மாற்றினார். இதன் பின்னர் 88-வது நிமிடத்தில் சென்னை வீரர் இசாக் வன்மல்சவ்மா அடித்த கோல் தோல்வியின் வித்தியாசத்தை குறைக்க மட்டுமே உதவியது.

  முடிவில் சென்னை அணி 2-3 என்ற கோல் கணக்கில் போராடி தோல்வி அடைந்தது. தொடர்ந்து சறுக்கலை சந்தித்து வரும் சென்னை அணி 10 ஆட்டங்களில் விளையாடி ஒரு வெற்றி, 2 டிரா, 7 தோல்வி என்று 5 புள்ளிகளுடன் 8-வது இடத்தில் உள்ளது. உள்ளூரில் இந்த சீசனில் இதுவரை சென்னை அணி வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கொல்கத்தா அணிக்கு இது 4-வது வெற்றியாகும். இன்றைய ஆட்டத்தில் டெல்லி டைனமோஸ்-மும்பை சிட்டி (இரவு 7.30 மணி) அணிகள் மோதுகின்றன.  #ISL2018 #ChennaiyinFC #ATK 
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டி தொடரில் இன்று இரவு சென்னையில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் சென்னையின் எப்.சி.-அட்லெடிகோ டி கொல்கத்தா அணிகள் மோதுகின்றன. #ChennaiyinFC #ATK #ISL2018
  சென்னை:

  10 அணிகள் இடையிலான 5-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

  இந்த போட்டி தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெறும் 46-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான சென்னையின் எப்.சி. அணி, முன்னாள் சாம்பியன் அட்லெடிகோ டி கொல்கத்தாவை எதிர்கொள்கிறது.

  இந்த சீசனில் சென்னை அணி எதிர்பார்ப்புக்கு தகுந்த படி சிறப்பாக விளையாடவில்லை. தடுப்பு ஆட்டத்தில் பலவீனமாக காணப்படும் சென்னை அணி கோல் அடிப்பதிலும் ஏமாற்றம் அளித்து வருகிறது. சென்னை அணி இதுவரை 9 ஆட்டத்தில் விளையாடி ஒரு வெற்றி, 2 டிரா, 6 தோல்வி கண்டுள்ளது. அத்துடன் சென்னை அணி 16 கோல்கள் விட்டுக்கொடுத்து இருக்கிறது. உள்ளூரில் 4 ஆட்டங்களில் விளையாடி இருக்கும் சென்னை அணி ஒன்றில் கூட வெற்றியை ருசிக்கவில்லை.

  கொல்கத்தா அணி 9 ஆட்டத்தில் ஆடி 3 வெற்றி, 3 டிரா, 3 தோல்வி கண்டுள்ளது. அந்த அணியின் தடுப்பு ஆட்டம் அருமையாக இருக்கிறது. சொந்த ஊரில் நடந்த முந்தைய லீக் ஆட்டத்தில் கொல்கத்தா அணி 2-1 என்ற கோல் கணக்கில் சென்னை அணியை வீழ்த்தியது. அந்த நம்பிக்கையுடன் கொல்கத்தா அணி களம் இறங்கும். அதேநேரத்தில் சென்னை அணி முந்தைய ஆட்டத்தில் கண்ட தோல்விக்கு பதிலடி கொடுக்க தீவிரம் காட்டும். எனவே இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

  இந்த நிலையில் பெங்களூரு எப்.சி. அணியின் ரசிகர்கள் போட்டி நடுவர்களை திட்டியதற்காக பெங்களூரு எப்.சி. அணிக்கு ரூ.15 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை பெங்களூருவில் நடந்த எப்.சி.புனே சிட்டி அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தின் போது பெங்களூரு அணியின் ரசிகர்கள் தொடர்ந்து நடுவர்களுக்கு எதிராக குரல் எழுப்பினார்கள். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்திய இந்திய கால்பந்து சம்மேளன ஒழுங்கு நடவடிக்கை குழு இந்த அபராதத்தை விதித்துள்ளது. ரசிகர்களின் மோசமான நடத்தைக்காக ஐ.எஸ்.எல். போட்டியில் ஒரு அணிக்கு அபராதம் விதிக்கப்படுவது இதுவே முதல்முறையாகும்.

  இதற்கிடையில் ஜாம்ஷெட்பூரில் நேற்று இரவு நடந்த 45-வது லீக் ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூர் எப்.சி.-நார்த் ஈஸ்ட் யுனைடெட் (கவுகாத்தி) எப்.சி. அணிகள் சந்தித்தன. இந்த ஆட்டம் கோல் எதுவுமின்றி டிராவில் முடிந்தது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் சென்னை நேரு ஸ்டேடியத்தில் நேற்றிரவு அரங்கேறிய ஆட்டத்தில் சென்னையின் எப்.சி. அணி, கேரளா பிளாஸ்டர்சை அணிகளுக்கு இடையேயான ஆட்டம் டிராவில் முடிந்தது. #ISL2018 #ChennaiFC #KeralaBlaster
  சென்னை:

  10 அணிகள் இடையிலான 5-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் சென்னை நேரு ஸ்டேடியத்தில் நேற்றிரவு அரங்கேறிய 43-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான சென்னையின் எப்.சி. அணி, கேரளா பிளாஸ்டர்சை எதிர்கொண்டது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் சென்னை அணியினர் 14 முறை எதிரணியின் கோல் எல்லையை நோக்கி ஷாட் அடித்த போதிலும் அது ஏமாற்றத்திலேயே முடிந்தது. கோல் அடிக்க கிடைத்த பல நல்ல வாய்ப்புகளில், சென்னை அணியினர் அவசர கோலத்தில் செயல்பட்டு பந்தை கோல் கம்பத்துக்கு வெளியில் அடித்து வீணடித்தனர். முடிவில் இந்த ஆட்டம் கோல் எதுவுமின்றி (0-0) டிராவில் முடிந்தது. இந்த சீசனில் கோலின்றி டிரா ஆன 4-வது ஆட்டம் இதுவாகும்.  உள்ளூரில் 4-வது ஆட்டத்தில் ஆடிய சென்னை அணி இந்த சீசனில் சொந்த மண்ணில் வெற்றி கணக்கை தொடங்காத சோகம் தொடருகிறது. மொத்தத்தில் சென்னை அணி இதுவரை 9 ஆட்டங்களில் விளையாடி ஒரு வெற்றி, 2 டிரா, 6 தோல்வி கண்டுள்ளது. இதனால் சென்னை அணி அடுத்த சுற்றுக்கு (பிளே-ஆப்) முன்னேறுவது சிக்கலாகி இருக்கிறது. 9-வது ஆட்டத்தில் ஆடிய கேரளா அணி ஒரு வெற்றி, 5 டிரா, 3 தோல்வியை பெற்றுள்ளது.

  பெங்களூருவில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் லீக் ஆட்டத்தில் பெங்களூரு எப்.சி.-எப்.சி.புனே சிட்டி அணிகள் மோதுகின்றன.  #ISL2018 #ChennaiFC #KeralaBlaster
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஐ.எஸ்.எல். கால்பந்து 10-வது லீக் ஆட்டத்தில் டெல்லி டைனமோஸ்-அட்லெடிகோ டி கொல்கத்தா அணிகள் இன்று மோதுகின்றன. #ISL2018 #DelhiDynamos #AtleticoDeKolkata
  புதுடெல்லி:

  10 அணிகள் இடையிலான 5-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி கடந்த மாதம் 29-ந்தேதி தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்திய கால்பந்து அணி சீனாவுடன் சர்வதேச நட்புறவு போட்டியில் ஆடியதால் அதற்கு ஏற்றவாறு ஐ.எஸ்.எல். தொடரில் 10 நாட்கள் இடைவெளி விடப்பட்டு இருந்தது.  இந்த நிலையில் 10 நாட்கள் ஓய்வுக்கு பிறகு இன்று மீண்டும் போட்டி தொடங்குகிறது. டெல்லி நேரு ஸ்டேடியத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு அரங்கேறும் 10-வது லீக் ஆட்டத்தில் டெல்லி டைனமோஸ்-அட்லெடிகோ டி கொல்கத்தா அணிகள் மோதுகின்றன. முன்னாள் சாம்பியனான கொல்கத்தா அணி இதுவரை ஆடியுள்ள 2 ஆட்டங்களிலும் (கேரளா, கவுகாத்திக்கு எதிராக) தோல்வியை தழுவியுள்ளது. டெல்லி அணி தனது முதல் ஆட்டத்தில் புனே சிட்டி அணியுடன் டிரா கண்டது. இரு அணிகளும் இந்த சீசனில் தங்களது முதலாவது வெற்றிக்கு வரிந்து கட்டும் என்பதால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது. 
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பெங்களூருவில் நடைபெற்ற ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் பெங்களூரு எப்.சி.- ஜாம்ஷெட்பூர் எப்.சி. அணிக்கான ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் டிரா ஆனது. #ISL2018 # Bengaluru #Jamshedpur
  பெங்களூரு:

  10 அணிகள் இடையிலான 5-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பெங்களூருவில் நேற்றிரவு நடந்த 9-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு எப்.சி.- ஜாம்ஷெட்பூர் எப்.சி. அணிகள் மோதின.  பரபரப்பான இந்த ஆட்டத்தில் பெங்களூரு அணி வெற்றி நோக்கி பயணித்த நிலையில், கடைசி நிமிடத்தில் ஜாம்ஷெட்பூர் வீரர் செர்ஜியோ சிடோன்சா கோல் போட்டு ஆட்டத்தை சமனுக்கு கொண்டு வந்தார். முடிவில் இந்த ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் டிரா ஆனது. பெங்களூரு அணியில் நிஷூ குமாரும் (45-வது நிமிடம்), சுனில் சேத்ரியும் (88-வது நிமிடம்) கோல் போட்டனர்.

  இந்த தொடரில் அடுத்த 10 நாட்கள் ஓய்வாகும். 17-ந் தேதி நடக்கும் அடுத்த ஆட்டத்தில் டெல்லி-கொல்கத்தா அணிகள் மோதுகின்றன. #ISL2018 # Bengaluru #Jamshedpur
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியை ஏமாற்றத்துடன் தொடங்கி உள்ள சென்னையின் எப்.சி. அணி தனது முதல் லீக்கில் பெங்களூருவிடம் வீழ்ந்தது. #ISL2018 #BangaluruFC #ChennaiyinFC
  பெங்களூரு:

  5-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் சென்னையின் எப்.சி., பெங்களூரு எப்.சி., நார்த் ஈஸ்ட் யுனைடெட் (கவுகாத்தி), எப்.சி.கோவா, மும்பை சிட்டி, ஜாம்ஷெட்பூர், அட்லெடிகோ டி கொல்கத்தா, கேரளா பிளாஸ்டர்ஸ், டெல்லி டைனமோஸ், புனே சிட்டி ஆகிய 10 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் உள்ளூர், வெளியூர் அடிப்படையில் 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்குள் நுழையும்.  இந்த நிலையில் பெங்களூருவில் நேற்றிரவு நடந்த 2-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னையின் எப்.சி. அணி, பெங்களூரு எப்.சி.யை சந்தித்தது. இரு அணிகளும் தொடக்கத்தில் இருந்தே தாக்குதல் பாணியை கடைபிடித்தன. 19-வது நிமிடத்தில் சென்னை அணியின் நட்சத்திர வீரர் ஜெஜெ லால்பெகுலா பந்துடன் இலக்கை வெகுவாக நெருங்கினார். அவர் தைரியமாக வலையை நோக்கி பந்தை உதைத்திருக்க வேண்டும். அதை விடுத்து கம்பம் அருகில் நின்ற சக வீரர் ஜெர்மன்பிரீத்சிங் நோக்கி அடிக்க, பந்து வெளியே ஓடி வாய்ப்பு வீணானது. இதே போல் 33-வது நிமிடத்தில் மற்றொரு வாய்ப்பையும் லால்பெகுலா நழுவ விட்டார்.

  41-வது நிமிடத்தில் பெங்களூரு அணி கோல் போட்டு உள்ளூர் ரசிகர்களை குதூகலப்படுத்தியது. சக வீரர் ஸிஸ்கோ தட்டிக்கொடுத்த பந்தை, மிகு சூப்பராக அடித்து கோலாக்கினார். இதனால் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்ற பெங்களூரு அணி அதை கடைசி வரை தக்க வைத்துக் கொண்டது.

  பந்து அதிக நேரம் (56 சதவீதம்) சென்னை வீரர்கள் வசமே சுற்றிக்கொண்டிருந்தது. ஷாட்டுகள் அடிப்பதிலும் எதிரணியை விட (9 முறை) சென்னையின் கையே ஓங்கி இருந்தது. ஆனால் பதில் கோல் திருப்ப எடுத்த முயற்சிக்கு பலன் கிட்டவில்லை. விறுவிறுப்பான ஆட்டத்தின் முடிவில் பெங்களூரு அணி 1-0 என்ற கோல் கணக்கில் சென்னை அணியை தோற்கடித்தது. இதன் மூலம் கடந்த ஆண்டு இறுதி ஆட்டத்தில் சென்னையிடம் அடைந்த தோல்விக்கும் அந்த அணி பழிதீர்த்துக் கொண்டது.

  கவுகாத்தியில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கும் 3-வது லீக் ஆட்டத்தில் கவுகாத்தி- கோவா அணிகள் மோதுகின்றன.  #ISL2018 #BangaluruFC #ChennaiyinFC
  ×