என் மலர்
நீங்கள் தேடியது "Mumbai City"
- கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
- கொல்கத்தாவில் நடைபெற்ற அந்த ஆட்டத்தில் ஈஸ்ட் பெங்கால் - மும்பை சிட்டி அணிகள் மோதின.
கொல்கத்தா:
13 அணிகளுக்கு இடையிலான 11-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
இந்நிலையில் இந்த தொடரில் ஒரு லீக் ஆட்டம் நடைபெற்றது. கொல்கத்தாவில் நடைபெற்ற அந்த ஆட்டத்தில் ஈஸ்ட் பெங்கால் - மும்பை சிட்டி அணிகள் மோதின.
இந்த ஆட்டத்தின் முதல் பாதியில் மும்பை அணி இரு கோல் அடித்து 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது. தொடர்ந்து நடைபெற்ற 2வது பாதி ஆட்டத்தில் ஈஸ்ட் பெங்கால் அணி அடுத்தடுத்து 2 கோல்களை அடித்து ஆட்டத்தை சமனுக்கு கொண்டு வந்தது. தொடர்ந்து இந்த ஆட்டம் டிராவில் முடியும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மும்பை அணி மேலும் ஒரு கோல் அடித்து 3-2 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.
இறுதியில் இந்த ஆட்டத்தில் ஆட்ட நேர முடிவில் 3-2 என்ற கோல் கணக்கில் ஈஸ்ட் பெங்கால் அணியை வீழ்த்தி மும்பை சிட்டி எப்.சி வெற்றி பெற்றது.
5-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரில் நேற்றிரவு மும்பையில் நடந்த 50-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னையின் எப்.சி. அணி, மும்பை சிட்டியுடன் மோதியது. உள்ளூர் ரசிகர்களின் ஆதரவுடன் உற்சாகமாக ஆடிய மும்பை அணி வீரர்களில் 27-வது நிமிடத்தில் ராய்னியர் பெர்னாண்டஸ், 55-வது நிமிடத்தில் மோடோ சோகோவ் ஆகியோர் கோல் அடித்தனர். பந்தை கட்டுப்பாட்டில் வைப்பதிலும் (53 சதவீதம்), ஷாட் அடிப்பதிலும் (14 முறை) சென்னை அணி கொஞ்சம் ஆதிக்கம் செலுத்திய போதிலும், எதிரணியின் தடுப்பு அரணை கடைசி வரை உடைக்க முடியவில்லை.
முடிவில் மும்பை சிட்டி 2-0 என்ற கோல் கணக்கில் சென்னை அணியை தோற்கடித்தது. இதன் மூலம் மும்பை அணி 20 புள்ளிகளுடன் (6 வெற்றி, 2 டிரா, 2 தோல்வி) புள்ளி பட்டியலில் 2-வது இடத்துக்கு முன்னேறியது. அதே சமயம் ஒரு வெற்றி, 2 டிரா, 8 தோல்வி என்று வெறும் 5 புள்ளி மட்டுமே எடுத்து சொதப்பியுள்ள சென்னை அணிக்கு, அரைஇறுதி வாய்ப்பு கிட்டத்தட்ட முடிந்து போய் விட்டது. இன்றைய ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ்-புனே சிட்டி (இரவு 7.30 மணி) அணிகள் சந்திக்கின்றன. #ISL2018 #ChennaiyinFC #MumbaiCity
10 அணிகள் இடையிலான 5-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் மும்பையில் இன்று இரவு 7.30 மணிக்கு அரங்கேறும் 50-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னையின் எப்.சி. அணி, மும்பை சிட்டியை எதிர்கொள்கிறது. தொடர்ந்து சறுக்கலை சந்தித்து வரும் சென்னை அணி (10 ஆட்டத்தில் ஒரு வெற்றி, 2 டிரா, 7 தோல்வி) எஞ்சிய 8 லீக்கிலும் வெற்றி பெற்றால் மட்டுமே அடுத்த சுற்றை பற்றி நினைத்து பார்க்க முடியும். இந்த ஆட்டத்தில் இருந்தாவது சென்னை அணி எழுச்சி காணுமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். 5 வெற்றி, 2 தோல்வி, 2 டிராவுடன் 17 புள்ளிகள் பெற்றுள்ள மும்பை சிட்டி அணி கடந்த 5 ஆட்டங்களில் தோல்வியே சந்திக்கவில்லை. சொந்த ஊரிலும் வெற்றிப்பயணத்தை நீட்டிக்க அவர்கள் தீவிரம் காட்டுவார்கள்.

இதற்கிடையே கவுகாத்தியில் நேற்றிரவு நடந்த நார்த் ஈஸ்ட் யுனைடெட் (கவுகாத்தி)-பெங்களூரு எப்.சி. அணிகள் இடையிலான ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. கடைசி நிமிடத்தில் பெங்களூரு வீரர் சென்சோ கையல்ட்ஷென், பிரமாதமாக ஒரு கோல் அடித்து தங்கள் அணியை தோல்வியில் இருந்து காப்பாற்றினார். பெங்களூரு அணி 7 வெற்றி, 2 டிரா என்று 23 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது. #ISL2018 #ChennaiyinFC #MumbaiCity
5-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரில் நேற்றிரவு கவுகாத்தியில் நடந்த 32-வது லீக் ஆட்டத்தில் மும்பை சிட்டி எப்.சி. அணி 1-0 என்ற கோல் கணக்கில் நார்த் ஈஸ்ட் யுனைடெட்டை (கவுகாத்தி) வீழ்த்தி 4-வது வெற்றியை பதிவு செய்தது. வெற்றிக்குரிய கோலை 4-வது நிமிடத்தில் அர்னால்டு இசோகோ அடித்தார். கவுகாத்தி அணிக்கு இது முதலாவது தோல்வியாகும். 6-வது ஆட்டத்தில் ஆடிய அந்த அணி 3 வெற்றி, 2 டிரா, ஒரு தோல்வி என்று 11 புள்ளிகள் பெற்றுள்ளது.
இன்றைய ஆட்டத்தில் அட்லெடிகோ டி கொல்கத்தா- எப்.சி. புனே சிட்டி (இரவு 7.30 மணி) அணிகள் மோதுகின்றன. #ISL2018 #MumbaiCity #NorthEastUnited
இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து(ஐ.எஸ்.எல்.) தொடரில் மும்பையில் நேற்றிரவு அரங்கேறிய 20-வது லீக் ஆட்டத்தில் மும்பை சிட்டி அணி 2-0 என்ற கோல் கணக்கில் டெல்லி டைனமோசை தோற்கடித்து 2-வது வெற்றியை பெற்றது. மோடோ சோகோவ் (30-வது நிமிடம்), அர்னால்டு இசோகோ (77-வது நிமிடம்) ஆகியோர் கோல் போட்டு உள்ளூர் ரசிகர்களை குதூகலப்படுத்தினர். இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கும் லீக் ஆட்டத்தில் கோவா-புனே அணிகள் சந்திக்கின்றன.
மராட்டியத்தில் பருவமழை மீண்டும் தீவிரமடைந்து உள்ளது. கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாநிலம் முழுவதும் பலத்த மழை பெய்தது. இந்த மழை இரவு மேலும் தீவிரம் அடைந்தது. இரவு முழுவதும் கனமழை வெளுத்து வாங்கியது. விடிய, விடிய பேய் மழை கொட்டி தீர்த்தது.
அதன்பின்னரும் மழையின் வேகம் குறையவில்லை. நேற்று காலையிலும் பலத்த மழை பெய்து கொண்டே இருந்தது. மும்பை, தானே, பால்கர், ராய்காட் மாவட்டங்களில் நாள் முழுவதும் மழை விடாமல் பெய்து கொண்டே இருந்தது.

இதன் காரணமாக பொதுமக்கள் வீடுகளில் முடங்கினார்கள். இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது.
கொட்டி தீர்த்த கன மழையால் பல மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. குறிப்பாக மாநில தலைநகர் மும்பை வெள்ளத்தில் தத்தளிக்கிறது.
தண்டவாளங்களை வெள்ளநீர் சூழ்ந்தது. இதன் காரணமாக மும்பை மக்களின் உயிர் நாடியான மின்சார ரெயில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. மத்திய ரெயில்வேயின் மெயின், துறைமுக வழித்தடம் மற்றும் மேற்கு ரெயில்வே ஆகிய 3 வழித்தடங்களிலும் மின்சார ரெயில்கள் அரை மணி நேரம் வரையிலும் தாமதமாக இயங்கின.
கனமழை காரணமாக நேற்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
மழையின் போது, வடலா கிழக்கு பகுதியில் கட்டுமான பணி நடந்து வரும் இடத்தில் நிலச்சரிவு ஏற்பட்டது. அங்கு கட்டப்பட்டிருந்த சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. இதில் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 7 கார்கள் உள்பட 15 வாகனங்கள் பள்ளத்தில் உருண்டு மண்ணில் புதைந்தன.
மும்பை மற்றும் தானேயில் பெய்த பலத்த மழைக்கு 4 பேர் பலியானார்கள்.
நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் சாந்தாகுருசில் 23 செ.மீ. மழையும், கொலபாவில் 10 செ.மீ. மழையும் பதிவாகி இருந்தது. இதுதவிர விராரில் 18 செ.மீ., வசாயில் 18 செ.மீ., மாணிக்பூரில் 16 செ.மீ., மாண்ட்வியில் 19 செ.மீ. மழையும் பெய்து இருந்தது.
மும்பையில் அடுத்த 24 மணி நேரம் முதல் 48 மணி நேரம் வரையில் கனமழை நீடிக்க வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது. #Mumbairain #Tamilnews






