search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ISL football"

    • கடந்த இரு சீசனில் ‘பிளே-ஆப்’ சுற்றை கூட எட்டாமல் சொதப்பிய சென்னை அணியில் இந்த முறை நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன.
    • அண்மையில் தூரந்த் கோப்பை போட்டியில் சென்னை அணி கால்இறுதிவரை முன்னேறியது.

    கொல்கத்தா:

    11 அணிகள் பங்கேற்றுள்ள 9-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் முன்னாள் சாம்பியனான சென்னையின் எப்.சி. தனது முதலாவது லீக் ஆட்டத்தில், 3 முறை சாம்பியனான ஏ.டி.கே. மோகன் பகானுடன் கொல்கத்தாவில் இன்று (திங்கட்கிழமை) பலப்பரீட்சை நடத்துகிறது. கடந்த இரு சீசனில் 'பிளே-ஆப்' சுற்றை கூட எட்டாமல் சொதப்பிய சென்னை அணியில் இந்த முறை நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன.

    அண்மையில் தூரந்த் கோப்பை போட்டியில் சென்னை அணி கால்இறுதிவரை முன்னேறியது. அதில் கேப்டன் அனிருத் தபா 2 கோல்கள் அடித்தார். 3 கோல்கள் அடிக்க உதவி புரிந்தார். மற்றொரு வீரர் பீட்டர் சிலிஸ்கோவிச் 3 கோல்கள் போட்டார். இதே போல் ஐ.எஸ்.எல். போட்டியிலும் சிறப்பாக செயல்படுவதை எதிர்நோக்கி உள்ளனர்.

    சென்னை அணியின் தலைமை பயிற்சியாளர் தாமஸ் பிர்டாரிச் கூறுகையில், 'கால்பந்தில் தாக்குதல் பாணியில் ஆடுவதையும், நிறைய கோல்கள் அடிப்பதையும் விரும்புகிறேன். அதற்கு ஏற்ப வீரர்கள் தயாராக இருக்க வேண்டும். எதிரணி வீரர்கள் செய்யும் தவறுகளை நேர்த்தியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அத்துடன் நமக்குரிய சாதகமான அம்சங்களையும் சரியாக பயன்படுத்த வேண்டியது முக்கியம்' என்றார்.

    கடந்த சீசனில் இவ்விரு அணிகளும் மோதிய இரண்டு ஆட்டங்களில் ஒன்றில் கொல்கத்தா வெற்றி பெற்றிருந்தது. மற்றொரு ஆட்டம் டிராவில் முடிந்தது குறிப்பிடத்தக்கது. இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

    முன்னதாக நேற்றிரவு நடந்த ஐதராபாத் எப்.சி.- மும்பை சிட்டி அணிகள் இடையிலான பரபரப்பான ஆட்டம் 3-3 என்ற கோல் கணக்கில் 'டிரா' ஆனது.

    ஒரு கட்டத்தில் ஐதராபாத் 3-2 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றிருந்த நிலையில், 85-வது நிமிடத்தில் மும்பை வீரர் அல்பர்ட்டோ நோகுரா கோல் போாட்டு தங்கள் அணியை தோல்வியில் இருந்து காப்பாற்றினார்.

    • முதல் போட்டியில் கேரளா, ஈஸ்ட் பெங்கால் அணிகள் விளையாடின.
    • முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை.

    கொச்சி:

    ஐ.எஸ்.எல்.( இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து) போட்டி கொச்சியில் உள்ள நேரு ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது. 11 அணிகள் பங்கேற்றுள்ள இந்த தொடரின் முதல் போட்டியில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணியும், ஈஸ்ட் பெங்கால் எப்.சி அணியும் மோதின.

    முதல் பாதியில் இரு அணி வீரர்களும் கோல் அடிக்கவில்லை. 2-வது பாதி ஆட்டத்தின் 72-வது நிமிடத்தில் கேரளா வீரர் அட்ரியன் லூனா முதல் கோலை அடித்தார். தொடர்ந்து 82-வது நிமிடத்தில் அந்த அணியின் இவான் கல்யுஸ்னி 2-வது கோலை அடித்தார். பதிலுக்கு பெங்கால் அணியின் அலெக்ஸ் 88-வது நிமிடத்தில் கோல் அடித்தார்.

    89-வது நிமிடத்தில் கேரள வீரர் இவான் கல்யுஸ்னி மீண்டும் கோல் அடித்து தமது அணியின் வெற்றியை உறுதி செய்தார். இறுதியில் கேரளா அணி 3-1 என்ற கோல் கணக்கில் ஈஸ்ட் பெங்கால் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

    கால்பந்து ரசிகர்களை குஷிப்படுத்த காத்து இருக்கும் ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டி தொடரில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றும் அணி ரூ.6 கோடியையும், 2-வது இடத்தை பெறும் அணி ரூ.3 கோடியையும் பரிசாக பெறும்.
    கோவா:

    8-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி கடந்த ஆண்டு போல் கோவாவில் உள்ள 3 மைதானங்களில் ரசிகர்கள் இன்றி நடைபெறும் இந்த போட்டி அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை நீடிக்கிறது.

    இந்திய வீரர்களுடன், வெளிநாட்டினரும் இணைந்து விளையாடும் இந்த போட்டியில் நடப்பு சாம்பியன் மும்பை சிட்டி, 3 முறை சாம்பியனான ஏ.டி.கே.மோகன் பகான், 2 முறை சாம்பியனான சென்னையின் எப்.சி., பெங்களூரு, கோவா, கேரளா பிளாஸ்டர்ஸ், ஈஸ்ட் பெங்கால், நார்த் ஈஸ்ட் யுனைடெட் (கவுகாத்தி), ஒடிசா, ஐதராபாத், ஜாம்ஷெட்பூர் ஆகிய 11 அணிகள் கலந்து கொண்டு மோதுகின்றன.

    ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோதும். லீக் சுற்று முடிவில் புள்ளி பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும். இந்த முறை போட்டியில் களம் காணும் வெளிநாட்டு வீரர்களுக்கான விதிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முன்பு ஒரு போட்டியில் 5 வெளிநாட்டு வீரர்கள் களம் இறங்க முடியும். தற்போது 3 வெளிநாட்டு வீரர்கள், ஒரு ஆசிய வீரர் என மொத்தம் 4 பேருக்கு தான் வாய்ப்பு கிடைக்கும்.

    இந்த சீசனுக்காக ஒவ்வொரு அணியும் முந்தைய வீரர்களில் பலரை கழற்றி விட்டதுடன் பல புதிய வரவுகளை சேர்த்து தங்களது வலிமையை அதிகரித்து இருக்கின்றன. சென்னையின் எப்.சி. அணி நடுகள வீரர் அனிருத் தபா தலைமையில் அடியெடுத்து வைக்கிறது. அணியின் புதிய பயிற்சியாளராக பேசிதார் பாண்டோவிச் பொறுப்பேற்றுள்ளார். கோப்பையை வெல்லும் முனைப்பில் எல்லா அணிகளும் கடந்த சில வாரங்களாக தீவிர பயிற்சியின் மூலம் தங்களது திறமையை பட்டை தீட்டி இருக்கின்றன.

    தொடக்க நாளான இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் முதலாவது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான ஏ.டி.கே. மோகன் பகான் அணி, கேரளா பிளாஸ்டர்சை எதிர்கொள்கிறது. சென்னை அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் வருகிற 23-ந் தேதி ஐதராபாத்தை சந்திக்கிறது. போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

    கால்பந்து ரசிகர்களை குஷிப்படுத்த காத்து இருக்கும் இந்த போட்டி தொடரில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றும் அணி ரூ.6 கோடியையும், 2-வது இடத்தை பெறும் அணி ரூ.3 கோடியையும் பரிசாக பெறும். அரைஇறுதியில் தோல்வி காணும் அணிகளுக்கு தலா ரூ.1½ கோடி கிடைக்கும். லீக் சுற்று முடிவில் புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடிக்கும் அணிக்கு ரூ.3½ கோடி பரிசாக கிட்டும். லீக் சுற்றில் முதலிடம் பிடிக்கும் அணியே கோப்பையையும் வென்றால் மொத்தம் ரூ.9½ கோடியை பரிசாக அள்ளும்.

    ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியின் 32-வது லீக் ஆட்டத்தில் மும்பை சிட்டி எப்.சி அணி நார்த் ஈஸ்ட் யுனைடெட்டை (கவுகாத்தி) அணியை வீழ்த்தி 4-வது வெற்றியை பதிவு செய்தது. #ISL2018 #MumbaiCity #NorthEastUnited
    கவுகாத்தி:

    5-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரில் நேற்றிரவு கவுகாத்தியில் நடந்த 32-வது லீக் ஆட்டத்தில் மும்பை சிட்டி எப்.சி. அணி 1-0 என்ற கோல் கணக்கில் நார்த் ஈஸ்ட் யுனைடெட்டை (கவுகாத்தி) வீழ்த்தி 4-வது வெற்றியை பதிவு செய்தது. வெற்றிக்குரிய கோலை 4-வது நிமிடத்தில் அர்னால்டு இசோகோ அடித்தார். கவுகாத்தி அணிக்கு இது முதலாவது தோல்வியாகும். 6-வது ஆட்டத்தில் ஆடிய அந்த அணி 3 வெற்றி, 2 டிரா, ஒரு தோல்வி என்று 11 புள்ளிகள் பெற்றுள்ளது.

    இன்றைய ஆட்டத்தில் அட்லெடிகோ டி கொல்கத்தா- எப்.சி. புனே சிட்டி (இரவு 7.30 மணி) அணிகள் மோதுகின்றன. #ISL2018 #MumbaiCity #NorthEastUnited 
    ஐந்தாவது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி நாளை கொல்கத்தாவில் தொடங்குகிறது. முதல் லீக் ஆட்டத்தில் அட்லெடிகோ டி கொல்கத்தா- கேரளா பிளாஸ்டர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. #ISL2018 #ATKvKBFC
    கொல்கத்தா:

    இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி 2014-ம் ஆண்டு முதல் நடந்து வருகிறது. 5-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி நாளை கொல்கத்தாவில் தொடங்குகிறது.

    இதில் சென்னையின் எப்.சி., அட்லெடிகோ டி கொல்கத்தா, கேரளா பிளாஸ்டர்ஸ், பெங்களூரு எப்.சி., கோவா எப்.சி., புனே சிட்டி, ஜாம்ஷெட்பூர், மும்பை சிட்டி எப்.சி., டெல்லி டைனமொஸ், நார்த்ஈஸ்ட் யுனைடெட் ஆகிய 10 அணிகள் பங்கேற்கின்றன.

    ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோதும். உள்ளூர், வெளியூர் என்ற அடிப்படையில் போட்டி நடைபெறும். இதன்படி ஒவ்வொரு அணியும் தலா 18 ஆட்டங்களில் விளையாடும். அதன்படி மொத்த லீக் ஆட்டங்கள் 90 ஆகும்.

    லீக் ஆட்டங்கள் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே- ஆப் சுற்றுக்கு முன்னேறும். இந்தியாவில் 10 நகரங்களில் போட்டி நடக்கிறது.


    கொல்கத்தாவில் நாளை நடக்கும் முதல் லீக் ஆட்டத்தில் 2 முறை சாம்பியான அட்லெடிகோ டி கொல்கத்தா- கேரளா பிளாஸ்டர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    தற்போது டிசம்பர் 16-ந்தேதி வரை லீக் ஆட்டங்களான அட்டவணை வெளியிடப்பட்டு இருக்கிறது. இதில் சுமார் 2½ மாதம் காலம் 59 லீக் ஆட்டங்கள் நடைபெறுகிறது. இதில் சர்வதேச போட்டி காரணமாக 3 முறை சிறிது இடைவெளி விடப்பட்டு போட்டிகள் நடக்கிறது.

    மீதமுள்ள லீக் ஆட்டங்கள், பிளே-ஆப் சுற்று ஆட்டங்கள் மற்றும் இறுதிப்போட்டி, தேதி, இடம் விவரம் பின்னர் அறிவிக்கப்படுகிறது.

    சென்னையை தலைமையிடமாக கொண்டுள்ள சென்னையின் எப்.சி. அணி 3-வது முறையாக கோப்பையை வெல்லும் ஆர்வத்தில் உள்ளது. பிரேசிலைச் சேர்ந்த மெயில்சன் ஆல்வஸ் தலைமையிலான சென்னையின் எப்.சி. நடப்பு சாம்பியன் அந்தஸ்துடன் களம் இறங்குகிறது.


    மலேசியாவில் முதல்கட்ட பயிற்சி முகாமை முடிந்து சென்னையின் எப்.சி. பின்னர் கோவாவில் பயிற்சியை முடித்துள்ளது. தனது முதல் ஆட்டத்தில் வருகிற 30-ந்தேதி பெங்களூரு எப்.சி.யுடன் மோதுகிறது.

    இங்கிலாந்தைச் சேர்ந்த ஜான் கிரிகோரி பயிற்சியாளராக உள்ளார். அவர் கூறும்போது, இந்த முறையும் கோப்பையை வசப்படுத்துவோம் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

    சென்னையின் எப்.சி. அணியில் இந்தியாவைச் சேர்ந்த ஜெ.ஜெ. லால் பெகுக்லா, முகமது ரபி, தனபால் கணேஷ், ஜெர்மன் பிரீத்சிங், அனிருத் தபா மற்றும் பிரேசில், ஸ்பெயின், நெதர்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.

    இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி கொல்கத்தா (2014, 2016), சென்னை (2015, 2017) தலா 2 முறை கைப்பற்றி உள்ளன.  #ISL2018 #ATKvKBFC
    ×