search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pragyananda"

    • உலக கோப்பை செஸ் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ள பிரக்ஞானந்தாவுக்கு எனது வாழ்த்துக்கள்.
    • அவரின் பெருமைமிக்க தாய்க்கும் வாழ்த்துக்களை தெரிவிக்க வேண்டும்.

    உலகக்கோப்பை செஸ் போட்டி அசர்பைஜான் நாட்டின் பெக்கு நகரில் நடைபெற்று வருகிறது. கடந்த ஜூலை 30-ம் தேதி தொடங்கிய இந்த தொடர் இன்றுடம் முடிகிறது. இதில் 206 விளையாட்டு வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இந்திய கிராண்ட் மாஸ்டரான சென்னையை சேர்ந்த பிரக்ஞானந்தா உலக தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ள அமெரிக்காவின் பேபியானோ கருவானாவுடன் மோதினார்.

    முதல் ஆட்டத்தில் கருப்பு நிற காய்களுடன் விளையாடிய பிரக்ஞானந்தா 78-வது காய் நகர்த்தலில் டிரா செய்தார். அரையிறுதி சுற்றின் 2-வது ஆட்டத்தில் வெள்ளை நிற காய்களுடன் பிரக்ஞானந்தா ஆடினார். 47-வது காய் நகர்த்தலுக்கு பிறகு இந்த ஆட்டமும் 'டிரா' ஆனது.

    இரு ஆட்டங்களும் 'டிரா' ஆனதால் வெற்றியை தீர்மானிக்க டைபிரேக்கர் ஆட்டம் நடந்தது. இதில், உலகின் மூன்றாம் நிலை வீரரான பேபியானோ கருவானாவை அரை இறுதி போட்டியில் வீழ்த்தி இறுதி போட்டிக்கு பிரக்ஞானந்தா முன்னேறினார். இதனைத்தொடர்ந்து இறுதி போட்டியில் நார்வே வீரர் மேக்னஸ் கார்ல்சென்னை எதிர்த்து பிரக்ஞானந்தா விளையாட உள்ளார்.

    இந்நிலையில் பிரக்ஞானந்தா தாய்க்கு வாழ்த்துக்களை தெரிவிக்க வேண்டும் என இந்தோனேசியா செஸ் வீராங்கனை ஐரின் சுகந்தர் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    உலக கோப்பை செஸ் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ள பிரக்ஞானந்தாவுக்கு எனது வாழ்த்துக்கள். ஆனால் அவரின் பெருமைமிக்க தாய்க்கும் வாழ்த்துக்களை தெரிவிக்க வேண்டும். அவர் இல்லாமல் இது எதுவும் நடந்திருக்காது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பிரக்யானந்தா தற்போது பிளஸ்-2 கணினி அறிவியல் படித்து வருகிறார்.
    • 6 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வைகள், 9 லட்சத்திற்கும் அதிகமான லைக்குகளை பெற்றுள்ளது.

    44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் சென்னையை அடுத்த மகாபலிபுரத்தில் கடந்த ஆண்டு கோலாகலமாக நடைபெற்றது. ஜூலை 28-ந் தேதி தொடங்கி ஆகஸ்ட் 9-ந் தேதி நிறைவு பெற்ற செஸ் ஒலிம்பியாட் தொடரில் உலகம் முழுவதும் இருந்து வீரர்கள் பங்கேற்றனர். இந்த தொடர் குறித்து தற்போது வரை பல நாட்டு வீரர்களும் புகழ்ந்து பேசி வருகின்றனர்.

    இந்நிலையில் உலகின் நம்பர் 1 வீரரான கார்ல்சனை ஏற்கனவே இருமுறை தோற்கடித்து செஸ் ரசிகர்களின் கவனம் ஈர்த்த இந்தியாவின் இளம் கிராண்ட் மாஸ்டரும், சென்னையை சேர்ந்தவருமான பிரக்யானந்தா தற்போது பிளஸ்-2 கணினி அறிவியல் படித்து வருகிறார். அவர் நேற்று தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டிருந்தார். அதில், இன்று எனது 12-ம் வகுப்பு தேர்வில் ஆங்கில தேர்வுக்கான கேள்வி தாளை கொடுத்தனர். அதில் வந்த கேள்வியை பார்த்து மகிழ்ச்சி அடைந்தேன். அந்த கேள்வி என்னவென்றால், மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் எவ்வாறு நடைபெற்றது என்பதை விவரித்து வெளிநாட்டில் படிக்கும் உங்கள் நண்பருக்கு கடிதம் எழுதுங்கள் என கேள்வித்தாளில் இடம் பெற்றிருந்தது என குறிப்பிட்டிருந்தார்.

    பிரக்யானந்தாவின் இந்த பதிவு வைரலாகி வருகிறது. இதுவரை 6 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வைகள், 9 லட்சத்திற்கும் அதிகமான லைக்குகளை பெற்றுள்ளது. இதனை பார்த்த பயனர்கள் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த கேள்விக்கு நீங்கள் எவ்வளவு மதிப்பெண் பெற்றீர்கள் என்பது சுவாரஸ்யமாக இருக்கும். முடிவுகள் வெளிவந்தவுடன் பகிரவும் என பதிவிட்டிருந்

    • செஸ் ஒலிம்பியாட் தனிநபர் பிரிவில் தமிழக வீரர் குகேஷ், நிகில் சரின் ஆகியோர் தங்கம் வென்றனர்.
    • தமிழக வீரர் பிரக்ஞானந்தா வெண்கலப் பதக்கம் வென்றார்.

    சென்னை:

    44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் கடந்த மாதம் 28-ம் தேதி கோலாகலமாக தொடங்கியது. 11 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியில் ஓபன் மற்றும் பெண்கள் பிரிவில் இந்தியா மொத்தம் 6 அணிகளை களம் இறக்கியுள்ளது.

    கடந்த 10 நாட்களுக்கு மேலாக பிரம்மாண்டமாக நடைபெற்று வந்த செஸ் ஒலிம்பியாட்டின் கோலாகலமான நிறைவு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று நடைபெறுகிறது.

    இறுதி நாளான இன்று இந்திய அணி 2 வெண்கல பதக்கம் வென்று அசத்தியுள்ளது. செஸ் ஒலிம்பியாடில் ஆடவர், மகளிர் என இரண்டு பிரிவிலும் வெண்கலப் பதக்கம் வென்று இந்திய அணி அசத்தியுள்ளது.

    இந்நிலையில், ஆடவர் இந்தியா பி அணியில் இடம்பெற்றுள்ள பிரக்ஞானந்தா, குகேஷ், நிஹல் சரின், எரிகேசி அர்ஜுன் ஆகியோர் விளையாடினர்.

    இதில் தமிழக வீரர் குகேஷ், நிகில் சரின் ஆகியோர் தங்கப்பதக்கம் வென்று அசத்தினர். மேலும், எரிகேசி அர்ஜுன் வெள்ளி வென்றார். பிரக்ஞானந்தா வெண்கலம் வென்றார்.

    தனிநபர் பிரிவில் வைஷாலி, தானியா சச் தேவ், திவ்யா தேஷ்முக் ஆக்யோரும் வெண்கலம் வென்று அசத்தினர்.

    • நார்வே செஸ் தொடரில் வென்று மீண்டும் இந்தியாவுக்கே அவர் புகழ் சேர்த்துள்ளார்
    • இன்னும் பல உலக சாதனை படைத்து இந்திய மண்ணிற்கு பெருமை சேர்க்க வாழ்த்து

    நார்வேயில் நடைபெற்ற குரூப் ஏ ஓபன் செஸ் போட்டித் தொடரில் தமிழகத்தை சேர்ந்த இந்திய இளம்வீரர் பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டம் வென்றார். மொத்தம் 9 சுற்றுக்கள் நடைபெற்ற இந்த போட்டியில் 6 போட்டிகளில் வெற்றி, 3 போட்டிகளில் டிரா என 7.5 புள்ளிகள் பெற்று பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.

    இதனையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரக்ஞானந்தாவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமது டுவிட்டர் பதிவில் அவர் தெரிவித்துள்ளதாவது:

    சில மாத இடைவெளியில் உலகின் நம்பர் 1 வீரரான மேக்னஸ் கார்ல்சனை இரு முறை வீழ்த்தி, உலகை வியப்பில் ஆழ்த்திய நம் சென்னைச் சிறுவன் பிரக்ஞானந்தா, தற்போது நார்வே செஸ் தொடரில் வென்று மீண்டும் இந்தியாவுக்கே புகழ் சேர்த்துள்ளார். வெற்றிகளும் புகழ்மாலைகளும் மென்மேலும் குவியட்டும்

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    இது போல் தெலுங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் டாக்டர் திருமதி.தமிழிசை சௌந்தரராஜன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,

    நார்வே செஸ் குரூப் ஏ ஓபன் செஸ் தொடரில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்று தமிழ்நாட்டிற்கும் நம் இந்திய மண்ணிற்கும் பெருமை சேர்த்த செஸ் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவிற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். இன்னும் பல உலக சாதனை படைத்து இந்திய மண்ணிற்கு பெருமை சேர்க்க எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    ×