என் மலர்
நீங்கள் தேடியது "chess player"
- மொத்தம் 8 சுற்றுகளைக் கொண்ட இப்போட்டியின் முதல் சுற்று நடைபெற்றது.
- தீப்தயன் கோஷ் மற்றும் அரோண்யக் கோஷ் ஆகியோரும் முதல் சுற்றில் வெற்றி பெற்று இரண்டாம் சுற்றுக்கு முன்னேறினர்.
ஃபிடே உலகக் கோப்பை 2025 செஸ் தொடர் கோவாவில் நடைபெற்று வருகிறது. இதில் 82 நாடுகளைச் சேர்ந்த 206 வீரர்கள் விளையாடுகிறார்கள்.
மொத்தம் 8 சுற்றுகளைக் கொண்ட இப்போட்டியின் முதல் சுற்றில், இந்திய வீரர் எஸ்.எல். நாராயணன் பெருவின் ஸ்டீவன் ரோஜாஸை எதிர்கொண்டார்.
போட்டியில் முதல் இரண்டு ஆட்டங்கள் டிராவில் முடிந்த நிலையில் டைபிரேக்கரில் நாராயணன் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.
நாராயணனைத் தொடர்ந்து, தீப்தயன் கோஷ் மற்றும் அரோண்யக் கோஷ் ஆகியோரும் முதல் சுற்றில் வெற்றி பெற்று இரண்டாம் சுற்றுக்கு முன்னேறினர்.
- இந்தியாவின் 90-வது மற்றும் தமிழ்நாட்டின் 35-வது கிராண்ட்மாஸ்டர் ஆனார்.
- சூரியன் உதிக்கும் போது இன்னும் பல கிராண்ட்மாஸ்டர்கள் உருவாகின்றனர்.
சென்னையைச் சேர்ந்த 16 வயது இளம் செஸ் வீரர் ஏ.ஆர்.இளம்பரிதி. இவர் போஸ்னியா மற்றும் ஹெர்சகோவினாவில் நடந்த பிஜெல்ஜினா ஓபன் செஸ் தொடரில் விளையாடினார். இந்த போட்டியில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றார்.
இதன்மூலம் 16 வயதில் சாம்பியன் பட்டத்தை வென்று இளம்பரிதி சாதனை படைத்துள்ளார். மேலும் தமிழ்நாட்டின் விளையாட்டு மேம்பாட்டு ஆணைய ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்ற இவர், இந்தியாவின் 90-வது மற்றும் தமிழ்நாட்டின் 35-வது கிராண்ட்மாஸ்டர் ஆனார்.
இந்நிலையில் அவருக்கு எக்ஸ் பக்கத்தில் பாராட்டு தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின், "சதுரங்கத்தில் தமிழ்நாட்டின் 35வது கிராண்ட்மாஸ்டராக இளம்பரிதி சாதனை படைத்துள்ளார்.
இதன் மூலம் தமிழ்நாட்டின் சாம்பியன் கிரீடத்தில் அவர் மற்றொரு ரத்தினத்தைச் சேர்த்துள்ளார். தமிழ்நாடு சதுரங்கத்தில் சூரியன் உதிக்கும் போது இன்னும் பல கிராண்ட்மாஸ்டர்கள் உருவாகின்றனர்." என்று பதிவிட்டுள்ளார்.
- சென்னையைச் சேர்ந்த 16 வயது இளம் செஸ் வீரர் ஏ.ஆர்.இளம்பரிதி.
- போஸ்னியா மற்றும் ஹெர்சகோவினாவில் நடந்த செஸ் தொடரில் விளையாடினார்.
சென்னையைச் சேர்ந்த 16 வயது இளம் செஸ் வீரர் ஏ.ஆர்.இளம்பரிதி. இவர் போஸ்னியா மற்றும் ஹெர்சகோவினாவில் நடந்த பிஜெல்ஜினா ஓபன் செஸ் தொடரில் விளையாடினார். இந்த போட்டியில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றார்.
இதன்மூலம் 16 வயதில் சாம்பியன் பட்டத்தை வென்று இளம்பரிதி சாதனை படைத்துள்ளார். மேலும் தமிழ்நாட்டின் விளையாட்டு மேம்பாட்டு ஆணைய ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்ற இவர், இந்தியாவின் 90-வது மற்றும் தமிழ்நாட்டின் 35-வது கிராண்ட்மாஸ்டர் ஆனார்.
- 1.5 புள்ளிகளை பெற்று பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.
- பிரக்ஞானந்தாவிற்கு 17லட்சம் பரிசுத்தொகை வழங்கப்பட்டுள்ளது.
உஸ்பெகிஸ்தானின் தாஷ்கென்ட் நகரில் மாஸ்டர்ஸ் கோப்பை செஸ் தொடர் நடைபெற்றது. இந்தியாவின் அர்ஜுன் எரிகைசி, பிரக்ஞானந்தா, அரவிந்த் சிதம்பரம் உட்பட உலகின் 10 முன்னணி வீரர்கள் பங்கேற்றனர்.
இந்த தொடரில் 10 சுற்றுகளின் முடிவில் மூன்று வீரர்கள் 5.5 புள்ளிகளை பெற்றதால் சாம்பியனை தீர்மானிக்க டைபிரேக்கர் ஆட்டம் நடத்தப்பட்டது. இரண்டு சுற்றுகளாக நடைபெற்ற டைபிரேக்கரில் 1.5 புள்ளிகளை பெற்று பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.
அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. சாம்பியன் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவிற்கு 17லட்சம் பரிசுத்தொகை வழங்கப்பட்டுள்ளது.
இந்த வெற்றியின் மூலம் இந்திய செஸ் வீரர்கள் தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ளதோடு, சர்வதேச செஸ் தரவரிசையில் 5வது இடத்தில் உள்ள குகேஷை பின்னுக்கு தள்ளி 4-வது இடத்திற்கு பிரக்ஞானந்தா முன்னேறியுள்ளார்.
இந்நிலையில், செஸ் வீரர் பிரக்ஞானந்தாவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவரது எக்ஸ் தள பக்கத்தில், " UzChess Cup Masters 2025 ஐ வென்று, இந்தியாவின் முதல் தரவரிசையில் கிளாசிக்கல் வீரராகவும், சர்வதேச செஸ் தரவரிசையில் நம்பர் 4 வீரராகவும் உயர்ந்ததற்கு பிரக்யானந்தாவுக்கு வாழ்த்துகள்.
ஃபார்மில் ஒரு சாம்பியன், செக்மேட்-ப்ரூஃப் கைகளில் ஒரு எதிர்காலம்" என குறிப்பிட்டுள்ளார்.
- 'செஸ்' சாதனை வீரர் பிரக்ஞானந்தா மற்றும் அவரது பெற்றோரை நேரில் அழைத்து 'மின்சார காரை பரிசாக வழங்கினார்.
- கார் பரிசு வழங்கிய தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திராவுக்கு பிரக்ஞானந்தா குடும்பத்தினர் நன்றி தெரிவித்தனர்
உலகக் கோப்பை 'செஸ்' போட்டி கடந்த ஆகஸ்ட் மாதம் அஜர்பைஜானில் நடந்தது. இந்த போட்டியில் உலகின் முதல்நிலை வீரரான மேக்னஸ் கார்ல்சனுக்கு எதிராக விளையாடிய பிரக்ஞானந்தா 2-ம் இடம் பிடித்து சாதனை படைத்தார்.
'செஸ்' வீரர் பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி உள்பட பலர் பாராட்டு தெரிவித்தனர். இந்நிலையில் மஹிந்திரா நிறுவன தலைவர் ஆனந்த் மஹிந்திரா பிரக்ஞானந்தாவை 'எக்ஸ்' வலைதளத்தில் பாராட்டினார். மேலும் பிரக்ஞானந்தாவுக்கு கார் பரிசு வழங்கப்போவதாகவும் அவர் அறிவித்திருந்தார்.
இந்நிலையில் இன்று'செஸ்' சாதனை வீரர் பிரக்ஞானந்தா மற்றும் அவரது பெற்றோரை நேரில் அழைத்து 'மஹிந்திரா XUV 400' மின்சார காரை மஹிந்திரா நிறுவன அதிபர் ஆனந்த் மஹிந்திரா பரிசாக வழங்கினார். அதனை அவர்கள் மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்டனர்.
கார் பரிசு வழங்கிய தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திராவுக்கு பிரக்ஞானந்தா குடும்பத்தினர் நன்றி தெரிவித்துக்கொண்டனர்.
- செஸ் வீராங்கனை அமினா போட்டி நடைபெறும் இடத்திற்குள் நுழைகிறார்.
- அவர் எதிராளியின் மேசையை அணுகி செஸ் போர்டில் பாதரசம் தெளிப்பது பதிவானது.
மாஸ்கோ:
ரஷியாவின் தாகெஸ்தானில் நடந்த செஸ் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியின் போது வீராங்கனையான ஒஸ்மானோவா திடீரென நோய்வாய்ப்பட்டார். இதையடுத்து அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்த விவகாரம் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், இந்தப் போட்டியில் ரஷிய வீராங்கனை அமினா அபகராவோ தனது எதிரிக்கு விஷம் வைத்ததாக குற்றம் சாட்டப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக போட்டி அமைப்பாளர்கள் போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் அங்கிருந்த சி.சி.டி.வி. கேமராவையும் ஆய்வு செய்தனர்.
அதில், செஸ் வீராங்கனை அமினா போட்டி நடைபெறும் இடத்திற்குள் நுழைகிறார். போட்டி தொடங்கும் முன் அமினா அபகரோவா தனது எதிராளியின் மேசையை அணுகி செஸ் போர்டில் பாதரசத்தை தெளிப்பது பதிவாகியுள்ளது.
இதையடுத்து, அமினா அபகராவோவுக்கு விளையாட தடை விதிக்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
இதுதொடர்பாக அந்நாட்டு விளையாட்டு மந்திரி கூறுகையில், பலரைப் போலவே நானும் என்ன நடந்தது என்பதில் குழப்பம் அடைந்துள்ளேன். அமினா அபகரோவா போன்ற அனுபவம் வாய்ந்த போட்டியாளரின் நோக்கங்கள் புரிந்துகொள்ள முடியாதவை. அவர் நிச்சயம் இதற்கு பதிலளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
A chess tournament in the Russian republic of Dagestan took a dramatic turn when a player was accused of poisoning her opponent with mercury.
— UNITED24 Media (@United24media) August 7, 2024
Amina Abakarova approached her opponent's table before the start of the match and spilled mercury near the chessboard. pic.twitter.com/vh2YpVmpDU
- பின்னர் 5 நட்சத்திர கிராண்ட் ஹோட்டலில் கார்ல்சன் - மலோன் திருமண வரவேற்பு நடந்தது.
- 26 வயதான எல்லா விக்டோரியா மலோன் நார்வே தாய் மற்றும் அமெரிக்க தந்தைக்கு பிறந்தார்.
நார்வே நாட்டை சேர்ந்த உலகின் நம்பர் 1 செஸ் வீரர் மேக்னஸ் கார்ல்சன் [34 வயது] தனது காதலியான எல்லா விக்டோரியா மலோனை திருமணம் செய்து கொண்டார்.
நேற்று [சனிக்கிழமை] நார்வே தலைநகர் ஒஸ்லோவில் அவர்களின் திருமணம் நடந்து முடிந்துள்ளது. Holmenkollen Chapel தேவாலயத்தில் நடைபெற்ற இந்த திருமணத்தில், குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் கலந்து கொண்டதாக நார்வே ஊடகமான NRK இன் செய்திகள் தெரிவிக்கின்றன.

chess.com இன் படி, திருமணத்தில் நார்வே நாட்டு செஸ் வீரர்கள் ஜோஹன்னஸ் க்விஸ்லா மற்றும் அஸ்கில்ட் பிரைன், ஜிஎம் பீட்டர் ஹெய்ன் நீல்சன் மற்றும் ஜிஎம் ஜான் லுட்விக் ஹேமர் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் திருமணத்தின் போது நெட்பிளிக்ஸ் படக்குழுவினரும் உடன் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
பின்னர் 5 நட்சத்திர கிராண்ட் ஹோட்டலில் கார்ல்சன் - மலோன் திருமண வரவேற்பு நடந்தது. கடந்த ஆண்டு ஜெர்மனியில் நடந்த ஃப்ரீஸ்டைல் செஸ் சேலஞ்சர் நிகழ்வின் போது இவர்கள் காதலை வெளிப்படுத்தினர். அதன்பின் பல்வேறு நிகழ்வுகளில் இவர்கள் ஜோடியாக காணப்பட்டனர். கார்ல்சனின் செஸ் போட்டிகளின் போது அவருக்கு மலோன் ஆதரவளிப்பதைக் காணலாம்.

26 வயதான எல்லா விக்டோரியா மலோன் நார்வே தாய் மற்றும் அமெரிக்க தந்தைக்கு பிறந்தார். ஊடக அறிக்கைகளின்படி, அவர் ஒஸ்லோவில் வளர்ந்தார், அமெரிக்காவில் படித்தார், மேலும் சிங்கப்பூரில் பல ஆண்டுகள் வாழ்ந்தார், அங்கு அவர் நிரந்தர குடியுரிமை பெற்றுள்ளார்.
மலோனுடனான திருமணம் கார்ல்சனின் வாழ்க்கையில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல் ஆகும். வரலாற்றில் மிகச்சிறந்த செஸ் வீரர்களில் ஒருவராக பரவலாகக் கருதப்படும் கார்ல்சன், ஐந்து உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டங்கள் உட்பட ஏராளமான அங்கீகாரங்களைப் பெற்றுள்ளார்.

- கார்ல்சனை தோற்கடித்ததாக கூறுகிறார்.
- புல்லட் பிரால் முறையில் நடந்ததாக கூறப்படுகிறது.
ஐந்து முறை உலக செஸ் சாம்பியன் மேக்னஸ் கார்ல்சன், ஆன்லைன் போட்டி ஒன்றில் 9 வயது வங்கதேச பள்ளி மாணவனிடம் தோல்வியடைந்ததாக கூறப்படுகிறது. வங்கதேச நாளிதழில் வெளியான செய்தியின்படி, FIDE மாஸ்டரான பயிற்சியாளர் நைம் ஹக், தனது மாணவன் கார்ல்சனை தோற்கடித்ததாக கூறுகிறார்.
டாக்காவைச் சேர்ந்த மூன்றாம் வகுப்பு மாணவர் ரியான் ரஷீத் முக்தாவுக்கும் கார்ல்சனுக்கும் இடையில் ஆன்லைனில் நடந்ததாக கூறப்படும் போட்டி ஜனவரி 18-ம் தேதி புல்லட் பிரால் முறையில் நடந்ததாக தி பிசினஸ் ஸ்டாண்டர்ட் தெரிவித்துள்ளது.
செஸ் வலைதளத்தில் (chess.com) உள்ள தனது அக்கவுண்ட் மற்றும் ப்ரோபைலை தனது மாணவர் ரியான் ரஷீத்-க்கு வழங்கியதாக நைம் தெரிவித்துள்ளார். செஸ் வலைதளத்தில் விளையாடும் போது, ஆன்லைனில் அதிர்ஷ்டவசமாக சிறுவன் கார்ல்சனுடன் விளையாடும் சூழல் ஏற்பட்டது. புல்லட் பிரால் முறையில் விளையாடும் போது, வீரர்கள் தங்கள் நகர்வுகளை முடிக்க ஒரு நிமிடம் மட்டுமே வழங்கப்படுகிறது.
இது குறித்து பேசிய நைம், "நான் முக்தாவுக்கு சதுரங்கம் கற்று கொடுக்கிறேன். அவருக்கும் எப்பவும் ஆன்லைனில் விளையாட மட்டுமே பிடிக்கும். இதனால் நான் அவருக்கு என் செஸ் ஐடியைப் பயன்படுத்த அனுமதி அளித்து இருந்தேன்."
"பிறகு, அவர் திடீரென்று என்னை அழைத்து கார்ல்சனை தோற்கடித்ததாகக் கூறினார். முதலில், என்னால் அதை நம்ப முடியவில்லை. பின்னர் அவர் எனக்கு ஸ்கிரீன்ஷாட்கள் மற்றும் அனைத்து விளையாட்டு விவரங்களையும் அனுப்பினார். நான் ஆச்சரியப்பட்டேன்," என்று தெரிவித்தார்.






