என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    16 வயதில் கிராண்ட்மாஸ்டர் ஆன செஸ் வீரர் இளம்பரிதிக்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு
    X

    16 வயதில் கிராண்ட்மாஸ்டர் ஆன செஸ் வீரர் இளம்பரிதிக்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு

    • இந்தியாவின் 90-வது மற்றும் தமிழ்நாட்டின் 35-வது கிராண்ட்மாஸ்டர் ஆனார்.
    • சூரியன் உதிக்கும் போது இன்னும் பல கிராண்ட்மாஸ்டர்கள் உருவாகின்றனர்.

    சென்னையைச் சேர்ந்த 16 வயது இளம் செஸ் வீரர் ஏ.ஆர்.இளம்பரிதி. இவர் போஸ்னியா மற்றும் ஹெர்சகோவினாவில் நடந்த பிஜெல்ஜினா ஓபன் செஸ் தொடரில் விளையாடினார். இந்த போட்டியில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றார்.

    இதன்மூலம் 16 வயதில் சாம்பியன் பட்டத்தை வென்று இளம்பரிதி சாதனை படைத்துள்ளார். மேலும் தமிழ்நாட்டின் விளையாட்டு மேம்பாட்டு ஆணைய ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்ற இவர், இந்தியாவின் 90-வது மற்றும் தமிழ்நாட்டின் 35-வது கிராண்ட்மாஸ்டர் ஆனார்.

    இந்நிலையில் அவருக்கு எக்ஸ் பக்கத்தில் பாராட்டு தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின், "சதுரங்கத்தில் தமிழ்நாட்டின் 35வது கிராண்ட்மாஸ்டராக இளம்பரிதி சாதனை படைத்துள்ளார்.

    இதன் மூலம் தமிழ்நாட்டின் சாம்பியன் கிரீடத்தில் அவர் மற்றொரு ரத்தினத்தைச் சேர்த்துள்ளார். தமிழ்நாடு சதுரங்கத்தில் சூரியன் உதிக்கும் போது இன்னும் பல கிராண்ட்மாஸ்டர்கள் உருவாகின்றனர்." என்று பதிவிட்டுள்ளார்.

    Next Story
    ×