என் மலர்
நீங்கள் தேடியது "Chess World Cup"
- அர்ஜூன் எரிகைசி 2 புள்ளிகளை பெற்று 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.
- தீப்தயான் கோசும் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றார்.
11-வது பீடே உலக கோப்பை செஸ் போட்டி கோவாவில் நடைபெற்று வருகிறது. வருகிற 26-ந்தேதி வரை நடைபெறும் இந்தப் போட்டி 8 சுற்றுகளை கொண்டது. நாக் அவுட் முறையில் நடைபெறும் இந்தப் போட்டியில் 82 நாடுகளில் இருந்து 206 வீராங்கனைகள் பங்கேற்றனர்.
முதல் சுற்றில் 156 பேர் ஆடினார்கள். இதன் முடிவில் 78 வீரர்கள் அடுத்த ரவுண்டுக்கு முன்னேறினார்கள். உலக சாம்பியன் டி.குகேஷ் உள்ளிட்ட 'டாப்-50' வீரர்கள் நேரடியாக 2-வது சுற்றில் இடம்பெற்றனர்.
2-வது சுற்று நேற்று முன்தினம் தொடங்கியது. இந்திய வீரர் அர்ஜூன் எரிகைசி வெற்றியுடன் கணக்கை தொடங்கினார். அவர் பல்கேரிய வீரர் மார்டின் பெட்ரோவை 37-வது காய் நகர்த்தலுக்கு பிறகு வீழ்த்தினார்.
நேற்றைய 2-வது ஆட்டத்திலும் அர்ஜூன் எரிகைசி வெற்றி பெற்றார். வெள்ளை நிற காய்களுடன் ஆடிய அவர் 48-வது நகர்த்தலுக்கு பிறகு இந்த வெற்றியை பெற்றார். இதன் மூலம் அர்ஜூன் எரிகைசி 2 புள்ளிகளை பெற்று 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.
டி.குகேஷ்
உலக சாம்பியன் டி.குகேஷ் கஜகஸ்தான் வீரர் நோதர்பெக்குடன் மோதிய முதல் ஆட்டம் 'டிரா' ஆனது. நேற்றைய 2-வது ஆட்டத்தில் அவர் வெற்றி பெற்றார். இதன் மூலம் குகேஷ் 1.5-0.5 புள்ளிகளுடன் 3-வது சுற்றுக்கு நுழைந்தார். இதேபோல தீப்தயான் கோசும் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றார்.
சென்னையை சேர்ந்த பிரக்ஞானந்தா ஆஸ்திரேலிய வீரர் தெமுருடன் மோதிய 2-வது ஆட்டமும் 'டிரா' ஆனது. இதனால் இன்றைய டை பிரேக்கர் ஆட்டத்தில் ஆடுவார்.
- திவ்யா கிராண்ட் மாஸ்டர் அந்தஸ்தையும் பெற்றார்.
- இந்தியாவின் 88-வது கிராண்ட் மாஸ்டர் திவ்யா ஆவார்.
ஜார்ஜியாவில் நடைபெற்ற உலக கோப்பை செஸ் போட்டியில் இந்திய வீராங்கனை திவ்யா தேஷ் முக் பட்டம் பெற்றார். அவர் இறுதிப்போட்டியில் சக நாட்டைச் சேர்ந்த கோனேரு ஹம்பியை தோற்கடித்தார்.
இதன் மூலம் உலக கோப்பை செஸ் போட்டி யில் சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற வரலாற்றை அவர் பெற்றார்.
இருவரும் மோதிய கூடுதல் 2 ஆட்டமும் 'டிரா' ஆனது. நேற்று நடந்த டை பிரேக்கரில் 75-வது காய் நகர்த்தலுக்கு பிறகு திவ்யா தேஷ்முக் வென்று சாம்பியன் ஆனார். 19 வயதான அவர் மராட்டிய மாநிலம் நாக்பூரை சேர்ந்தவர் ஆவார். அவருக்கு ரூ.43.24 லட்சம் பரிசு தொகை கிடைத்தது. 2-வது இடத்தை பிடித்த ஆந்திராவை சேர்ந்த ஹம்பிக்கு ரூ.30.26 லட்சம் வழங்கப்பட்டது.
உலக கோப்பை போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றதன் மூலம் திவ்யா கிராண்ட் மாஸ்டர் அந்தஸ்தையும் பெற்றார். இதன் மூலம் ஹம்பி, ஹரிதா, வைஷாலி ஆகிய வீராங்கனைகள் வரிசையில் அவர் இணைந்தார். இந்தியாவின் 88-வது கிராண்ட் மாஸ்டர் திவ்யா ஆவார்.
இந்தப் போட்டியில் முதல் 2 இடங்களை பிடித்த திவ்யாவும், ஹம்பியும் கேண்டிடேட்ஸ் போட்டிக்கு தகுதி பெற்றனர்.
உலக கோப்பை செஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றது குறித்து திவ்யா தேஷ்முக் நிருபர்களிடம் கூறியதாவது:-
வெற்றி பெறுவதற்கு அதிக நேரம் தேவைப்பட்டது. இந்த போட்டிக்காக என்னை நன்றாக தயார் படுத்தி கொண்டேன். இது முக்கிய பங்கு வகித்தது. இந்த போட்டி தொடங்குவதற்கு முன்பு நான் பட்டம் வெல்வேன் என்று எதிர்பார்க்கவில்லை. பலம் வாய்ந்த வீராங்கனைகளுடன் மோதினேன்.
உலக தரவரிசையில் 5-வது இடத்தில் உள்ள ஹம்பியை வீழ்த்தி பட்டம் வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது. நான் அவரை மிகவும் மதிக்கிறேன். அவர் சிறந்த வீராங்கனையாவார். அவரிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டேன். அவருக்கு எதிரான இந்த இறுதிப் போட்டியில் எனக்கு அதிர்ஷ்டம் இருந்தது.
இந்த வழக்குமுறையில் தான் நான் கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை பெற வேண்டும் என்ற விதி இருந்துள்ளது. இதற்கு முன்னர் ஒரு ஜி.எம். நார்ம்ஸ் கூட என்னி டம் இல்லை. இப்போது நான் கிராண்ட் மாஸ்டர்.
நான் இன்னும் நிறைய சாதிக்க வேண்டும். எனது சாதனை பயணம் தொடரும். இது வெறும் தொடக்கம் என்று நான் நம்புகிறேன்.
இவ்வாறு திவ்யா தேஷ் முக் கூறியுள்ளார்.
- பெண்கள் செஸ் உலகக் கோப்பையை வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை திவ்யா படைத்துள்ளார்.
- வெற்றியாளரை தீர்மானிக்க டைபிரேக்கர் முறை கடைப்பிடிக்கப்பட்டது.
பதுமி:
3-வது 'பிடே' பெண்கள் உலகக் கோப்பை செஸ் போட்டி ஜார்ஜியாவில் உள்ள பதுமி நகரில் நடந்து வருகிறது. இதன் இறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனைகள் கோனெரு ஹம்பி- திவ்யா தேஷ்முக் ஆகியோர் மோதினர்.
இதில் கிளாசிக்கல் அடிப்படையில் நடந்த முதல் ஆட்டம் டிரா ஆனது. இந்த நிலையில் கிளாசிக் முறையிலான 2-வது ஆட்டம் நேற்று நடந்தது. இதில் வெள்ளைநிற காய்களுடன் ஆடிய ஹம்பி 34-வது நகர்த்தலில் திவ்யாவுடன் 'டிரா' செய்தார். இதனால் இருவருக்கும் தலா ½ புள்ளி கிடைத்தது. இரண்டு ஆட்டங்கள் முடிவில் இருவரும் தலா ஒரு புள்ளியுடன் சமநிலை வகிப்பதால், வெற்றியாளரை தீர்மானிக்க டைபிரேக்கர் முறை கடைப்பிடிக்கப்பட்டது.
இதில் திவ்யா வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார். இதன்மூலம் பெண்கள் செஸ் உலகக் கோப்பையை வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை திவ்யா படைத்துள்ளார்.
திவ்யாவை எதிர்த்து விளையாடிய கோனெரு ஹம்பி, 2-ம் இடம் பிடித்து வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார்.
- உலகக் கோப்பை செஸ் இறுதிப்போட்டி இரு ஆட்டங்கள் கொண்டதாகும்.
- இறுதிப்போட்டிக்கான டைபிரேக்கர் சுற்றில் ஹம்பி-திவ்யா மீண்டும் மோதுகிறார்கள்.
பதுமி:
பெண்கள் உலகக் கோப்பை செஸ் போட்டி ஜார்ஜியாவில் உள்ள பதுமி நகரில் நடந்து வருகிறது.
இதன் இறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனைகள் கோனெரு ஹம்பி - திவ்யா தேஷ்முக் மோதினர். இறுதிச்சுற்று இரு ஆட்டங்கள் கொண்டதாகும்.
நேற்று நடந்த இறுதிப்போட்டிக்கான முதல் ஆட்டத்தில் ஆடிய திவ்யா தேஷ்முக் ஹம்பியுடன் டிரா செய்தார். இதனால் இருவருக்கும் தலா அரை புள்ளி வழங்கப்பட்டது. இந்த ஆட்டம் சுமார் 4 மணி நேரம் நீடித்தது.
இந்நிலையில், இன்று நடைபெற்ற இறுதிப்போட்டிக்கான 2-வது ஆட்டத்தில் ஹம்பி- திவ்யா மீண்டும் மோதினர். இந்த சுற்றும் சமனில் முடிந்தது. இதனால், ஆட்டம் டை பிரேக்கர் சுற்றுக்கு சென்றது.
வெற்றியாளரை தீர்மானிக்கும் டை பிரேக்கர் சுற்று நாளை நடக்கிறது. இதில் வெற்றி பெறுபவரே புதிய சாம்பியன் ஆவார்.
- உலகக் கோப்பை செஸ் இறுதிப்போட்டி இரு ஆட்டங்கள் கொண்டதாகும்.
- இறுதிப்போட்டிக்கான 2-வது ஆட்டத்தில் ஹம்பி-திவ்யா மீண்டும் மோதுகிறார்கள்.
பதுமி:
பெண்கள் உலகக் கோப்பை செஸ் போட்டி ஜார்ஜியாவில் உள்ள பதுமி நகரில் நடந்து வருகிறது.
இதன் இறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனைகள் கோனெரு ஹம்பி - திவ்யா தேஷ்முக் மோதினர். இறுதிச்சுற்று இரு ஆட்டங்கள் கொண்டதாகும்.
நேற்று நடந்த இறுதிப்போட்டிக்கான முதல் ஆட்டத்தில் ஆடிய திவ்யா தேஷ்முக் ஹம்பியுடன் டிரா செய்தார். இதனால் இருவருக்கும் தலா அரை புள்ளி வழங்கப்பட்டது. இந்த ஆட்டம் சுமார் 4 மணி நேரம் நீடித்தது.
இன்று நடைபெறும் இறுதிப்போட்டிக்கான 2-வது ஆட்டத்தில் ஹம்பி- திவ்யா மீண்டும் மோதுகின்றனர். இதில் வெற்றி பெறுபவர் சாம்பியன் பட்டம் கைப்பற்றுவார். இன்றும் ஆட்டம் டிராவில் முடிந்தால் டைபிரேக்கர் மூலம் வெற்றியாளர் தீர்மானிக்கப்படுவார்.
- முழு தேசமும் உங்களை நினைத்து பெருமை கொள்கிறது பிரக்ஞானந்தா.
- உங்களது வெற்றி வரவிருக்கும் தலைமுறையினரை ஊக்குவிக்கும் மைல்கற்கள்.
'பிடே' உலகக் கோப்பை செஸ் போட்டி அஜர்பைஜான் தலைநகர் பாகுவில் நடைபெற்றது. இதில் இறுதிப்போட்டியில் இந்திய 'இளம் புயல்' தமிழகத்தை சேர்ந்த பிரக்ஞானந்தாவும், 'நம்பர் ஒன்' வீரரும், 5 முறை உலக சாம்பியனுமான மாக்னஸ் கார்ல்செனும் (நார்வே) மோதினர்.
இந்த இறுதிப்போட்டியின் முடிவில், முதல் சுற்றில் நார்வே வீரர் கார்ல்சன் வெற்றி பெற்றார்.
இந்நிலையில், செஸ் உலகக் கோப்பையில் 2வது இடம் பிடித்த பிரக்ஞானந்தாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
2023ம் ஆண்டின் செஸ் உலகக்கோப்பையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சென்னையின் பெரும் பிரக்ஞானந்தாவிற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
உலகின் நம்பர் 2 வீரரான நகமுரா மற்றும் நம்பர் 3 வீரரான கருவானாவை தோற்கடித்து, இறுதிப் போட்டிக்கான பயணம் எங்களை வியப்பில் ஆழ்த்தியது.
இறுதி முடிவு இருந்தபோதிலும், உங்கள் சாதனை 140 கோடி கனவுகளுடன் எதிரொலித்தது. முழு தேசமும் உங்களை நினைத்து பெருமை கொள்கிறது பிரக்ஞானந்தா!
நீங்கள் பெற்ற வெள்ளிப் பதக்கம் மற்றும் செஸ் உலகக்கோப்பை போட்டிக்கான நுழைவு ஆகியவை வரவிருக்கும் தலைமுறையினரை ஊக்குவிக்கும் மைல்கற்கள்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.






