என் மலர்tooltip icon

    விளையாட்டு

    உலகக் கோப்பை செஸ் இறுதிப்போட்டி: 2வது சுற்றையும் டிரா செய்த ஹம்பி-திவ்யா
    X

    உலகக் கோப்பை செஸ் இறுதிப்போட்டி: 2வது சுற்றையும் டிரா செய்த ஹம்பி-திவ்யா

    • உலகக் கோப்பை செஸ் இறுதிப்போட்டி இரு ஆட்டங்கள் கொண்டதாகும்.
    • இறுதிப்போட்டிக்கான டைபிரேக்கர் சுற்றில் ஹம்பி-திவ்யா மீண்டும் மோதுகிறார்கள்.

    பதுமி:

    பெண்கள் உலகக் கோப்பை செஸ் போட்டி ஜார்ஜியாவில் உள்ள பதுமி நகரில் நடந்து வருகிறது.

    இதன் இறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனைகள் கோனெரு ஹம்பி - திவ்யா தேஷ்முக் மோதினர். இறுதிச்சுற்று இரு ஆட்டங்கள் கொண்டதாகும்.

    நேற்று நடந்த இறுதிப்போட்டிக்கான முதல் ஆட்டத்தில் ஆடிய திவ்யா தேஷ்முக் ஹம்பியுடன் டிரா செய்தார். இதனால் இருவருக்கும் தலா அரை புள்ளி வழங்கப்பட்டது. இந்த ஆட்டம் சுமார் 4 மணி நேரம் நீடித்தது.

    இந்நிலையில், இன்று நடைபெற்ற இறுதிப்போட்டிக்கான 2-வது ஆட்டத்தில் ஹம்பி- திவ்யா மீண்டும் மோதினர். இந்த சுற்றும் சமனில் முடிந்தது. இதனால், ஆட்டம் டை பிரேக்கர் சுற்றுக்கு சென்றது.

    வெற்றியாளரை தீர்மானிக்கும் டை பிரேக்கர் சுற்று நாளை நடக்கிறது. இதில் வெற்றி பெறுபவரே புதிய சாம்பியன் ஆவார்.

    Next Story
    ×