என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பீடே உலகக் கோப்பை செஸ்"

    • கோவாவில் செஸ் உலகக் கோப்பை நடைபெற்று வருகிறது.
    • மூன்றாவது சுற்றில் குகேஷ் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

    பனாஜி:

    கோவாவில் செஸ் உலகக் கோப்பை நடைபெற்று வருகிறது. அதன் மூன்றாவது சுற்றுப் போட்டிகள் தற்போது நடந்து வருகின்றன.

    இந்நிலையில், 3வது சுற்றுப் போட்டியில் இந்தியாவின் குகேஷும், ஜெர்மனியின் ஃபிரெடிரிக் ஸ்வேனும் மோதிக்கொண்டனர்..

    இருவருக்குமான முதல் போட்டி டிராவில் முடிந்தது. இரண்டாவது போட்டியில் ஃபிரெடிரிக் ஸ்வேனே குகேஷை வீழ்த்தினார் . இதனால் மூன்றாவது சுற்றிலேயே குகேஷ் தொடரிலிருந்து வெளியேறினார்.

    கடந்த ஆண்டு சிங்கப்பூரில் நடந்த உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் குகேஷ் உலக சாம்பியன் பட்டம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • அர்ஜூன் எரிகைசி 2 புள்ளிகளை பெற்று 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.
    • தீப்தயான் கோசும் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றார்.

    11-வது பீடே உலக கோப்பை செஸ் போட்டி கோவாவில் நடைபெற்று வருகிறது. வருகிற 26-ந்தேதி வரை நடைபெறும் இந்தப் போட்டி 8 சுற்றுகளை கொண்டது. நாக் அவுட் முறையில் நடைபெறும் இந்தப் போட்டியில் 82 நாடுகளில் இருந்து 206 வீராங்கனைகள் பங்கேற்றனர்.

    முதல் சுற்றில் 156 பேர் ஆடினார்கள். இதன் முடிவில் 78 வீரர்கள் அடுத்த ரவுண்டுக்கு முன்னேறினார்கள். உலக சாம்பியன் டி.குகேஷ் உள்ளிட்ட 'டாப்-50' வீரர்கள் நேரடியாக 2-வது சுற்றில் இடம்பெற்றனர்.

    2-வது சுற்று நேற்று முன்தினம் தொடங்கியது. இந்திய வீரர் அர்ஜூன் எரிகைசி வெற்றியுடன் கணக்கை தொடங்கினார். அவர் பல்கேரிய வீரர் மார்டின் பெட்ரோவை 37-வது காய் நகர்த்தலுக்கு பிறகு வீழ்த்தினார்.

    நேற்றைய 2-வது ஆட்டத்திலும் அர்ஜூன் எரிகைசி வெற்றி பெற்றார். வெள்ளை நிற காய்களுடன் ஆடிய அவர் 48-வது நகர்த்தலுக்கு பிறகு இந்த வெற்றியை பெற்றார். இதன் மூலம் அர்ஜூன் எரிகைசி 2 புள்ளிகளை பெற்று 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.

    டி.குகேஷ்

    உலக சாம்பியன் டி.குகேஷ் கஜகஸ்தான் வீரர் நோதர்பெக்குடன் மோதிய முதல் ஆட்டம் 'டிரா' ஆனது. நேற்றைய 2-வது ஆட்டத்தில் அவர் வெற்றி பெற்றார். இதன் மூலம் குகேஷ் 1.5-0.5 புள்ளிகளுடன் 3-வது சுற்றுக்கு நுழைந்தார். இதேபோல தீப்தயான் கோசும் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றார்.

    சென்னையை சேர்ந்த பிரக்ஞானந்தா ஆஸ்திரேலிய வீரர் தெமுருடன் மோதிய 2-வது ஆட்டமும் 'டிரா' ஆனது. இதனால் இன்றைய டை பிரேக்கர் ஆட்டத்தில் ஆடுவார்.

    • ஒவ்வொரு சுற்றும் 2 ஆட்டங்களாக கிளாசிக் முறையில் நடக்கும்.
    • இதில் அதிக புள்ளிகள் எடுப்பவர்கள் அடுத்த சுற்றுக்கு முன்னேறுவார்கள்.

    கோவா:

    11-வது 'பிடே' உலகக் கோப்பை செஸ் போட்டி கோவாவில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி நவம்பர் 27-ந்தேதி வரை நடக்கிறது. 2002-ம் ஆண்டுக்கு பிறகு இந்தியாவுக்கு திரும்பும் இந்த செஸ் திருவிழாவில் உலக சாம்பியன்ஷிப்பை வென்றவரான இந்தியாவின் குகேஷ், பிரக்ஞானந்தா, அர்ஜூன் எரிகைசி, விதித் குஜராத்தி, நிஹல் சரின், அரவிந்த் சிதம்பரம் மற்றும் அனிஷ் கிரி (நெதர்லாந்து), வெஸ்லி சோ, லெவோன் ஆரோனியன் ( இருவரும் அமெரிக்கா), வின்சென்ட் கீமர் (ஜெர்மனி), வெய் யி (சீனா), நோடிர்பெக் அப்துசத்தோரோவ் (உஸ்பெகிஸ்தான்) உள்பட 82 நாடுகளைச் சேர்ந்த 206 வீரர்கள் பங்கேற்கிறாார்கள். பெண்கள் உலக சாம்பியனான இந்தியாவின் திவ்யா தேஷ்முக் 'வைல்டு கார்டு' மூலம் அழைக்கப்பட்டுள்ளார். இந்த போட்டியில் விளையாடும் ஒரே வீராங்கனை இவர் தான்.

    அதே சமயம் 'நம்பர் ஒன்' வீரரும், நடப்பு சாம்பியனுமான மாக்னஸ் கார்ல்சென் (நார்வே), பாபியானோ கருனா, ஹிகரு நகமுரா (அமெரிக்கா) போட்டிக்கு தகுதி பெற்றும் விளையாட மறுத்து விட்டனர்.

    இந்த போட்டியில் டாப்-3 இடங்களை பிடிக்கும் வீரர்கள், உலக சாம்பியனுடன் மோதும் வீரரை தேர்வு செய்வதற்காக நடத்தப்படும் கேண்டிடேட்ஸ் செஸ் தொடருக்கு தகுதி பெறுவார்கள். அந்த வகையில் இந்த போட்டி முக்கியத்துவம் பெற்றுள்ளது.

    'நாக்-அவுட்' போட்டியான இது 8 ரவுண்டுகளாக நடத்தப்படுகிறது. ஒவ்வொரு சுற்றும் 2 ஆட்டங்களாக கிளாசிக் முறையில் நடக்கும். இதில் அதிக புள்ளிகள் எடுப்பவர்கள் அடுத்த சுற்றுக்கு முன்னேறுவார்கள். சமநிலை நீடித்தால் டைபிரேக்கர் கடைபிடிக்கப்படும். ஆட்டத்தில் முதல் 40 நகர்த்தலுக்கு இருவருக்கும் தலா 90 நிமிடங்களும், எஞ்சிய போட்டிக்கு 30 நிமிடங்களும் வழங்கப்படும். அத்துடன் ஒவ்வொரு நகர்த்தலுக்கும் 30 வினாடி அதிகரிக்கப்படும்.

    ஒவ்வொரு ரவுண்டும் 3 நாட்கள் நடைபெறும். 7-வது ரவுண்டின் போது அரைஇறுதி நடத்தப்படும். கடைசி ரவுண்டில் இறுதி ஆட்டம் மற்றும் 3-வது இடத்துக்கான ஆட்டம் அரங்கேறும்.

    இதில் டாப்-50 இடங்களை பெற்றுள்ள வீரர்கள் நேரடியாக 2-வது சுற்றில் ஆடுவார்கள். 'பை' சலுகை மூலம் நேரடியாக 2-வது சுற்றில் களம் காணும் தமிழகத்தை சேர்ந்த குகேஷ், கேசிபெஸ் நோகர்பெக் (கஜகஸ்தான்), ராஜா ரித்விக் (இந்தியா) ஆகியோரில் ஒருவரை சந்திப்பார். 19 வயதான குகேஷ் கூறுகையில், 'உலகக் கோப்பை செஸ் போட்டியில் ஆட இருப்பது உற்சாகம் அளிக்கிறது. இந்தியாவில் எந்த இடத்தில் விளையாடினாலும் சிறப்பானது. கோவாவில் எனக்கு சில மறக்க முடியாத நினைவுகள் உண்டு. இங்கு ஜூனியர் போட்டிகளில் விளையாடி இருக்கிறேன். அதனால் ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளேன்' என்றார். குகேஷ், கடந்த முறை 2-வது இடத்தை பிடித்தவரான பிரக்ஞானந்தா, அனிஷ் கிரி, வின்சென்ட் கீமர், வெஸ்லி சோ ஆகியோரில் ஒருவர் பட்டம் வெல்ல பிரகாசமான வாய்ப்புள்ளது.

    பரிசு எவ்வளவு?

    போட்டிக்கான மொத்த பரிசுத்தொகை ரூ.17½ கோடியாகும். இதில் வாகை சூடும் வீரருக்கு ரூ.1 கோடியும், 2-வது இடத்தை பிடிக்கும் வீரருக்கு ரூ.75 லட்சமும் பரிசுத்தொகையாக வழங்கப்படும்.

    முதல் நாளில் தொடக்க விழா மட்டுமே நடத்தப்படும். முதல் சுற்று ஆட்டம் நவ.1 முதல் 3-ந்தேதி வரை பிற்பகல் 3 மணிக்கு தொடங்கி நடைபெறும்.

    ×