search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உளுந்தூர்பேட்டை பஸ் நிலையத்தில் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டு விநியோகஸ்தர் சுற்றிவளைப்பு: போலீசார் தீவிர விசாரணை
    X

    உளுந்தூர்பேட்டை பஸ் நிலையத்தில் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டு விநியோகஸ்தர் சுற்றிவளைப்பு: போலீசார் தீவிர விசாரணை

    • தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்து வந்தார்.
    • லாட்டரி சீட்டுகளுடன் இருந்த பார்த்த சாரதியை சுற்றி வளைத்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் டி.புல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் பார்த்தசாரதி (வயது 40). இவர் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்து வந்தார். மேலும், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்களுக்கு லாட்டரி சீட்டுகளை விநியோக மும் செய்து வந்தார். லாட்டரி சீட்டு விற்றது தொடர்பாக பார்த்தசாரதியை கள்ளக்குறிச்சி, அரியலூர், விழுப்புரம் மாவட்ட போலீசார் தேடி வந்தனர்.

    இந்நிலையில் உளுந்தூர் பேட்டை பஸ் நிலையத்தில் பார்த்தசாரதி லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்ட தாக போலீசாருக்கு ரகசிய தகவல் நேற்று இரவு கிடைத்தது. உளுந்தூர்பேட்டை இன்ஸ்பெக்டர் குணபாலன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு லாட்டரி சீட்டுகளுடன் இருந்த பார்த்த சாரதியை சுற்றி வளைத்தனர்.

    இதனைத் தொடர்ந்து அவரிட மிருந்த தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்த போலீசார், அவரிடம் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் எங்கி ருந்து கிடைக்கிறது? யார் யாருக்கெல்லாம் விநியோ கம் செய்தார் என்பன போன்ற கோணங்களில் உளுந்தூர் பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×