என் மலர்
இந்தியா

புத்தாண்டு அனைவருக்கும் மகிழ்ச்சியையும் வெற்றியையும் தரட்டும்.. ராகுல் காந்தி வாழ்த்து
- 2026 பிறந்த நிலையில் நாடு முழுவதும் இன்று ஆங்கில புத்தாண்டு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
- குடிமக்களிடையே பரஸ்பர அன்பு, ஒத்துழைப்பு மற்றும் நல்லிணக்கம் வளரட்டும்.
2026 பிறந்த நிலையில் நாடு முழுவதும் இன்று ஆங்கில புத்தாண்டு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அந்த வகையில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நாட்டு மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவரது எக்ஸ் பதிவில், "அனைவருக்கும் இதயம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துகள். இந்தப் புத்தாண்டு உங்கள் வாழ்வில் மிகுந்த மகிழ்ச்சியையும், நல்ல ஆரோக்கியத்தையும், வெற்றியையும் கொண்டு வரட்டும்" என்று பதிவிட்டுள்ளார். மேலும் ஜென் z தலைமுறையினருடன் தான் இருக்கும் புகைப்படத்தையும் அவர் பகிர்ந்துள்ளார்.
வயநாடு காங்கிரஸ் எம்.பி பிரியங்கா காந்தி வெளியிட்ட வாழ்த்து செய்தியில், "புத்தாண்டு அனைவருக்கும் அமைதி, வளம் மற்றும் மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கட்டும். குடிமக்களிடையே பரஸ்பர அன்பு, ஒத்துழைப்பு மற்றும் நல்லிணக்கம் வளரட்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.






