என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடிவிபத்து- 5 பேர் பலி
- மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்றுவருவதால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.
- பட்டாசு ஆலை வெடி விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகாசி:
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே சின்ன காமன்பட்டி கோகுலேஸ் பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடி விபத்தில் 2 பெண்கள் 3 ஆண்கள் என 5 பேர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த 4 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஆலையில் தொடர்ந்து பட்டாசு வெடித்து சிதறுவதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். மேலும் பட்டாசு ஆலையில் சிக்கி உள்ள தொழிலாளர்களை மீட்கும் பணியில் தீயணைப்புத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்றுவருவதால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.
இதனிடையே, பட்டாசு ஆலை வெடி விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






