search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Workers protest"

    • தூய்மை பணியாளர்கள் சம்பளம் வழங்கினால் மட்டுமே பணிகளை மேற்கொள்வோம் என திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • இதனால் பெரியகுளம் நகராட்சியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

    பெரியகுளம்:

    பெரியகுளம் நகராட்சியில் தனியார் நிறுவனத்தின் கீழ் ஒப்பந்தபணியாளர்களாக 60 பேர் நியமனம் செய்யப்பட்டு பெரியகுளம் நகர் பகுதியில் தூய்மை பணி மேற்கொண்டு வருகின்றனர்.

    கடந்த சில மாதங்களாக இவர்களுக்கு ஊதியம் வழங்கப்பட வில்லை. இது குறித்து பலமுறை அவர்கள் கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்க ப்படவில்லை. இதனால் பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்ட னர். சம்பளம் வழங்கினால் மட்டுமே தூய்மை பணிகளை மேற்கொள்வோம் என அவர்கள் கோஷமிட்டனர்.

    இதனால் அங்கு பரபர ப்பான சூழல் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து நகராட்சி தலைவர் சுமிதா சிவக்குமார் மற்றும் அதிகாரிகள் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்கள் உறுதி அளித்ததால் தூய்மை பணி யாளர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    • மண்பாண்ட தொழிலாளர்கள் மண்பானை மற்றும் மண் அடுப்புகளுடன் சேலம் கோட்டையில் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    • ஆர்ப்பாட்டத்திற்கு குலாலர் சங்க மாவட்ட தலைவர் ராஜா தலைமை தாங்கினார்.

    சேலம்:

    சேலம் மாவட்ட மண்பாண்ட தொழிலாளர்கள் மண்பானை மற்றும் மண் அடுப்புகளுடன் சேலம் கோட்டையில் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த ஆர்ப்பாட்டத்திற்கு குலாலர் சங்க மாவட்ட தலைவர் ராஜா தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தின் போது தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

    ஆர்ப்பாட்டம் குறித்து அவர்கள் கூறியதாவது:- பொங்கல் திருநாளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பச்சரிசி, கரும்பு உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய தொகுப்பினை ஆண்டுதோறும் தமிழக அரசு வழங்கி வருகிறது.

    அதேபோல் களி மண்ணால் ஆன மண்பானை மற்றும் அடுப்பினை தமிழக அரசே கொள்முதல் செய்து ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்கி மண்பாண்ட தொழிலாளர்களின் வாழ்வில் ஒளி ஏற்ற வேண்டும். மண்பாண்ட தொழிலாளர்கள் தொழில் செய்ய தேவையான களிமண்ணை அவரவர் வசிக்கும் பகுதியில் உள்ள ஏரிகள், ஆற்றில் எடுத்துக் கொள்ள அனுமதிக்க வேண்டும்.

    தமிழக அரசின் காதிகிராப்ட் விற்பனை பிரிவு அலுவலகத்தில் நிரந்தரமாக மண்பாண்டத்தினால் ஆன பொருட்களை விற்பனை செய்ய இடம் ஒதுக்க வேண்டும். மழைக்கால நிவாரண நிதியை மற்ற சமுதாயத்திற்கு கொடுத்தது போல் ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.8 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். நலிவடைந்த மண்பாண்ட தொழிலாளர்கள் வீடு கட்டி வசிக்க இலவச வீட்டு மனை வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • கண்டன கோஷங்களை எழுப்பினர்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் மாவட்ட தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் திருப்பத்தூர் தாலுகா அலுவலகம் எதிரில் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் என். கோபிநாதன் தலைமை வகித்தார். அனைவரையும் துணைத் தலைவர் ஜி. குணசேகர் வரவேற்றார். பொருளாளர் வி.மோகன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை மாவட்ட செயலாளர் எஸ்.பக்தவச்சலம் தொடங்கி வைத்து பேசினார்.

    கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு ரேசன் கடை பணியாளர்கள் சங்க மாநிலத் தலைவர் எம். ஜெயச்சந்திர ராஜா, மர்ம நபர்களால் கடலூரில் தாக்கப்பட்டதை கண்டித்தும், உடனடியாக தாக்கப்பட்டவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்யக்கோரியும், கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணைத் தலைவர் எம் முத்து குமார் போராட்ட குழு தலைவர் சபரிநாதன், உட்பட பல பேசினார்கள்.

    ஆர்ப்பாட்டத்தில் மாவட்டம் முழுவதிலிருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    இறுதியில் மாவட்ட துணைத் தலைவர் ஆர்.ஷியாம் நன்றி கூறினர்.

    • 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்தது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    வேலூர்:

    வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கம் சார்பில் 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் லால் பகதூர் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் வெங்கடேசன் முன்னிலை வகித்தார்.மாவட்ட போராட்ட குழு தலைவர் ரவி வரவேற்பு உரையாற்றினார். முன்னாள் மாநில துணைத்தலைவர் தர்மலிங்கம் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார்.

    விவசாய கடன், நகை கடன் மற்றும் மகளிர் சுய உதவி கடன் தள்ளுபடிக்குரிய தொகையினை வட்டியுடன் முழுமையாக வழங்கப்பட வேண்டும். ரேசன் கடை பணியாளர்களின் பல்வேறு பிரச்சினைகளை குழு அமைத்து தீர்த்திட வேண்டும். ஒரு துறை ஆய்வு மேற்கொள்ள வேண்டும். கடன் தள்ளுபடி விதிமீறல் நகை ஏல நடவடிக்கையில் நஷ்டம் என்று பணியாளர்களின் ஓய்வு கால நிதி பயன்களை நிறுத்தக்கூடாது.

    பொதுப்பணி நிலை த்திறனில் உள்ள குள றுபடிகளை தீர்க்க வேண்டும்

    .ஓய்வூதியம் கருணை ஓய்வூதியம் அரசு ஆணைப்படி பணியாளர்களுக்குள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்து தற்போது ஓய்வு பெற்றுள்ள அனைவருக்கும் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

    ஆர்ப்பாட்டத்தில் ஓய்வு பெற்ற சங்க பொறுப்பாளர்கள் மாணிக்கம், வேலாயுதம், ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தமிழ்நா ட்டில் உள்ள அனைத்து அங்கன்வாடி மையங்களு க்கும் விடுமுறை வழங்க வேண்டும்,
    • 10 ஆண்டுகள் பணி செய்த அங்கன்வாடி உதவியாளர்களுக்கு உடனடியாக பதவி உயர்வு வழங்க வேண்டும்,

    வத்தலக்குண்டு:

    வத்தலக்குண்டு ஒன்றிய பகுதியிலுள்ள அங்கன்வாடி பணியாளர்கள், தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் சங்கம் சார்பில் குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவல கத்தை முற்றுகையிட்டு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் சங்க மாவட்ட துணைத் தலைவர் ஜானகி தலைமை தாங்கினார். வத்தலகுண்டு வட்டாரத் தலைவர் நிறைமதி, வட்டாரச் செயலாளர் சக்திராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சி.ஐ.டி.யு மாவட்டச் செயலாளர் பிரபாகரன், ஒன்றிய அமைப்பாளர் வின்சென்ட் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

    தற்போது குழந்தை களுக்கு காய்ச்சல் பரவி வரும் சூழலில் 2 வயது முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகளின் நலன் கருதியும்,குழந்தைகள் நல மைய பணியாளர்களின் நலன் கருதியும் கடும் கோடை வெயிலின் தாக்க த்திலிருந்து பாது காத்துக் கொள்ள பள்ளி,கல்லூரி களுக்கு கோடை விடுமுறை விடுவது போல் தமிழ்நா ட்டில் உள்ள அனைத்து அங்கன்வாடி மையங்களு க்கும் விடுமுறை வழங்க வேண்டும்,

    10 ஆண்டுகள் பணி செய்த அங்கன்வாடி உதவியாளர்களுக்கு உடனடியாக பதவி உயர்வு வழங்க வேண்டும், காலிப் பணியிடங்களை முழுமை யாக நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறு த்தி ஆர்ப்பாட்டம் நடைபெ ற்றது. ஆர்ப்பாட்ட த்தில் சுமார் 200 க்கும் மேற்பட்ட அங்கன்வாடி ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

    • பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    கே.வி.குப்பம்:

    கே.வி.குப்பம் சந்தைமேடு பகுதியில் உள்ள குழந்தைகள் வளர்ச்சித்திட்ட அலுவலகம் எதிரில் அங்கன்வாடி பணியா ளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வட்டார தலைவர் விஜயநிர்மலா தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் கள் ஜூலி, உமா ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்ட செயலாளர் சத்யா வரவேற்றார்.

    ஆர்ப்பாட்டத்தில், 10 குழந்தைகளுக்கு குறைவாக உள்ள அங்கன்வாடி மையங்களை பிரதான மையங்களோடு இணைக்கக்கூடாது. கியாஸ் சிலிண்டருக்கான முழு தொகையை வழங்க வேண்டும்.

    10 ஆண்டுகள் நிறைவு செய்த பணியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும். அங்கன்வாடி மையங்களுக்கு உண்டான மின் கட்டணத்தை அரசே வழங்க வேண்டும்.

    வீட்டு வாடகைப்படி வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

    • நத்தம் அருகே செந்துறை - நல்லபிச்சன்பட்டி பகுதியில் வெள்ளரி தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இங்கு லாரிகள் மூலம் பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறது.
    • தொழிற்சாலையின் உரிமையாளர் மற்றும் பணியாற்றும் தொழி லாளர்கள் செந்துறை - நத்தம் சாலையில் திடீர் சாலைமறியலில் ஈடுபட்ட னர்.

    செந்துறை:

    திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே செந்துறை - நல்லபிச்சன்பட்டி பகுதியில் வெள்ளரி தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இங்கு லாரிகள் மூலம் பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறது.

    தொழிற்சாலைக்கு செல்லும் லாரிகள் நல்லபிச்சன்பட்டி சாலையில் வேகமாக செல்வதால் அடிக்கடி விபத்து நடப்பதாகவும் சாலை சேதமடைந்து வருவதாகவும் கிராம மக்கள் புகார் தெரிவித்து வந்தனர். ஆனால் இது தொடர்பாக தனியார் தொழிற்சாலை நிறுவனம் எந்தவித நட வடிக்கையும் எடுக்கவில்லை.மாற்றுப் பாதையில் தொழி ற்சாலைக்கு லாரிகளை இயக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தும் கேட்கவில்லை.

    இந்நிலையில் அந்த வழியாக பொருட்கள் ஏற்றி சென்ற லாரியை அப்பகு தியை சேர்ந்த பொதுமக்கள் சிறைபிடித்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், லாரியை விடுவிக்க கோரியும் வெள்ளரி தொழிற்சாலையின் உரிமையாளர் மற்றும் பணியாற்றும் தொழி லாளர்கள் செந்துறை - நத்தம் சாலையில் திடீர் சாலைமறியலில் ஈடுபட்ட னர்.

    தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸ் - இன்ஸ்பெக்டர் தங்கமுனியசாமி, வருவாய் ஆய்வாளர் மாரிமுத்து, கிராம நிர்வாக அலுவலர் சந்திரசேகர் உள்ளிட்ட போலீசார்கள் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதைத்தொடர்ந்து தொழி லாளர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    இந்த மறியலால் செந்து றை - நத்தம் சாலையில் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதேபோல் லாரியை சிறைபிடித்த கிராம மக்களிடமும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர் அதையடுத்து கிராம மக்கள் லாரியை விடுவித்தனர்.

    • லாரி டிரைவர், உதவியாளர், சுமை தூக்கும் தொழிலாளர்கள், சுமை இறக்கும் தொழிலாளர்கள் என 150-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர்.
    • காஞ்சிபுரம் தமிழ்நாடு வாணிபக் கழக டாஸ்மாக் குடோன் முன்பு ஒரு மணி நேரத்துக்கு மேலாக தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் அடுத்த ஓரிக்கை பகுதியில் அரசு டாஸ்மாக் குடோன் உள்ளது. மதுபான உற்பத்தி தொழிற்சாலைகளில் இருந்து எடுத்து வரப்படும் மதுபான பாட்டில்கள் இங்கிருந்து வாகனங்கள் மூலம் அரசு மதுபானக் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்படுவது வழக்கம்.

    காஞ்சிபுரம் கிழக்கு பகுதியில் மட்டும் சுமார் 110 டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகிறது. இதில் படப்பை, வாலாஜாபாத், ஒரகடம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து லாரிகளில் மதுபானங்கள் கொண்டு வரப்பட்டது. இந்த டாஸ்மாக் குடோனில் இருந்து பொருட்களை ஏற்றி செல்ல 15 ஆண்டுகளாக உள்ளூர் நிறுவனம் ஏலம் எடுத்து நடத்தி வந்தது. இந்த ஆண்டு வேறு ஒரு வெளி மாவட்டத்தைச் சேர்ந்தவருக்கு டெண்டர் வழங்கப்பட்டுள்ளதாக தொழிலாளர்களுக்கு தகவல் கிடைத்தது. இதனால் இன்று முதல் வேலை இருக்காது என அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.

    இந்த நிறுவனத்தில் லாரி டிரைவர், உதவியாளர், சுமை தூக்கும் தொழிலாளர்கள், சுமை இறக்கும் தொழிலாளர்கள் என 150-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். திடீரென்று வேறு நிறுவனத்துக்கு டெண்டர் மாறியது காரணமாக பணி வழங்கப்படாது என நினைத்து காஞ்சிபுரம் தமிழ்நாடு வாணிபக் கழக டாஸ்மாக் குடோன் முன்பு ஒரு மணி நேரத்துக்கு மேலாக தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த டாஸ்மாக் அதிகாரிகள் இன்று அவர்களுக்கு வழக்கம் போல் வேலை வழங்கியதால் அங்கிருந்து அனைவரும் கலைந்து சென்றனர்.

    • பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடத்தது
    • ஏராளானோர் கலந்து கொண்டனர்

    ஆற்காடு:

    தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் சங்கம் சார்பில் ஆற்காட்டில் தாலுகா அலுவலகம் எதிரே மக்கள் சந்திப்பு அரசு ஊழியர் விழிப்புணர்வு பிரச்சார ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்திற்கு சாலை பணியாளர் சங்கத்தின் உட்கோட்ட தலைவர் பன்னீர்செல் வம் தலைமை தாங்கினார். மாவட்டதலைவர் வெங்கடேசன். மாவட்ட செயலாளர் சிவசங்கரன், மாநில செயற்குழு உறுப் பினர் சேட்டு உள்பட பலர் முன்னிலை வகித்தனர். உட் கோட்ட செயலாளர் கோவிந்தராஜூலு வரவேற்றார்.

    சிறப்பு அழைப்பாளராக மாநில துணைப் பொதுச் செய லாளர் பெருமாள் கலந்து கொண்டு 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக அறிவித்திட வேண்டும்.

    இறந்த 300-க்கும் மேற்பட்ட சாலை பணியாளர்கள் குடும்பங்களில் அவர்களது வாரிசுகளுக்கு வேலை வழங்கிட வேண்டும். பொங்கல் போனஸ் ரூ.10 ஆயிரம் வழங்கிட வேண்டும். அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கு 2021 ஏப்ரல் முதல் வழங்க வேண்டிய ஓய்வூதிய பலன்களை வழங்கி அவர்களது குடும்பங்களை பாதுகாத்திட வேண்டும் என வலியுறுத்தி பேசினார். முடிவில் உட்கோட்ட பொருளாளர் சரவணன் நன்றி கூறினார்.

    • கட்டிடக்கலை தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பா ட்டம் நடந்தது.
    • கவுரவ தலைவர் அபிஷேகம் தொடங்கி வைத்தார்.

    புதுச்சேரி:

    புதுவை தட்டாஞ்சாவடி கட்டிட மற்றும் கட்டுமான தொழிலாளர் நல வாரியம் முன்பு ஏ.ஐ.டி.யூ.சி. கட்டிடக்கலை தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பா ட்டம் நடந்தது.

    ஆர்ப்பாட்டத்துக்கு சங்க தலைவர் விஸ்வநாதன், பொதுச்செயலாளர் சந்தி ரசேகரன், பொருளாளர் கந்தன் ஆகியோர் தலைமை வகித்தனர். நிர்வாகிகள் ஞானவேல், பாலன், ராஜகுமாரி, முத்துவேல், கோடீஸ்வரன், ராமு, அன்பழகன், பாலகிரு ஷ்ணன், நடராஜன், பிரபு முன்னிலை வகித்தனர்.

    போராட்டத்தை ஏ.ஐ.டி.யூ.சி. கவுரவ தலைவர் அபிஷேகம் தொடங்கி வைத்தார்.

    பொதுச்செயலாளர் சேதுசெல்வம், பொருளாளர் அந்தோணி வாழ்த்தி பேசினர். தினேஷ் பொன்னையா போராட்ட த்தை முடித்து வைத்தார். தொழிலாளர் துறை ஆணையர் பதவியை நிரப்ப வேண்டும்.

    நல வாரியத்தில் நிரந்தர பொறுப்பு அதிகாரியை நியமிக்க வேண்டும். தொழிலாளர் நலத்திட்ட ங்களை காலத்தோடு வழங்க வேண்டும். புதிதாக விண்ணப்பித்தவர்களை நல வாரியத்தில் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

    • சத்துணவு ஊழியர்க ளுக்கு குடும்ப பாதுகாப்பு டன் கூடிய சட்டப்பூர்வ ஓய்வூதியம் ரூ.6,750 வழங்க வேண்டும்.
    • ஆர்ப்பாட்டத்தில் 80-க்கும் மேற்பட்ட சத்துணவு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

    அரவேணு,

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி ஊராட்சி ஒன்றிய  அலுவலகம் முன்பு சத்துணவு சங்கம் சார்பில்

    ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கோத்தகிரி வட்டார தலைவர் சசிகலா தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் செல்லதுரை முன்னிலை வகித்தார். செயலாளர் ராமு வரவேற்றார். பின்னர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட சத்துணவு ஊழியர்கள் கூறியதாவது:-

    சத்துணவு ஊழியர்க ளுக்கு குடும்ப பாதுகாப்பு டன் கூடிய சட்டப்பூர்வ ஓய்வூதியம் ரூ.6,750 வழங்க

    வேண்டும். காலி பணியி டங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். ஓய்வு பெற்றவர்களுக்கு வழங்க வேண்டிய நிலு வைத் தொகை மற்றும் பணப்பலன்களை உடனடி யாக வழங்க வேண்டும். மருத்துவ காப்பீட்டு அட்டை

    மற்றும் உணவு மானி யத்தை மாதம் தோறும் 5-ந் தேதிக்குள் வழங்க

    வேண்டும். காலிப்பணியி டங்களில் சத்துணவு ஊழியர்களுக்கு 50 சத வீதம் ஒதுக்கீடு செய்து பதவி உயர்வு வழங்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியு றுத்தி கோஷங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் 80-க்கும் மேற்பட்ட சத்துணவு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

    • அக்னிபாத் திட்டத்தை திரும்ப பெற வேண்டும்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    வேலூர்:

    வேலூர் தலைமை தபால் நிலையம் அருகே ஏ. ஐ.டி.யு.சி ஆட்டோ தொழிலாளர் சங்கம் மற்றும் உழைக்கும் பெண்கள் சங்கம் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    ஏஐடியுசி மாவட்ட செயலாளர் சிம்புதேவன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் ஆல்வின், உழைக்கும் பெண்கள் மாவட்ட செயலாளர் சரோஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் உணவுப் பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி உயர்வை திரும்ப பெற வேண்டும். அக்னிபாத் திட்டத்தை திரும்ப பெற வேண்டும். கட்டணம் உயர்த்தியதை திரும்ப பெற வேண்டும்.

    மாணவி ஸ்ரீ மதியின் மரணத்தை கொலை வழக்காக பதிவு செய்து தலைமறைவாக உள்ள குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

    ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொதுச் செயலாளர் தேவதாஸ் கவுரவத் தலைவர் கோவிந்தராஜ், மாவட்ட தலைவர் சங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×